இராமசாமி அய்யர் தலையணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராமசாமி அய்யர் தலையணை

இராமசாமி அய்யர் தலையணை அல்லது இரா. அ. தலையணை (R. A. Headworks) என்பது இந்தியாவின் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணார் கிராமத்தின் மூணாறு பஞ்சாயத்தில் முத்திரபுழா ஆற்றை அணைக்கும் கொத்து வகை தடுப்பணை ஆகும்.[1] இது மூணாறு தலையணை என்றும் அழைக்கப்படுகிறது. இது பள்ளிவாசல் நீர் மின் திட்டத்தின் ஒரு பகுதியாகும், இது கேரள மாநிலத்தின் முதல் நீர் மின் திட்டமாகும். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக இரண்டு அணைகளும், ஒரு மாற்றணையும் உள்ளன. இவை குண்டலா அணை, மாட்டுப்பட்டி அணை மற்றும் இராமசாமி அய்யர் தலையணை முதலியன ஆகும்.

இராமசாமி அய்யர் தலையணை மூணாறு அருகே மாட்டுப்பட்டி அணையிலிருந்து 15 கி. மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. குண்டலா நீர்த்தேக்கத்தில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீர் ஓடை வழியாகக் கீழ்புறத்தில் உள்ள மாட்டுப்பட்டி அணைக்குத் திறந்து விடப்படுகிறது. மாட்டுபட்டி நீர்த்தேக்கத்திலிருந்து அணைக்கட்டு மின் நிலையம் மூலம் கீழ்நிலைக்குத் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மாட்டுப்பட்டி அணையிலிருந்து கட்டுப்படுத்தப்படும் நீர் இந்த தலையணை வழியாக வெளியேறுகிறது.[2] இந்த நீரானது மாற்றுப்பாதையை அடைந்து அங்கிருந்து முத்திராபுழா ஆற்றின் வலது கரையில் அமைந்துள்ள பள்ளிவாசல் நீர் மின் நிலையத்திற்கு நீர் கடத்தும் அமைப்பு மூலம் திருப்பி விடப்படுகிறது. மின் உற்பத்திக்குப் பிறகு, செங்குளம் நீர் மின் திட்டத்தின் சமநிலை நீர்த்தேக்கத்திற்கு நீர் உந்தப்பட்டு நீரேற்று நிலையத்தின் உபரி நீர் முத்திரபுழா ஆற்றிலேயே கொட்டப்படுகிறது.[3]

விவரக்குறிப்புகள்[தொகு]

அணை மற்றும் அதன் மதகு கால்வாய்
  • அட்சரேகை: 10⁰ 04'00” வ
  • தீர்க்கரேகை: 77⁰ 04′ 00″ கி
  • ஊராட்சி: மூணாறு
  • கிராமம்: மூணாறு
  • மாவட்டம்: இடுக்கி
  • வடிநிலம்: முத்திரபுழா
  • ஆறு:முத்திரபுழா
  • அணையிலிருந்து ஆற்றுக்கு விடுவிப்பு : முத்திரபுழா
  • அணை வகை : கொத்து
  • வகைப்பாடு: தடுப்பணை
  • அதிகபட்ச நீர் நிலை (MWL): உயர் மட்டம் 1450.92 மீ
  • முழு நீர்த்தேக்க நிலை: உயர் மட்டம் 1450.92 மீ
  • அணை முழுக்கொள்ளவு தேக்கம்: 0.223 மிமீ3
  • ஆழமான அடித்தளத்திலிருந்து உயரம் : 10.90 மீ
  • நீளம்: 39.62 மீ
  • வெளியேறும் நீர் பாயும் வட்டம்: தேவிகுளம்
  • கசிவுப்பாதை: செங்குத்து வாயில், ஒவ்வொன்றும் 11.60 x 6.70 மீ அளவுள்ள 3 எண்கள்
  • நிறைவு ஆண்டு: 1944 [4]
  • முகடு நிலை மட்டம்: 1439.02 மீ
  • திட்டத்தின் பெயர்: பள்ளிவாசல் உயர் சக்தி
  • ஆற்று நீர் வெளியேறும் நிலையம்: வழங்கப்படவில்லை
  • திட்டத்தின் நோக்கம்: நீர் மின்சாரம்

மேற்கோள்கள்[தொகு]

  1. https://www.kseb.in/index.php?option=com_jdownloads&task=download.send&id=13995&catid=3&m=0&lang=en}}
  2. JAMES, WILSON (13 August 2018). "Understanding the 42-year-old Idukki dam which is now saving Kerala".
  3. "Diversion Structures in Idukki district – KSEB Limited Dam Safety Organisation" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-27.
  4. "കളറായി..." Mathrubhumi (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமசாமி_அய்யர்_தலையணை&oldid=3781197" இலிருந்து மீள்விக்கப்பட்டது