இராசேந்திர பிரசன்னா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராசேந்திர பிரசன்னா
ஆத்திரேலியாவின் இசை, கலை மற்றும் நடன உலகத் திருவிழாவில் நிகழ்ச்சி நடத்தும் இராசேந்திர விரசன்னா
பின்னணித் தகவல்கள்
பிறப்பு15 ஏப்ரல் 1956 (1956-04-15) (அகவை 67)
வாரணாசி, உத்தரப் பிரதேசம், இந்தியா
இசை வடிவங்கள்இந்துஸ்தானி இசை
தொழில்(கள்)கருவியிசைக் கலைஞர், இசையமைப்பாளர்
இசைக்கருவி(கள்)பன்சூரி, செனாய்

இராசேந்திர பிரசன்னா ( Rajendra Prasanna; பிறப்பு 15 ஏப்ரல் 1956) என்பவர் இந்தியாவின் பாரம்பரிய இசைக்கருவிகளான செனாய் மற்றும் பன்சூரி ஆகியவற்றை இசைக்கும் கலைஞர் ஆவார்.[1]

இராசேந்திரன் இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ள வாரணாசியில் பிறந்தார். தனது தந்தை இரகுநாத் பிரசன்னா மற்றும் மாமாக்கள் போலாநாத் பிரசன்னா, விஷ்ணு பிரசன்னா ஆகியோரிடம் இசை கற்றார். எழுபதுகளின் ஆரம்பத்தில் இவரது குடும்பம் தில்லிக்கு குடிபெயர்ந்தது. பின்னர் இவர் அபீசு அகமது கான் மற்றும் சர்பராசு உசைன் கான் ஆகியோரின் சீடரானார். பெனாரசு கரானாவின் பாடகர் மகாதேவ் மிசுராவிடமும் இசையைக் கற்றார்.

நிகழ்ச்சிகள்[தொகு]

செனாய் வாசிக்கும் இராசேந்திர பிரசன்னா

எடின்பர்க் திருவிழா ( ஐக்கிய இராச்சியம் ), சிட்னி ஒப்பேரா மாளிகை, இசை, கலை மற்றும் நடன உலகத் திருவிழா ( ஆத்திரேலியா, நியூசிலாந்து ) போன்ற இடங்களில் தனது இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். [2] 1997 இல் அமெரிக்கா, கனடா மற்றும் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற "இந்தியாவின் சுதந்திரத்திற்கான பொன்விழா" கொண்டாட்டத்திற்கான உலக இசை விழாவிலும் இவர் நிகழ்த்தினார். மேலும் இலண்டன் இசைக்கலைஞர் ஜார்ஜ் என்பவரின் நினைவஞ்சலி இசை நிகழ்ச்சியிலும், பிரான்சில் ஓப்பேரா டி லியோனிலும் நிகழ்த்தியுள்ளார். [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Profile:: Pt. Rajendra Prasanna". 1956-04-15. Retrieved 2016-08-03.
  2. "Rajendra Prasanna » Artists » WOMAD". Retrieved 3 February 2022.
  3. "Rajendra Prasanna". Retrieved 17 January 2022.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராசேந்திர_பிரசன்னா&oldid=3815269" இலிருந்து மீள்விக்கப்பட்டது