இலங்கை தங்க முதுகுத் தவளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலங்கை தங்க முதுகுத் தவளை
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
இராணிடே
பேரினம்:
இனம்:
இ. செரெண்டிபி
இருசொற் பெயரீடு
இந்தோசில்விரானா செரெண்டிபி
(பிஜீ மற்றும் பலர், 2014)
வேறு பெயர்கள் [2]

கையலூரானா செரெண்டிபி பிஜீ மற்றும் பலர், 2014

இந்தோசில்விரனா செரெண்டிபி (Indosylvirana serendipi) எனும் இலங்கை தங்க முதுகுத் தவளை, இராணிடே குடும்பத்தில் உள்ள ஒரு தவளை சிற்றினமாகும். இது இலங்கையில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.

விளக்கம்[தொகு]

உடல் மெலிந்து சிறிய தலையினைக் கொண்டது. செவிப்பறை மேல் மடிப்பு இல்லை. அடிமூட்டு முடிச்சுகள் கால்விரல்களில் முதன்மையாக காணப்படும். மூன்றாவது விரலின் வலையமைப்பு வெளியில் உள்ள வட்டு வரை நீண்டுள்ளது. லோரியல் பகுதி ஆழமானது. வோமரின் முகடு உள்ளது. தோலின் விளிம்பு வரை உள்ளது. முதுகு செம்-பழுப்பு நிறத்துடன் கருப்பு கலந்து காணப்படும். செவிப்பறைப் பகுதி அடர் பழுப்பு நிறத்திலானது. வெள்ளை பட்டையுடன் கூடிய மேல் உதடு, தங்க நிறப் புள்ளிகள் மற்றும் கருமையான திட்டுகளுடன் கூடிய கருவிழியானது சிவப்பு கலந்த பழுப்பு நிறத்தில் காணப்படும். பக்கவாட்டுகள் வெளிர் மஞ்சள் கலந்த சாம்பல் நிறத்திலானது. சாம்பல் நிற குறுக்கு பட்டைகளுடன் வெளிர் பழுப்பு நிற மூட்டுகள் கொண்டது. வயிற்றுப் பகுதி வெண்மையானது. தொண்டை மற்றும் மூட்டுகள் வெளிர் சாம்பல் நிறத்திலானது. ஆண் தவளையில் கலவித்திட்டு உள்ளது.[3]

பரவல்[தொகு]

இலங்கை தங்க முதுகுத் தவளை இலங்கையில் சிங்கராஜா மழைக்காடுகளின் குடவா அராவிலில் காணப்படுகின்றன.[4]

சூழலியல்[தொகு]

இலங்கை தங்க முதுகுத் தவளையின் இயற்கை வாழிடம் வெப்பமண்டல தாழ் நிலப் பசுமையான காடுகள், நீரோடைகளின் கரைகள் மற்றும் சதுப்புநிலங்கள் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. IUCN SSC Amphibian Specialist Group (2004). "Indosylvirana serendipi". IUCN Red List of Threatened Species 2020: e.T73788858A73788862. doi:10.2305/IUCN.UK.2020-3.RLTS.T73788858A73788862.en. https://www.iucnredlist.org/species/73788858/73788862. பார்த்த நாள்: 19 May 2023. 
  2. "Indosylvirana serendipi (Biju, Garg, Mahony, Wijayathilaka, Senevirathne, and Meegaskumbura, 2014)". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-10-05.
  3. "DNA Barcoding, Phylogeny and Systematics of Golden-backed Frogs (Hylarana, Ranidae) of the Western Ghats-Sri Lanka Biodiversity Hotspot, with the Description of Seven New Species". Novataxa. 30 October 2014. பார்க்கப்பட்ட நாள் 3 February 2019.
  4. "Geographic distribution of two species of the Hylarana temporalis".