உதயன் (யாழ்ப்பாணம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உதயன் யாழ்ப்பாணத்தில் இருந்து நெடுங்காலம் வெளிவரும் முன்னணி நாளாந்த தமிழ்ப் பத்திரிகை ஆகும். மிகச் சிக்கலான அரசியல் சமூகப் பொருளாதாரச் சூழ்நிலையிலும் இது தொடர்ந்து வெளிவந்தது. தற்போது இப் பத்திரிகை தமிழ்த் தேசிய ஆதரவு நிலைப்பாட்டுக்காக பல்வேறு அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருந்தது.[1] இதன் கனடியத் துணைப்பதிப்பு யாழ். உதயன் என்பதாகும் (தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது).

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகை உதயன் இணைய வானொலியையும் நடத்தி வருகிறது.

ஊடக சுதந்திரத்துக்கான உயர் விருது 2013[தொகு]

பிரான்சின் எல்லைகளற்ற செய்தியாளர்கள் தன்னார்வ அமைப்பின் விருது வழங்கும் வைபவம், நவம்பர் 27, 2013

2013 நவம்பர் 27 அன்று பிரான்சின் தலைநகர் பரிசைத் தளமாகக் கொண்டு இயங்கும் எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு ஆண்டு தோறும் சர்வதேச ரீதியாக வழங்கிவரும் ஊடக சுதந்திரத்துக்கான விருதுகளில் மிக முக்கிய விருது உதயனுக்கு வழங்கப்பட்டுள்ளது. பிரான்சின் வடகிழக்குப் பிராந்தியமான ஸ்ரார்ஸ்பேர்க்கில் உலக ஊடகவியலாளர்கள் பெரும் எண்ணிக்கையில் திரண்டிருந்த ஒரு நிகழ்வில் வைத்து இந்த விருது உதயனுக்கு வழங்கப்பட்டது. உதயன் நிர்வாக இயக்குநர் ஈ. சரவணபவன், உதயன் பிரதம ஆசிரியர் ம. வ. கானமயில்நாதன் ஆகியோர் கூட்டாக இந்த விருதினைப் பெற்றுக் கொண்டனர்.[2][3]

28ஆம் ஆண்டு நிறைவு[தொகு]

27-11-2013 அன்று உதயன் நாளிதழ் தனது 28ஆம் ஆண்டு நிறைவினை கொண்டாடியதுடன் 29ஆம் ஆண்டிலும் காலடி எடுத்து வைத்தது. அன்றைய தினம் இரத்ததான நிகழ்வு, மரம் நடுகை மற்றும் வீர மறவர்களுக்கான அஞ்சலி என்பன அலுவலக வளாகத்தினுள் நடைபெற்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Sri Lankan journalist attacked 'with iron bars'
  2. ஊடக சுதந்திரத்துக்கான உயர் விருது உதயனுக்கு, உதயன், நவம்பர் 28, 2013
  3. "The 15th Reporters Without Borders – Fondation de France prize was presented in Paris on Tuesday, 12 டிசம்பர் 2006". எல்லைகளற்ற செய்தியாளர்கள் (13 டிசம்பர் 2006).

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உதயன்_(யாழ்ப்பாணம்)&oldid=1705034" இருந்து மீள்விக்கப்பட்டது