இராதிகா நாயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இராதிகா நாயர் (Radhika Nair) என்பவர் இந்தியப் புற்றுநோய் உயிரியல் ஆராய்ச்சியாளர் ஆவார். இவர் தற்போது இந்தியாவின் திருவனந்தபுரத்தில் உள்ள இராசிவ் காந்தி உயிரி தொழிற்நுட்ப மையத்தில் இராமானுஜன் ஆசிரிய சகாவாகவும், ஆத்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் , சிட்னி, டார்லிங்ஹர்ஸ்டில் உள்ள கார்வன் மருத்துவ ஆய்வு நிறுவனத்தில் மூத்த ஆராய்ச்சி அதிகாரியாகவும் பணியாற்றுகிறார்.[1] கட்டி உயிரணுக்கள் உயிர்வாழ்வதற்கும், செயலற்ற நிலைக்குச் செல்வதற்கும், பின்னர் செழித்து வளருவதற்கும், குறிப்பாக மார்பகப் புற்றுநோயில் உயிரணு உள்ளார்ந்த வழிமுறைகளைப் புரிந்துகொள்வதில் இவர் நிபுணத்துவம் பெற்றவர்.[2]

கல்வியும் பணியும்[தொகு]

1996-இல் மும்பையில் உள்ள தூய சவேரியார் கல்லூரியில் நுண்ணுயிரியல் மற்றும் உயிர்வேதியியலில் இளம் அறிவியல் பட்டம் பெற்ற பிறகு 1998-இல் மும்பை அறிவியல் கழகத்தில் உயிர் வேதியியலில் முதுநிலைப் பட்டம் பெற்றார். இவர் தனது முனைவர் பட்ட ஆய்வில் கிருமி உயிரணு இறப்பில் கவனம் செலுத்தினார்.[2] 2005ஆம் ஆண்டில், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் எம். ஆர். சி. புற்றுநோய் பிரிவில், நுண்ணுயிர் மற்றும் மெய்க்கருவுயிரி மரபியலில் கவனம் செலுத்தினார். இதனை முனைவர் பட்ட மேல் ஆராய்ச்சி நிதி உதவி மூலம் மேற்கொண்டார்.

ஐக்கிய இராச்சிய நிதியுதவியினைத் தொடர்ந்து பல ஆண்டுகள் கர்வனில் ஆராய்ச்சியாளராக அலெக்சாண்டர் சுவார்ப்ரிக்குடன், அந்த நிறுவனத்தில் புற்றுநோய் மையத்தின் தலைவருடன் பணிபுரிந்தார். மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஒரு நண்பரை இழந்த பிறகு, நாயர் மார்பகப் புற்றுநோய் ஆராய்ச்சிக்காகத் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். கார்வனில், இவர் புரோமிசு (முன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோய் மாற்றிடம் புகல்) என்ற கூட்டுத் திட்டத்தில் பங்களித்தார்.[3] ஆத்திரேலியாவின் சிட்னியில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள தூய வின்சென்ட் மருத்துவப் பள்ளியிலும் நாயர் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Nair, Radhika. "Radhika Nair". பார்க்கப்பட்ட நாள் 13 March 2017.
  2. 2.0 2.1 Jayaraj, Nandita. "A Cancer Biologist Moving With the Cells". http://thewire.in/36826/a-cancer-biologist-moving-with-the-cells/. பார்த்த நாள்: 13 March 2017. 
  3. "DR RADHIKA NAIR". ProMis Team Member Profile. Garvan Institute of Medical Research. பார்க்கப்பட்ட நாள் 13 March 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராதிகா_நாயர்&oldid=3919858" இலிருந்து மீள்விக்கப்பட்டது