உள்ளடக்கத்துக்குச் செல்

இராமச்சந்திரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராமச்சந்திரா
இராஜாதிராஜன்
தேவகிரி யாதவப் பேரரசர்
ஆட்சிக்காலம்கிபி 1271 - 1317
முன்னையவர்அம்மண்ணன்
பின்னையவர்மூன்றாம் சிங்கண்ணன்
குழந்தைகளின்
பெயர்கள்
மூன்றாம் சிங்கண்ணன்
வல்லாளன்
பீமன்னன்
அரசமரபுசௌன யாதவ அரசமரபு
தந்தைகிருஷ்ணன்
மதம்இந்து சமயம்

இராமச்சந்திரன் அல்லது இராமதேவன் (Ramachandra) (IAST: Rāmacandra, r. அண். 1271-1311 கிபி), இந்தியாவின் தக்காண பீடபூமி பகுதியில் இருந்த தேவகிரி யாதவப் பேரரசை ஆண்ட சௌன யாதவ அரசமரபைச் சேர்ந்த பேரரசர் ஆவார்.

இவர் கிளர்ச்சி செய்து, தனது பெற்றோரின் உடன் பிறந்தோரின் மகன் அம்மண்ணனிடமிருந்து, தேவகிரி யாதவப் பேரரசை கைப்பற்றி ஆண்டார். இவர் குஜராத்தின் வகேலர் மற்றும் பராமரர், கர்நாடகத்தின் ஹோய்சாலர் மற்றும் ஆந்திராவின் காக்கத்தியர்களிடமிருநது நிலப்பரப்புகளை வென்று தனது தேவகிரி யாதவப் பேரரசை விரிவாக்கம் செய்தார்.

1296-இல் தில்லி சுல்தான் அலாவுதீன் கில்சியின் படைகள் இராமச்சந்திரனின் தேவகிரி யாதவப் பேரரசைக் கைப்பற்றியது. தில்லி சுல்தானுக்கு கப்பம் செலுத்த ஒப்புக் கொண்டார். [1] பின்னர் 1303-1304-ஆண்டுகளில் சுல்தானுக்கு கப்பம் கட்டத் தவறியதால், மாலிக் காபூர் தலைமையிலான தில்லி சுல்தான் படைகள் 1308-இல் தேவகிரி யாதவப் பேரரசை வீழ்த்தியது. இராமச்சந்திரா தோல்வியை ஒப்புக் கொண்டதுடன், தனது படைகளை, ஹோய்சாலர் மற்றும் காக்கத்தியர் இராச்சியங்களை வீழ்த்த மாலிக் காபூருக்கு உதவினார்.

மேற்கோள்கள்

[தொகு]

ஆதார நூற்பட்டியல்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமச்சந்திரா&oldid=3035602" இலிருந்து மீள்விக்கப்பட்டது