இரா. மணிகண்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இரா. மணிகண்டன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர், கவிஞர். தேனி மாவட்டம் சின்னமனூரில் பிறந்த இவர் சமூகவியலில் முதுகலைப் பட்டமும், ஆற்றுப்படுத்தல் மற்றும் ஆலோசனை வழங்கலில் முதுகலைப் பட்டயமும் பெற்றவர். "யுவபாரதி", "இளவாணன்", "அன்பின் வசீகரன்" போன்ற புனைப் பெயர்களிலும் கவிதைகள், கட்டுரைகள் போன்றவற்றை தமிழில் வெளியாகும் பல அச்சிதழ்களில் எழுதியுள்ளார். சென்னை மற்றும் புதுவை வானொலியில் இவரது கவிதைகள் ஒலிபரப்பப்பட்டுள்ளன. தேனி முற்போக்கு கலை இலக்கிய மேடையின் 2017ஆம் ஆண்டுக்கான மக்கள் கவி இன்குலாப் படைப்பாக்க மேன்மை விருது பெற்றுள்ளார்.

வெளியான நூல்கள்[தொகு]

  1. நீர்வாசம் - கவிதைத் தொகுப்பு (ஆகஸ்டு, 2006)
  2. மண்ணூறப் பெய்த மழை - கட்டுரைத் தொகுப்பு

(பிப்ரவரி, 2017)

  1. சுவரில் ஆடும் ஊமை ஓவியம் - கவிதைத் தொகுப்பு

(ஜனவரி, 2019)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரா._மணிகண்டன்&oldid=2965064" இருந்து மீள்விக்கப்பட்டது