தர்மபாலன்
Appearance
தர்மபாலன் | |
---|---|
காமரூப பேரரசன் | |
அரசமரபு | பால வம்சம் |
தர்மபாலன் (Dharma Pala) (1035-1060) காமரூப இராச்சியத்தின் பால வம்சத்தின் (கி.பி.900-1100) ஆட்சியாளர் ஆவார். [1] ஹர்ஷபாலனின் மகனான தர்மபாலன், கோனாமுக், சுபங்கரபதக மானியம், புஷ்பபாத்ரா என மூன்று செப்புத் தகடுகளை விட்டுச் சென்றான். முதல் மற்றும் இரண்டாவது பட்டயங்கள் ஒரே கவிஞரால் இயற்றப்பட்டன. ஏனெனில் அவை ஒரே மாதிரியான மொழியில் எழுதப்படட்டு, தர்மபாலனால் வெளியிடப்பட்டன கோனாமுக் சாசனம் இவரது ஆட்சியின் முதல் ஆண்டில் வெளியிடப்பட்டது. [2]