உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கையில் கல்வி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலங்கை கல்வி
கல்வி அமைச்சு
உயர் கல்வி அமைச்சு
தேசிய கல்வி நிதி (2012)
Budgetமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.7%[1]
பொதுவான தகவல்கள்
முக்கியமான மொழிகள்சிங்களம், தமிழ், ஆங்கிலம்
அமைப்பு வகைமாகாண வாரியாக
கல்வியறிவு (2012)
மொத்தம்98.1
ஆண்97.7
பெண்98.6
Enrollment
மொத்தம்350,000
Secondary200,000
Post Secondary14,000 (10-12%)

இலங்கை 2500 ஆண்டுகளுக்கு முன் நாகரிகமடையத் தொடங்கியதிலிருந்தே கல்விக்கு முக்கியத்துவமளித்து வருகிறது. இலங்கையின் சுதேசிகள் தத்தமது நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், வழிபாட்டு முறைகள், புராணக்கதைகள் முதலானவற்றினூடான முறைசாராக் கல்வி முறைகளையும் சாத்திர சம்பிரதாயங்கள், சடங்காச்சாரங்கள், மருத்துவ முறைகளையும் கொண்டவர்களாயிருந்தனர்.

விசயனின் வருகையின் பின் இலங்கையில் கல்வி

[தொகு]

விசயனின் வருகையின் பின் இந்தியாவின் வழிபாட்டு முறைகள் இலங்கையில் பரவியது. பிராமணர்கள் இந்தியாவிலிருந்து அழைக்கப்பட்டு குருகுலக்கல்வி முறைகள் ஏற்படுத்தப்பட்டன. சில தொழில் முறைகள் குலத்தொழில்களாகக் கற்பிக்கப்பட்டன.

எ.கா:

  • சிற்பம் செதுக்குதல்
  • சித்திரம் வரைதல்
  • மட்பாண்டம் வனைதல்
  • நெசவு நெய்தல்
  • முடிதிருத்துதல்

பௌத்தக் கல்வி

[தொகு]

இலங்கையின் பௌத்த சமயப் போதனைகள் மகிந்தனின் வருகையுடன் ஆரம்பமாகியது. புத்த மதத்தை முழுதாக ஏற்றுக் கொண்ட மன்னன் தேவநம்பிய தீசன் மகிந்த தேரருக்கு மகாமேக நந்தவனத்தினை நன்கொடையாக வழங்கினார். முதலாவது பௌத்தக் கல்வி நிலையம் இவ்விடத்தில் அமைக்கப்பட்டது.

அரச குருகுலங்களில் பிராமணர்களுக்கு வளங்கப்பட்ட பணி பிக்குமார்களின் கைக்கு மாறியது.

பிரிவேனாக்களின் தோற்றம்

[தொகு]

பிக்குமார் கல்வி கற்பதற்காக பிரிவேனாக்கள் அமைக்கப்பட்டன. பின்னர் இப் பிரிவேனாக்கள் பொது மக்களுக்கும் கல்வியை வழங்கியது. மக்களுக்கு சமயத்தையும் அதனூடாகக் கல்வியையும் போதிப்பது பிக்குகளின் கடமையாகக் கருதப்பட்டது.

கிராமம் தோறும் பன்சல அமைக்கப்பட்டது. இப்பன்சல ஆரம்பக்கல்வியை வழங்கியது. பிரிவேனாக்கள் இடைநிலைக் கல்வியை வழங்கியது. உயர்கல்வியை மகாவிகாரைகள் வழங்கின. மகாவிகாரைகள் தங்குமிடம்,நூலகம் முதலான வசதிகளுடன் காணப்பட்டன. அக்காலத்தில் அனுராதபுரம் மகாவிகாரை பிரதான கல்வி நிலையமாகக் காணப்பட்டது

அந்நியர் ஆட்சியில் இலங்கையில் கல்வி முறை

[தொகு]

போத்துக்கீசர் காலக் கல்வி

[தொகு]

போத்துக்கீசர் இலங்கைக்கு 1505 இல் வந்தனர். 1553 இல் ஆட்சிப் பொறுப்பேற்ற தர்மபாலன் 1556 இல் 'டொன்யூவான்' எனத் தன் பெயரை மாற்றிக் கொண்டு கத்தோலிக்கராக ஞானத்தானம் பெற்றுக்கொண்டான். இதனால் போத்துக்கீசரின் செல்வாக்கு உயர்வடைந்தது.

போத்துக்கீசர் கல்விக்கான பொறுப்புகளை கத்தோலிக்க மதகுருக்களிடம் ஒப்படைத்திருந்தர். பிரான்சிஸ்கன், யேசுயிட்சு, ஓகஸ்டீனியன், டெமினிக்கன் ஆகிய நான்கு சமயக்குழுக்கள் இதற்காகச் செயற்பட்டன.

போத்துக்கீசக் கல்வி நிறுவனங்கள்

  • பரிஸ் பாடசாலை அல்லது கோயில்பற்றுப்பாசாலை
  • ஆரம்பப் பாடசாலை
  • கல்லூரிகள்
  • யேசுயிட்சு கல்லூரிகள்
  • அனாதைப்பாடசாலைகள்

ஒல்லாந்தர் காலக் கல்வி முறை(கி.பி 1658-1796)

[தொகு]

ஒல்லாந்தர் காலத்தில் கல்விக்கான முழுப் பொறுப்பையும் அரசே செயற்படுத்தியது. கட்டாய கல்வி அமுல்படுத்தப்பட்டது. பாடசாலைக்கு சமூகமளிக்காத பிள்ளைகளின் பெற்றேரர் தண்டிக்கப்பபட்டார்கள்.பதினைந்து வயதுவரைக் கட்டாயக் கல்வி பின் நான்கு வருடங்கள் வளர்ந்தோர் கல்வி எனும் முறை காணப்பட்டது.

ஒல்லாந்தரின் கல்வி நிறுவனங்கள்

  • பரிஸ் பாடசாலை
  • தனியார் பாடசாலை
  • செமினறி பாடசாலை
  • நோமல் பாடசாலை
  • சிஸ்கமிர் அல்லது அறமென்கசுப் பாடசாலை
  • லேடன் பல்கலைக்கழகத்துடன் இணைந்த உயர்கல்வி

பிரித்தானியரின் கல்விமுறை (1798-1930)

[தொகு]

அரசின் நேரடிப் பங்கேற்புடன் மிசனறிகள் கல்வி வளர்ச்சியில் பங்காற்றின.பல்வேறு மிசனறிகள் தொழிற்பட்டன. புதிய பாடசாலைகள் உருவாக்கப்பட்டன.பாடநூல்கள் அச்சிடப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. திறமையான மாணவர்களுக்கு கொழும்பு அக்கடமியில் கற்க வாய்ப்புகள் அளிக்கப்பட்டன.

இலங்கையில் செயற்பட்ட மிசனறிக் குழுக்கள்

மிசனறிக் குழு வருகைதந்த ஆண்டு செயற்பாடும் பிரதேசமும்
லண்டன் மிசனறிக்குழு 1805 காலி, மாத்தறை, யாழ்ப்பாணம்
பப்டிஸ்ட் மிசனறிக் குழு 1812 கொழும்பில் பாடசாலை, சுதேச, ஆங்கில மொழிப் பாடசாலை
வெஸ்லியன் மிசனறிக்குழு 1804 சுதேச, ஆங்கில மொழிப் பாடசாலை,வெஸ்லியன் அகடமி(காலி, மாத்தறை, யாழ்ப்பாணம்,கொழும்பு, நீர்கொழும்பு ,களுத்துறை)
அமெரிக்கன் மிசனறிக் குழு 1816 இலவசக்கல்வி,விடுதிப் பாடசாலை
கிறித்தவத் திருச்சபைகுழு 1818 கிராமப் பாடசாலை, விடுதிப் பாடசாலைகளின் உருவாக்கம், மலையகப் பிரதேசங்களுக்கு முக்கியத்துவம், ஆசிரியர் பயிற்சிக்கு கோட்டையில் கிருத்தவக் கல்லூரி

இலங்கையின் சுதேசக் கல்வி

[தொகு]

1930 களில் இலங்கையில் இலவசக் கல்வி முறைக்கான அடித்தளங்கள் இடப்பட்டது முதல் இங்கு நவீன கல்வியுகம் தோன்றியது எனலாம்.

இலங்கையின் கல்விப் படிநிலைகள்

[தொகு]

இலங்கையின் கல்வி முறையானது மூன்று பிரதான படிநிலைகளைக் கொண்டது.

பொதுக் கல்வி

முன்பள்ளிக் கல்வி
ஆரம்பக் கல்வி
கனிட்ட இடைநிலை
சிரேட்ட இடைநிலை

மூன்றாம் நிலை மற்றும் பல்கலைக் கழகக் கல்வி

தொழிற்கல்வி

  1. "Public spending on education, total (% of GDP)". The World Bank.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கையில்_கல்வி&oldid=3326992" இலிருந்து மீள்விக்கப்பட்டது