உள்ளடக்கத்துக்குச் செல்

உயிரணு வளர்ப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Epithelial cells in culture, stained for keratin (red) and DNA (green)

உயிரணு வளர்ப்பு (Cell culture) என்பது ஒரு உயிரினத்திலிருந்து பிரித்தெடுக்கப்படும் உயிரணுவை, உயிரணுவானது வளரக் கூடிய செயற்கையான கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலையில் வைத்து பராமரித்து, வளர்த்து அது பல்கிப்பெருக உதவும் செயல்முறையாகும். பொதுவாக பல் உயிரணு (multicellular) விலங்குகளில் இருந்து பெறப்படும் உயிரணுவே இவ்வாறான வளர்ப்பு முறைக்கு உட்படுத்தப்படுகிறது.

19 ஆம் நூற்றாண்டிலேயே, மூல இழையத்திலிருந்து பிரித்தெடுக்கப்படும் உயிரணுவை செயற்கையாக தொடர்ந்து வளர்த்து எடுக்கலாம் என்னும் கோட்பாடு தோன்றியிருந்தாலும்[1], 1900 ஆம் ஆண்டுகளிலேயே இவ்வளர்ப்பு முறை பொதுவான பரிசோதனைக் கூட தொழில்நுட்பமாக முன்னேற்றமடைந்தது[2].

வரலாறு[தொகு]

19 ஆம் நூற்றாண்டில் ஆங்கில உடற்றொழிலியலாளரான சிட்னி ரிங்கர் (Sydney Ringer) என்பவர், உடலுக்கு வெளியே எடுக்கப்படும் இதயத்தை இயங்கச் செய்யவல்ல சோடியம், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம் ஆகிய மூலகங்களின் குளோரைட்டைக் கொண்ட உப்புக் கரைசல் ஒன்றை உருவாக்கினார்[1]. 1885 இல் வில்கம் ரொக்சு (Wilhelm Roux) என்பவர் கோழியின் முளையத்திலிருந்து பிரிதெடுத்த ஒரு பகுதியை, சூடான உப்புக் கரைசலில் பலநாட்கள் உயிருள்ள நிலையில் வைத்திருந்ததன் மூலம் இழைய வளர்ப்பு (tissue culture) கொள்கையை உருவாக்கினார்[3]. Johns Hopkins Medical School இலும், பின்னர் Yale University இலும் தொழில்புரிந்த றோசு கிரான்வில்லே கரிசன் (Ross Granville Harrison) என்பவர் இழைய வளர்ப்புக்கான செயல்முறை வழிகளை நிறுவி, தனது பரிசோதனை முடிவுகளை, 1907–1910 ஆண்டுகளில் வெளியிட்டார்[4]. 1940ஆம், 1950ஆம் ஆண்டுகளில், வைரசுக்கள் தொடர்பான ஆராய்ச்சியில், இந்த உயிரணு வளர்ப்பானது குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்தது. தடுப்பு மருந்துகள் உற்பத்திக்குத் தேவையான தூய வைரசுக்களை வளர்த்தெடுக்க இந்த உயிரணு வளர்ப்பு முறை பயன்படுத்தப்பட்டது. மிகப் பெரிய அளவில் இம்முறையால் தயாரிக்கப்பட்ட தடுப்பு மருந்து 'போலியோ' என்னும் ஆங்கிலப் பெயரால் பரவலாக அழைக்கப்படும் இளம்பிள்ளை வாதம் என்னும் நோய்க்கு எதிரான தடுப்பு மருந்து ஆகும். This vaccine was made possible by the cell culture research of இளம்பிள்ளை வாதம் என்னும் நோயை உருவாக்கும் வைரசை குரங்கின் சிறிநீரக இழையத்தில் வளர்த்தெடுக்கும் முறைக்காக நோபல் பரிசை வென்ற John Franklin Enders, Thomas Huckle Weller, Frederick Chapman Robbins, ஆகியோரது இழைய வளர்ப்பு தொழில்நுட்ப முறையே Salk என அழைக்கப்படும் இளம்பிள்ளை வாத தடுப்பு மருந்தை உருவாக்கும் சாத்தியத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

உயிரணு வளர்ப்பின் உபயோகம்[தொகு]

விலங்கு உயிரணு வழித்தடங்களை (cell lines) உருவாக்குவதே வைரசு தடுப்பு மருந்துகள் மற்றும் பல உயிரித் தொழில்நுட்ப முறையால் உருவாக்கும் பொருட்களை மிக அதிகளவில் பரவலாக தயாரிப்பதற்கான அடிப்படையாகும்.[5] துணை மருந்துப் பொருட்களும் (adjuvants) இம்முறையினால் தயாரிக்கப்படுகிறது[6].

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. ""Some landmarks in the development of tissue and cell culture."". பார்க்கப்பட்ட நாள் 2006-04-19.
  2. ""Cell Culture"". பார்க்கப்பட்ட நாள் 2006-04-19.
  3. ""Animals and alternatives in testing."". Archived from the original on 2006-02-25. பார்க்கப்பட்ட நாள் 2006-04-19.
  4. Schiff, Judith Ann. ""An unsung hero of medical research."". Archived from the original on 2012-11-14. பார்க்கப்பட்ட நாள் 2006-04-19. Yale Alumni Magazine, February 2002.
  5. Gao W, Soloff AC, Lu X, Montecalvo A, Nguyen DC, Matsuoka Y, Robbins PD, Swayne DE, Donis RO, Katz JM, Barratt-Boyes SM, Gambotto A. (February 2006). "Protection of mice and poultry from lethal H5N1 avian influenza virus through adenovirus-based immunization". Journal of Virology (United States: American Society for Microbiology) 80 (4): 1959–1964. doi:10.1128/JVI.80.4.1959-1964.2006. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-538X. http://jvi.asm.org/cgi/content/abstract/80/4/1959. பார்த்த நாள்: 2010-01-31. 
  6. "NIAID Taps Chiron to Develop Vaccine Against H9N2 Avian Influenza". National Institute of Allergy and Infectious Diseases (NIAID). 2004-08-17. Archived from the original on 2010-03-06. பார்க்கப்பட்ட நாள் 2010-01-31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உயிரணு_வளர்ப்பு&oldid=3621557" இலிருந்து மீள்விக்கப்பட்டது