நிதிக் கணக்கீடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிதிக் கணக்கியல் (Financial accounting) கணக்கியல்) என்பது ஒரு வணிகத்துடன் தொடர்புடைய நிதி பரிவர்த்தனைகளின் சுருக்கம், பகுப்பாய்வு மற்றும் அறிக்கையிடலுடன் தொடர்புடைய கணக்கியல் துறையாகும். [1] பொது பயன்பாட்டிற்கு கிடைக்கக்கூடிய நிதிநிலை அறிக்கைகளை தயாரிப்பதும் இதில் அடங்கும். பங்குதாரர்கள், வினியோகிப்பாளர்கள், வங்கிகள், ஊழியர்கள், அரசு நிறுவனங்கள், வணிக உரிமையாளர்கள் மற்றும் பிற பங்குதாரர்கள் முடிவெடுக்கும் நோக்கங்களுக்காக இத்தகைய தகவல்களைப் பெற ஆர்வமுள்ளவர்களுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.

பொது ஏற்புள கணக்குவைப்பு நெறிமுறைகள்(GAAP) என்பது பயன்படுத்தப்படும் நிதிக் கணக்கியலுக்கான வழிகாட்டுதல்களின் நிலையான  கட்டமைப்பாகும். பதிவுசெய்தல், சுருக்கமாக நிதிநிலை அறிக்கைகளைத் தயாரிப்பது, கணக்காளர்கள் பின்பற்றும் தரநிலைகள், மரபுகள், விதிகள்  முதலியவை இதில் அடங்கும். நிறுவனத்திற்கு வெளியே உள்ளவர்களுக்கும் அல்லது நிறுவனத்தின் அன்றாட இயக்கத்தில் ஈடுபடாதவர்களுக்கும் கணக்கியல் தகவல்களைத் தயாரிக்க   பயன்படுத்தப்படுகிறது. இது போன்று நிர்வாக கணக்கீடு வணிகத்தை நிர்வகிப்பதற்கான முடிவுகளை  மேலாளர்களுக்கு எடுக்க  உதவ கணக்கியல் தகவலை வழங்குகிறது.

அடிப்படை பண்புகள்[தொகு]

பொருத்தம்[தொகு]

இங்குப் பொருத்தம் என்பது அதன் பயனர்களின் முடிவைப் பாதிக்கும் நிதித் தகவலின் திறன். நிதி அறிக்கைகளின் அடிப்படையில்  பயனர்களின் பொருளாதார முடிவுகளைத் தகவல்களின்  புறக்கணிப்பு அல்லது  தகவல்களைத் தவறாக மதிப்பிடுவது முதலியவை பொருளாகக் கருதப்படுகிறது. எந்த ஒரு தகவலும் புறக்கணிக்கப் பட்டதாகவோ அல்லது தவறானதாகவோ  இருத்தல் கூடாது.

சரியான தகவல்கள்[தொகு]

பரிவர்த்தனைகளின் உண்மையான தகவல்கள் சரியாகக் கணக்கிடப்பட்டு நிதிநிலை அறிக்கைகளில் தெரிவிக்கப்பட வேண்டும். நடைபெற்ற  பரிவர்த்தனையில். சொற்களும் பணமதிப்பீடும் ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையவையாய் இருத்தல் வேண்டும்.  ஒருபோதும் பொருத்தம் இல்லாது தகவல்கள் இருத்தல் கூடாது.

அடிப்படை தர மேம்பாடு[தொகு]

சரி பார்ப்பு[தொகு]

அனைத்து பரிவர்த்தனைகளிலும் கட்டாயம் அது சார்ந்த ஆவணம் இடம் பெற்று இருக்க வேண்டும். இது இந்தக் கணக்கீடிற்கு மட்டுமல்ல அனைத்து கணக்கீடுகளுக்கும் பொருந்தும். இவ்வாறு அனைத்துப் பரிவர்த்தனைகளிலும் தகுந்த ஆவணங்கள் இடம்பெற்று இருப்பதால் எந்த நேரத்திலும் சரிபார்த்துக் கொள்ளலாம்.

புரிந்துகொள்ளும் வகையில் இருத்தல்[தொகு]

அனைத்துப் பரிவர்த்தனை சார்ந்த தகவல்களும் கணக்கியல் தகவல்களும் எளிதில் அந்தத் தகவலையோ பரிவர்த்தனையையோ   சரிபார்ப்புச் செய்பவருக்குப் புரியும் வகையில் இடம் பெற்று இருக்க வேண்டும்.

கால அளவு[தொகு]

கணக்கீட்டுத் தகவல்களைப் பயன்படுத்துவோருக்கு அவர் முடிவு எடுக்கும் முன்பே காண்பிக்கப்பட்டு இருக்க வேண்டும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Financial Accounting - Definition from KWHS". The Wharton School. 28 February 2011. பார்க்கப்பட்ட நாள் 13 July 2018.
  1. நிதிக் கணக்கீடு - ஆங்கிலம
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிதிக்_கணக்கீடு&oldid=3023677" இலிருந்து மீள்விக்கப்பட்டது