உள்ளடக்கத்துக்குச் செல்

பன்சூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

 

பன்சூரியுடன் இருக்கும் கிருட்டிணர் சில சமயங்களில் வேணுகோபால் என்று குறிப்பிடப்படுகிறார்.

பன்சூரி என்பது இந்திய துணைக்கண்டத்தில் இருந்து உருவான ஒரு பழங்கால பக்கவாட்டு புல்லாங்குழல் ஆகும். இது இந்துஸ்தானி செவ்வியல் இசையில் பயன்படுத்தப்படும் மூங்கில் அல்லது உலோகத்தினால் தயாரிக்கப்படும் காற்று இசைக்கருவி ஆகும். இருக்கு வேதம் மற்றும் இந்து மதத்தின் பிற வேத நூல்களில் இது நாடி மற்றும் துனவா என்று குறிப்பிடப்படுகிறது. சமசுகிருத நூலான நாட்டிய சாஸ்திரத்தில் இக்கருவியியின் முக்கியத்துவம் மற்றும் செயல்பாடு விவாதிக்கப்பட்டுள்ளது. [1] [2]

பன்சூரி பாரம்பரியமாக ஒரு மூங்கில் வெற்றுத் தண்டினைக் கொண்டு ஆறு அல்லது ஏழு விரல் துளைகள் கொண்டதாகத் தயாரிக்கப்படுகிறது. சில நவீன வடிவமைப்புகள் தந்தம், கண்ணாடியிழை மற்றும் பல்வேறு உலோகங்களில் வருகின்றன. ஆறு துளை கருவி இரண்டரை எண்ம இசையை உள்ளடக்கியது. பன்சூரி பொதுவாக 30 சென்டிமீட்டர்கள் (12 அங்குலம்) மற்றும்சென்டிமீட்டர்கள் (30 அங்குலம்) மற்றும் மனித கட்டைவிரலின் தடிமன் அளவில் தயாரிக்கப்படுகிறது. [3] ஒரு முனை மூடப்பட்டுள்ளது, மற்றும் மூடிய முனையிலிருந்து சில சென்டிமீட்டர்கள் அதன் ஊதுகுழலாகும். நீளமான பன்சூரிகள் ஆழமான தொனி மற்றும் குறைந்த சுருதிகளைக் கொண்டுள்ளன. [3] பாரம்பரிய வடிவமைப்பில் இயந்திர விசைகள் பயன்படுத்தப்படவில்லை, மேலும் இசைக்கலைஞர் அவர்கள் விரும்பும் ,இசைக்குறிப்புகளை பல்வேறு விரல் துளைகளை மூடி மற்றும் வெளிப்படுத்துவதன் மூலம் உருவாக்கு்வார். [3]

பன்சூரி போன்ற புல்லாங்குழல் பண்டைய பௌத்த, [4] இந்து [5] மற்றும் ஜெயின் கோவில் ஓவியங்கள் மற்றும் புல்லாங்குழல்களில் சித்தரிக்கப்பட்டுள்ளது, மேலும் இது இந்துக் கடவுளான கிருட்டிணரின் உருவப்படத்தில் பொதுவாக காணப்படும். [6] [7] இது கிருட்டிணன் மற்றும் இராதையின் காதல் கதையுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. [8] பன்சூரி பகவான் கிருட்டிணரின் தெய்வீகக் கருவியாகப் போற்றப்படுகிறது, மேலும் இது பெரும்பாலும் கிருட்டிணரின் இராச லீலா நடனத்துடன் தொடர்புடையது. இந்த புனைவுகள் சில நேரங்களில் இந்த காற்று கருவிக்கு முரளி போன்ற மாற்றுப் பெயர்களைப் பயன்படுத்துகின்றன. [9] [6] இருப்பினும், சைவம் போன்ற பிற மரபுகளிலும் இந்தக் கருவி பொதுவானது. [10] அதே சமயம் இடைக்கால இந்தோனேசிய இந்து மற்றும் பௌத்த கலைகளிலும், ஜாவா மற்றும் பாலியில் உள்ள கோயில் சிற்பங்களிலும் 10 ஆம் நூற்றாண்டுக்கு முந்திய காலப்பகுதியிலிருந்து, இந்த குறுக்கு புல்லாங்குழல் வாங்சி அல்லது பாங்சி என்று அழைக்கப்படுகிறது.[11]

வரலாறு[தொகு]

ஆர்டல் பவலின் கூற்றுப்படி, புல்லாங்குழல் என்பது பல பண்டைய கலாச்சாரங்களில் காணப்படும் ஒரு எளிய கருவியாகும். புராணங்களின் படி புல்லாங்குழலின் மூன்று பிறப்பிடங்கள் எகிப்து, கிரீஸ் மற்றும் இந்தியா. இவற்றில், குறுக்கு புல்லாங்குழல் (பக்கவாட்டில் ஊதப்பட்டது) பண்டைய இந்தியாவில் மட்டுமே தோன்றியது, அதே நேரத்தில் ஃபிப்பிள் புல்லாங்குழல் மேற்சொன்ன மூன்று நாடுகளிலும் காணப்படுகிறது. நவீன இந்திய பன்சூரி ஆரம்பகால மற்றும் இடைக்கால சகாப்தத்திலிருந்து பெரிதாக மாறவில்லை என்று பவல் கூறுகிறார். [12] [13] இருப்பினும், சற்றே வித்தியாசமான வடிவமைப்பின் புல்லாங்குழல் பண்டைய சீனாவில் கிடைக்கப் பெற்றுள்ளது. ஆர்டல் பவல் கர்ட் சாக்ஸின் இசைக்கருவிகளின் வரலாற்றை மேற்கோள் காட்டி இக்கருவி சீனாவில் தோன்றியிருக்க வாய்ப்பில்லை என்பதையும் மிகவும் பழமையான மத்திய ஆசிய புல்லாங்குழல் வடிவமைப்பில் இருந்து உருவாகியிருக்கலாம் எனவும் கூறுகிறார். இருப்பினும், இந்திய மற்றும் சீன வகைகளுக்கு இடையே ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. [13]

மேற்கோள்கள்[தொகு]

 1. Rowell 2015, ப. 99–103.
 2. Te Nijenhuis 1974, ப. 30–33.
 3. 3.0 3.1 3.2 Ashok Damodar Ranade 2006, ப. 284–286.
 4. Patricia E. Karetzky (2000). Early Buddhist Narrative Art: Illustrations of the Life of the Buddha from Central Asia to China, Korea and Japan. University Press of America. pp. 44, 60. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4617-4027-8.
 5. Alice Boner (1990). Principles of Composition in Hindu Sculpture: Cave Temple Period. Motilal Banarsidass. pp. 157–163, 186–187. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0705-1.
 6. 6.0 6.1 Pratapaditya Pal (2016). Puja and Piety: Hindu, Jain, and Buddhist Art from the Indian Subcontinent. Univ of California Press. pp. 37–38, 47–49, 59–60. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-520-28847-8.
 7. Martinez 2001, ப. xxvii-xxviii, 325, 342.
 8. Sorrell & Narayan 1980, ப. 35–36.
 9. Lochtefeld 2002, ப. 370–371, 449.
 10. Dalal 2014, ப. 28, see entry for Shiva-dedicated saint Anaya.
 11. Jaap Kunst (2013). Hindu-Javanese Musical Instruments. Springer. pp. 25–26. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-94-011-9185-2.
 12. Peter Westbrook (2003), The bansuri and pulangoil, bamboo flutes of India, Flutist Quarterly, Vol. 28, No. 3, pages 1–4
 13. 13.0 13.1 Ardal Powell (2002). The Flute. Yale University Press. pp. 10–13. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-300-09498-5.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பன்சூரி&oldid=3695487" இலிருந்து மீள்விக்கப்பட்டது