இரகுநாத் பிரசன்னா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரகுநாத் பிரசன்னா
அனைத்திந்திய வானொலியின் ஒரு நிகழ்ச்சியில் இரகுநாத் பிரசன்னா
பின்னணித் தகவல்கள்
பிறப்பு1913
இறப்பு1999 (அகவை 85–86)
இசை வடிவங்கள்இந்துஸ்தானி இசை
தொழில்(கள்)கருவியிசைக் கலைஞர்
இசைக்கருவி(கள்)பன்சூரி, செனாய்

பண்டிட் இரகுநாத் பிரசன்னா (Raghunath Prasanna) (1913 - ஜூன் 1999) என்பவர் இந்தியாவின் பாரம்பரிய இசைக்கருவிகளான செனாய் மற்றும் பன்சூரி ஆகியவற்றை இசைக்கும் கலைஞர் ஆவார். இவர் பன்சூரி வாசிப்பதில் செனாய் நுட்பங்களைப் பயன்படுத்துவதில் அறியப்பட்டார். மேலும் குரல் இசையாலும் ஈர்க்கப்பட்டார்.

ஒரு கச்சேரியில் திரிபுரா பன்சூரியை இசைக்கும் இரகுநாத் பிரசன்னா .

சொந்த வாழ்க்கை[தொகு]

ரகுநாத் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசியில் 1913 இல் பிறந்தார்.

இவர் சரசுவதி தேவி என்பவரை மணந்தார். இவர்களுக்கு ஏழு குழந்தைகள் இருந்தனர். அவர்களில் இராசேந்திர பிரசன்னா என்பவரும் தனது தந்தையைக் போலவே செனாய் மற்றும் பன்சூரி இசைக் கலைஞர். மற்றொரு மகன்களான இரிசப், இராசேசு மற்றும் இரித்தேசு ஆகியோர் பன்சூரி வாசிக்கிறார்கள்.

தொழில்[தொகு]

இரகுநாத் பிரசன்னா, செனாய் இசைக்கலைஞரான தனது தந்தை கௌரி சங்கரிடமும், வாரணாசியைச் சேர்ந்த தௌஜி மிசுராவிடமும் இசைப் பயிற்சி பெற்றார். அதுவரை செனாய் வாசிப்பதற்காக அறியப்பட்ட குடும்ப பாரம்பரியத்தில் பன்சூரி கலையை (திரிபுரா பன்சூரி மற்றும் கிருஷ்ண பன்சூரி) அறிமுகப்படுத்திய முதல் நபராவார். [1]

சிறு வயதிலேயே, பிரசன்னா இலக்னோ, பிரயாக்ராஜ் மற்றும் ராஞ்சி உள்ளிட்ட பல்வேறு அனைத்திந்திய வானொலி நிலையங்களில் பணியாளர் கலைஞராக பணியாற்றினார். பின்னர், இவர் பனாரசு இந்து பல்கலைக்கழகத்தில் பயின்றார், இறுதியில் இந்திய அரசின் பாடல் மற்றும் நாடகப் பிரிவில் இடம் பெற்றார். இரகுநாத் திரிபுரா மற்றும் கிருஷ்ணா பன்சூரிகளை வாசிப்பதற்காகவும் அறியப்பட்டார்.

இசையிலாளர் அலைன் டேனிலோ 1955 ஆம் ஆண்டு இந்தியன் கிளாசிக்கல் மியூசிக் என்ற இசைத் தொகுப்பில் இவரது செனாய் மற்றும் திரிபுரா பன்சூரியை பதிவு செய்துள்ளார். பிரசன்னா, 1996 இல் சங்கீத நாடக அகாதமி விருது பெற்றவர். [2]

சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரகுநாத்_பிரசன்னா&oldid=3815249" இலிருந்து மீள்விக்கப்பட்டது