இராயப்பனூர்

ஆள்கூறுகள்: 11°36′17″N 78°48′49″E / 11.604722°N 78.813611°E / 11.604722; 78.813611
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராயப்பனூர்
—  கிராமம்  —
இராயப்பனூர்
இருப்பிடம்: இராயப்பனூர்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 11°36′17″N 78°48′49″E / 11.604722°N 78.813611°E / 11.604722; 78.813611
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கள்ளக்குறிச்சி
வட்டம் சின்னசேலம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
ஊராட்சி மன்ற தலைவர்
மக்கள் தொகை 3,688 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்


இராயப்பனூர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கிராமமாகும். இந்த ஊர் கள்ளக்குறிச்சி தொகுதியில் அமைந்துள்ளது. மேலும் மேல்நாரியப்பனூர் அஞ்சல், சின்னசேலம் வட்டத்தைச் சேர்ந்தது.

அருகில் உள்ளவை[தொகு]

வி. கூட்டுரோடு தேசிய நெடுஞ்சாலை 79 (NH-79)
மேல்நாரியப்பனூர் ரயில் நிலையம்.

ஊரில் உள்ள கோவில்கள்[தொகு]

  • ஸ்ரீ கலியபெருமாள் ஆலயம்
  • ஸ்ரீ செல்லியம்மன் கோவில் | இராயப்பனூர் செல்லியம்மன் திருத்தேர் திருவிழா
  • ஐய்யனார் கோவில்
  • மாரியம்மன் கோவில்
  • முருகன் கோவில்
  • அங்காளம்மன் கோவில்
  • ஸ்ரீ காமாட்சி அம்பிகை சமேத ஸ்ரீ கைலாசநாதர் கோவில் (சிவன் கோவில்)
  • பெரியநாயகி அம்மன் கோவில்

திருவிழாவின் சிறப்பு[தொகு]

1. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மிக பிரம்மாண்டமான் முறையில் தேர்த் திருவிழா நடைபெறும். செல்லியம்மன் தேர், அய்யனார் தேர் மற்றும் மாரியம்மன் தேர் என மூன்று தேர்களும் ஒரே நேரத்தில் ஒன்றன்பின் ஒன்றாகப் பக்தர்களால் வடம் பிடிக்கப்பட்டு வீதியுலா வரும்.

2. ஸ்ரீ கலியபெருமாள் ஆலயத்தில் பத்து நாட்கள் தொடர்ந்து திருவிழா நடைபெறும். இதில் ஒன்பதாவது நாள் சித்திரா பவுர்ணமி தினத்தில் வெகு சிறப்பாக திருத்தேர் வீதி உலா நடைபெறும். குறிப்பாக ஒவ்வொரு வருடமும் சித்திரா பவுர்ணமியன்று தேர் வீதிஉலா நடைபெறும்.

3. ஸ்ரீ காமாட்சி அம்பிகை சமேத ஸ்ரீ கைலாசநாதர் கோவிலில் மேற்கு வாசல் மேற்கு முகம் பார்த்து சிவன் காட்சியளிக்கிறார்.

அருகில் உள்ள கோவில்கள்[தொகு]

  • புனித அந்தோனியார் ஆலயம், மேல்நாரியப்பனூர்
  • சிவன் கோவில், தென்பொன்பரப்பி

பள்ளிகள்[தொகு]

1. ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, இராயப்பனூர், சின்னசலேல் ஒன்றியம்.

2. மகாகவி மெட்ரிக்குலேசன் பள்ளி, இராயப்பனூர்.

3. புனித அந்தோனியார் மேல்நிலைப்பள்ளி, மேல்நாரியப்பனூர்.
(அருகில் உள்ள பள்ளி)

கல்லூரிகள்[தொகு]

1. மகாபாரதி பொறியியல் கல்லூரி, வாசுதேவனூர் (அருகில் உள்ள கல்லூரி)

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராயப்பனூர்&oldid=2850852" இலிருந்து மீள்விக்கப்பட்டது