உண்மைநிலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

உண்மைநிலை (Reality) என்பது உண்மையில் இருக்கும் நிலையைக் குறிக்கும். பரந்த பொருளில் இது, பார்க்கக்கூடிய, பார்க்கமுடியாத, உணரக்கூடிய, உணரமுடியாத ஆனால் இருக்கும் எல்லாவற்றையுமே குறிக்கும். ஐரோப்பிய மெய்யியல் நோக்கில் உண்மைநிலை என்பது "வெறுமை" என்னும் கருத்துருவையும் உள்ளடக்கும் ஆயினும், பகுப்பாய்வு மெய்யியல் இதனை ஏற்றுக் கொள்வதில்லை. மேற்கத்திய மெய்யியல் உண்மைநிலை என்பதைப் பல மட்டங்களில் நோக்குகிறது. இவை தற்சார்பு (subjective) உண்மைநிலையில் இருந்து கூடிய கடுமையான தோற்றப்பாட்டு உண்மைநிலை (phenomenological reality), உண்மை (truth), fact, மெய்க்கோள் (axiom) போன்ற பலவகையான கருத்துருக்களாக அமைகின்றன.

தோற்றப்பாட்டு உண்மைநிலை[தொகு]

தனி ஒருவருடைய அனுபவங்கள், அறியும் ஆர்வம், ஆராய்ச்சி, தேர்வு ஆகியவற்றினூடு ஒரு நிகழ்வைப் புரிந்துகொள்வதன் மூலம் தோற்றும் உண்மைநிலை தோற்றப்பாட்டு உண்மைநிலை எனப்படுகிறது. இந்த வரையறை சில சமயங்களில் பிற வகையான உண்மை நிலைகளுக்கும் பொருந்தக் கூடியது ஆயினும், பல வேளைகளில் இது தனித்தன்மையானது. ஒருவருக்கு உண்மைநிலையாகத் தோன்றுவது இன்னொருவருக்கு அவ்வாறு தோன்றாமல் அல்லது ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கலாம். ஆன்மீகம் சார்ந்த உண்மைநிலைகள் பெரும்பாலும் இவ்வகையைச் சார்ந்தவை. தோற்றப்பாட்டியல் நோக்கில் தோற்றப்பாட்டளவில் உண்மையானவை உண்மைநிலை சார்ந்தனவாகவும், "இல்லாதவை" எவையும் உண்மைநிலை சாராதனவாகவும் கொள்ளப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உண்மைநிலை&oldid=1351997" இருந்து மீள்விக்கப்பட்டது