உள்ளடக்கத்துக்குச் செல்

சௌன யாதவ அரசமரபு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சௌன யாதவ அரசமரபு
860–1317
1200-இல் ஆசியாவில் சௌன யாதவ அரசமரபும், அதன் பக்கத்தவர்களையும் காட்டும் வரைபடம்
1200-இல் ஆசியாவில் சௌன யாதவ அரசமரபும், அதன் பக்கத்தவர்களையும் காட்டும் வரைபடம்
தலைநகரம்தேவகிரி எனும் தௌலதாபாத்
பேசப்படும் மொழிகள்கன்ன்டம, மராத்தி, சமஸ்கிருதம்
சமயம்
இந்து சமயம் மற்றும் சமணம்
அரசாங்கம்முடியாட்சி
வரலாறு 
• தொடக்கம்
860
• முடிவு
1317
முந்தையது
பின்னையது
மேலைச் சாளுக்கியர் Western Chalukya Empire
தில்லி சுல்தானகம்
தற்போதைய பகுதிகள்இந்தியா

சௌன யாதவ அரசமரபினர் (Seuna, Sevuna or Yadavas of Devagiri) (கிபி:860–1317) இந்தியாவின் தக்காணப் பீடபூமியின் மேற்கு பகுதியில், வடக்கே நர்மதை ஆறுக்கும் தெற்கே, துங்கபத்திரை ஆறுக்கும் இடைப்பட்ட தற்கால மகாராட்டிரா மற்றும் கர்நாடகா மாநிலப் பகுதிகளைக் கொண்ட தேவகிரி யாதவப் பேரரசை கிபி 860 முதல் கிபி 1317 முடிய 457 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். சௌன யாதவ அரசமரபினர் தலைநகரமாக தேவகிரி எனும் தௌலதாபாத் இருந்தது.

துவக்கத்தில் இந்த சௌன யாதவர்கள், மேலைச் சாளுக்கியர் ஆட்சியில் சிற்றரசர்களாக இருந்தனர். 12-ஆம் நூற்றாண்டின் நடுவில் சாளுக்கியர்கள் வீழ்ச்சியுற்ற போது, யாதவ மன்னர் ஐந்தாம் பீமதேவன் தன்னாட்சியை அறிவித்துக் கொண்டார். சிங்கண்னன் ஆட்சிக் காலத்தில் (1210 – 1247) தேவகிரி யாதவப் பேரரசை விரிவுபடுத்தினார். கிபி 1317-இல் தில்லி சுல்தான் அலாவுதீன் கில்சியில் படைத்தலைவர் மாலிக் கபூர் என்பவரால் தேவகிரி யாதவ அரசமரபு வீழ்த்தப்பட்டு, தில்லி சுல்தான் ஆட்சியில் சிற்றரசர்களாக இருந்தனர்.

பெயர்க் காரணம்

[தொகு]

கண்ணன் பிறந்த யாதவ குலமே தங்கள் அரசமரபு என சௌனக யாதவர்கள் கூறிக்கொண்டனர்.[1]

தேவகிரி யாதவப் பேரரசின் தலைநகரமான தௌலதாபாத் கோட்டை

இலக்கியம்

[தொகு]

மராத்தி மொழி

[தொகு]

இவர்களது ஆட்சியில் மராத்தி மொழி ஆட்சி மொழியாக இருந்தது.[2] முன்னர் கன்னடம் மற்றும் சமசுகிருத மொழியில் கல்வெட்டுகள் அதிகம் கொண்டிருந்த்தது..[3]

சௌன யாதப் பேரரசில் அமைச்சராக இருந்த ஹேமாத்ரி என்பவர், சமஸ்கிருத மொழி கலந்த மராத்தி மொழியை அரசவை மொழியாக்கினார்.[4] பக்தி இயக்கத்தின் முன்னோடியான மகான் ஞானேஸ்வர் எழுதிய ஞானேஸ்வரி (கிபி 1200) எனும் மராத்திய பக்தி இலக்கிய நூல் பதிகங்கள் கொண்டது. மேலும் ஞானேஸ்வர் சமஸ்கிருத மொழியிலிருந்து, மராத்தி மொழியில் பகவத் கீதையை மொழிபெயர்த்தார். முமுந்தராஜா என்பவர் மராத்தி மொழியில் தத்துவ விசாரணை நூலான பரமாமிருதம் மற்றும் விவேகசிந்து போன்ற நூல்களை இயற்றினார். [5] சௌன யாதவ அரசமரபின் இறுதி காலத்தில் பக்தி இயக்கம் எழுச்சியுற்ற போது தோன்றிய வர்க்காரி எனும் சமயப் பிரிவின் விட்டலர் அடியார்கள் பாடிய பக்திப் பாடல்கள் மராத்திய மொழியில் பிரபலமானது.[5]

கன்னட மொழி

[தொகு]

தேவகிரி யாதவப் பேரரசு ஆட்சியின் துவக்கத்தில் கன்னட மொழி அரசவை மொழிகளில் ஒன்றாக இருந்தது என்பதை கன்னட மொழி கல்வெட்டுகள் மூலம் அறியபடுகிறது. மேலும் யாதவ அரசர்கள் கன்னட மொழியை ஆதரித்தனர். இரண்டாம் சிம்மனால் ஆதரிக்கப்பட்ட அழகிதேவர் கன்னட மொழியில் எழுதிய பக்திப் பாடல்கள் பிரபலமானது. 1300-இல் பண்டரிபுரம் சௌந்தராஜர் கன்னட மொழியில் எழுதிய தசகுமார சரிதம் எனும் நூல் புகழ் பெற்றது.[6][7][8]

சமசுகிருதம்

[தொகு]

தேவகிரி யாதவப் பேரரசர் சிங்கண்ணா சமசுகிருத மொழியை பெரிது ஆதரித்தார். மேலும் வானியல் மற்றும் கணிதவியல் அறிஞரான இரண்டாம் பாஸ்கரர் இயற்றிய நூல்களைக் கொண்டு வானியல் தொடர்பான கல்வி நிலையத்தை நிறுவினார். மேலும் சிங்கண்ணா ஆட்சியின் போது சாரங்க தேவரால் சமசுகிருத மொழியில் எழுதப்பட்ட சங்கீத இரத்தினாஹாரம் எனும் கர்நாடக இசை நூல் பிரபலமானது.[9]

சமசுகிருத மொழியில் ஹேமாத்திரி எனும் அறிஞர் சதுர்வர்க்க சிந்தாமணி எனும் சமசுகிருத அகராதியை தொகுத்தார்.[10]மேலும் ஹேமாத்திரி மருத்துவ அறிவியல் தொடர்பாக பல நூல்களை சமசுகிருத மொழியில் எழுதினார். மேலும் இவர் கம்பு வேளாண்மையை ஊக்கிவித்தார். [11]

சௌன யாதவ அரசமரபின் தேவகிரி யாதவப் பேரரசு ஆட்சியில் எழுதப்பட்ட பிற சமசுகிருத இலக்கிய நூல்களும், ஆசிரியர்களும்:

மேற்கோள்கள்

[தொகு]
  1. Keay, John (2001-05-01). India: A History. Atlantic Monthly Pr. pp. 252–257. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8021-3797-0.
  2. Cynthia Talbot 2001, ப. 211.
  3. Christian Lee Novetzke 2016, ப. 316.
  4. Cynthia Talbot 2001, ப. 211-212.
  5. 5.0 5.1 Onkar Prasad Verma 1970, ப. 266.
  6. R. Narasimhacharya, p. 68, History of Kannada Literature, 1988, Asian Educational Services, New Delhi, Madras, 1988 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-206-0303-6
  7. Suryanath Kamat 1980, ப. 143-144.
  8. Sujit Mukherjee, p. 410, p. 247, "Dictionary of Indian Literature One: Beginnings - 1850", 1999, Orient Blackswan, Delhi, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81 250 1453 5
  9. Gurinder Singh Mann (2001). The Making of Sikh Scripture. Oxford University Press US. p. 1. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-513024-3.
  10. Digambar Balkrishna Mokashi (1987). Palkhi: An Indian Pilgrimage. SUNY Press. p. 37. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-88706-461-2.
  11. Marathyancha Itihaas by Dr. S.G Kolarkar, p.4, Shri Mangesh Prakashan, Nagpur.
  12. "ITCSRA FAQ on Indian Classical Music". Archived from the original on 2012-08-02. பார்க்கப்பட்ட நாள் 2007-12-11.

ஆதார நூற்பட்டியல்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சௌன_யாதவ_அரசமரபு&oldid=4085008" இலிருந்து மீள்விக்கப்பட்டது