இழைய வளர்ப்பு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இழைய வளர்ப்பு என்பது உயிரணு அல்லது இழையமானது உயிரினத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு வளர்த்தெடுக்கப்படும் ஒரு முறையாகும். இவ்வாறான தொழில்நுட்பத்திற்கு ஒரு திரவ, அல்லது பகுதி-திண்ம அல்லது திண்ம வளர்ப்பூடகம் ஒன்று அவசியமாகின்றது. இந்த வளர்ப்பூடகமானது மரக்கறி, இறைச்சி வகைகளிலிருந்து தயாரிக்கப்படும் குழம்பு போன்ற பதார்த்தமாகவோ (broth), அல்லது கடற்பாசியிலிருந்து பெறப்படும் அகார் அல்லது ஏகார் போன்ற பதார்த்தமாகவோ இருக்கும். வளர்க்கப்பட வேண்டிய உயிரணு அல்லது இழையத்தின் வளர்ச்சிக்கு தேவையான பதார்த்தங்களை இந்த வளர்ப்பூடகம் வழங்கக் கூடியதாக இருக்க வேண்டும். இழையவளர்ப்பு, 'உயிரணு வளர்ப்பு' ஆகிய ஒரு சொற்களும் ஒன்றுக்கொன்று மாற்றீடாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பொதுவாக இழைய வளர்ப்பு என்பது ஒரு பல்கல உயிரினத்திலிருந்து பெறப்படும் இழையம் ஒன்றின் கலங்களை செயற்கைக் கல முறையில் பெருக்கம் செய்தல் ஆகும்.