இலங்கை பச்சை புறா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலங்கை பச்சை புறா
ஆண் புறா
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
கொலும்பிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
தெரெரான்
இனம்:
தெ. பம்பாதோரா
இருசொற் பெயரீடு
தெரெரான் பம்பாதோரா
ஜெமிலின், 1789

இலங்கை பச்சைப் புறா (Sri Lanka green pigeon) அல்லது சிலோன் பச்சைப் புறா (தெரெரான் பம்பாதோரா) என்பது தெரெரான் பேரினப் புறா ஆகும். இலங்கையில் சிங்கள மொழியில் இந்தப் புறாவும் பிற பச்சைப் புறாக்களும் படா கோயா என்று அழைக்கப்படுகின்றன.[2] இது இலங்கையின் காடுகளில் காணப்படுகிறது. பல வகைப்பாட்டியலாளர் இதனைச் சாம்பல் நெற்றி புறா குழுவிலிருந்து தனி சிற்றினமாகப் பிரித்தது வைத்துள்ளனர்.

நடத்தை[தொகு]

இலங்கை பச்சைப் புறா பொதுவாக தனித்தனியாகவோ அல்லது சிறு குழுக்களாகவோ காணப்படும். இது வேகமாகவும், நேராகவும் பறக்கும். வழக்கமான இறக்கை அசைவுகளுடன் அவ்வப்போது விரைவாக அசைத்துப் பரக்கின்றது. இது பலவகையான தாவரங்களின் விதைகளையும் பழங்களையும் உண்ணும். மரத்தில் குச்சிகளைக் கொண்டு கூடு கட்டி இரண்டு வெள்ளை நிற முட்டைகளை இடுகிறது .

மேற்கோள்கள்[தொகு]

  • Collar, N.J. 2011. Species limits in some Philippine birds including the Greater Flameback Chrysocolaptes lucidus. Forktail number 27: 29–38.
  • Rasmussen, P.C., and J.C. Anderton. 2005. Birds of South Asia: the Ripley guide. Lynx Edicions and Smithsonian Institution.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கை_பச்சை_புறா&oldid=3773591" இலிருந்து மீள்விக்கப்பட்டது