இளங்கலை கணக்கியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இளங்கலை கணக்கியல் (Bachelor of Accountancy) இளங்கலை கணக்குப்பதிவு என்றும் அழைக்கப்படுகிறது, இது பல நாடுகளில் கணக்கியலில் முதன்மைக் கல்விப் பட்டமாகும் , மேலும் இது ஒரு தொழில்முறை கணக்காளர் பயிற்சிக்கான அங்கீகரிக்கப்பட்ட [1] இளங்கலைப் பட்டம் ஆகும். இந்தப் படிப்பு B.Acy., B.Acc., or B. Accty எனச் சுருக்கப்படுகிறது.

நிதிக் கணக்கியல், மேலாண்மைக் கணக்கியல், தணிக்கை மற்றும் வரிவிதிப்பு ஆகியவற்றில் தொழில்முறை பயிற்சிக்கு (பெரும்பாலும் பெரிய அளவில் ) போதுமான கலைத்திட்டம் [2] தேவைப்படுகிறது.இதற்கான பாடத்திட்டத்தில் வணிகச் சட்டம் மற்றும் பொருளாதாரம், மற்றும் மேலாண்மைக் கோட்பாடு மற்றும் வணிகக் கணிதம் மற்றும் வணிகப் புள்ளியியல் ஆகியவற்றை உள்ளடக்கிய பாடநெறி அடங்கும். இதுவும் இளங்கலை வணிகவியலும் வேறானவை.இந்தப் பிரிவில் சில திட்டங்கள் வரி கணக்கியல், தணிக்கை அல்லது தடயவியல் கணக்கியல் போன்றவற்றில் நிபுணத்துவம் பெற அனுமதிக்கின்றன.

இது ஒரு தொழில்முறைப் பட்டப்படிப்பாகும்.அமெரிக்காவில், இது நான்கு வருட இளங்கலை பட்டப்படிப்பாக உள்ளது. சிங்கப்பூர் போன்ற உலகின் பிற பகுதிகளில், இது மூன்று ஆண்டு இளங்கலைப் பட்டப்படிப்பாக இருக்கும். மால்டாவில், இளங்கலை வணிகவியலில்தகுதி பெற்ற பிறகு, முந்தைய பாடத்திட்டத்தில் விதிவிலக்கான மதிப்பெண்களைப் பெறும் மாணவர்களுக்கு மட்டுமே இது இரண்டு வருட படிப்பாக வழங்கப்படுகிறது. தென்னாப்பிரிக்காவில் உள்ள பெரும்பாலான பொதுப் பல்கலைக்கழகங்கள் பட்டம் அல்லது கௌரவ பட்டமாக வழங்குகிறது.

இளங்கலைப் பட்டம் முடித்த பிறகு, மாணவர்கள் பொதுவாக தொழில்துறையில் கணக்காளர்களாகப் பணிபுரிகின்றனர்,அல்லது தொழில்முறை கணக்காளர் நிலையைத் தொடர்கின்றனர். அவர்களது பட்டம் அங்கீகரிக்கப்பட்டால்[3] சான்றளிக்கப்பட்ட பொதுக் கணக்கர் அல்லது பட்டயக் கணக்கறிஞர்களாக (அல்லது பிற) பதவிகளைத் தொடர்வார்கள்.

சான்றுகள்[தொகு]

  1. How to Become an Accountant or Auditor. Bureau of Labor Statistics. http://www.bls.gov/ooh/Business-and-Financial/Accountants-and-auditors.htm#tab-4. 
  2. See, e.g.: Bachelor of Accounting, Program Structure, Western Sydney University; Bachelor of Accounting Sciences, Curriculum, University of South Africa.
  3. See, e.g.: How to become a Chartered Accountant, Chartered Accountants Australia and New Zealand; How to become a Chartered Accountant, South African Institute of Chartered Accountants.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இளங்கலை_கணக்கியல்&oldid=3727336" இலிருந்து மீள்விக்கப்பட்டது