உள்ளடக்கத்துக்குச் செல்

இராகேசு பட்நாகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராகேசு பட்நாகர்
துணைவேந்தர்-அமிதி பல்கலைக்கழகம், இராசத்தான்
பதவியில் உள்ளார்
பதவியில்
6 சூலை 2021
27வது துணைவேந்தர்-பனாரசு இந்து பல்கலைக்கழகம்]]
பதவியில்
28 மார்ச்சு 2018 – 28 மார்ச்சு 2021
நியமிப்புராம் நாத் கோவிந்த்
முன்னையவர்கிரீசு சந்திர திரிபாதி
பின்னவர்சுதிர் கு. ஜெயின்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு31 சூலை 1951 (1951-07-31) (அகவை 73) [1]
கான்பூர், உத்தரப் பிரதேசம், இந்தியா
தேசியம்இந்தியர்
துணைவர்நிருபமா பானர்ஜி
முன்னாள் கல்லூரிதேசிய சர்க்கரை நிறுவனம்
சத்ரபதி ஷாகுஜி மகராஜ் பல்கலைக்கழகம்
வேலைஉயிரித் தொழில்நுட்பம்
கல்வி
விருதுகள்குடியரசுத் தலைவர் வருகையாளர் விருது
உறுப்பினர்-இந்திய தேசிய அறிவியல் கழகம்
தேசிய அறிவியல் கழகம், இந்தியா
இந்திய அறிவியல் கழகம்
இணையத்தளம்Scholar-Profile

இராகேசு பட்நாகர் (Rakesh Bhatnagar) ஓர் இந்தியக் கல்வியாளரும், அறிவியலாளரும், இராசத்தான் அமிட்டி பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தரும் ஆவார்.[2][3] முன்னதாக இவர் பனாரசு இந்து பல்கலைக்கழகத்தின் 27வது துணைவேந்தராகப் பணியாற்றியுள்ளார்.[4]

கல்வி

[தொகு]

பட்நாகர் தனது முதுநிலை அறிவியல் பட்டத்தினை கான்பூர் பல்கலைக்கழகத்திலிருந்தும் முனைவர் பட்டத்தினைத் தேசியச் சர்க்கரை நிறுவனத்தில் பெற்றார்.

தொழில்

[தொகு]

புது தில்லி, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உயிரித் தொழில்நுட்பப் பள்ளியின் தலைவராகவும், குமாவுன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் கல்விப் பணியாளர் கல்லூரியின் இயக்குநராகவும், மேம்பட்ட கருவி ஆராய்ச்சி வசதியின் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.[5] பட்நாகர் வாரணாசியில் உள்ள பனாரசு இந்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றினார்.[6] ஆந்த்ராக்சுக்கு எதிராக மரபணு ரீதியாக வடிவமைக்கப்பட்ட தடுப்பூசியை உருவாக்க இவர் உதவினார்.[7] பல முக்கிய இந்திய அறிவியல் கல்விக்கழகங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராகவும் உள்ள இவர், புதுமைக்கான 2016 இந்தியக் குடியரசுத் தலைவரின் வருகையாளர் விருது உட்படப் பல விருதுகளைப் பெற்றுள்ளார்.[8] இவரது குழு வெறிநாய்க் கடிக்கு எதிரான டி. என். ஏ. தடுப்பூசியையும் உருவாக்கியுள்ளது. இவரது ஆராய்ச்சிக் குழு மைக்கோபாக்டீரியம், புரூசெல்லா போன்ற பிற முக்கியமான தொற்று நோய் அமைப்புகளில் ஆராய்ச்சியைத் தொடங்கியுள்ளது. இவற்றின் கட்டுப்பாட்டுக்கான வழிகளை ஏற்படுத்தும் நோக்கில், தொற்று நோய்களின் மூலக்கூறு உயிரியல், மறுசீரமைப்பு தடுப்பூசி மேம்பாடு மற்றும் நிலைக்கருவிலிகளில் திட்டமிடப்பட்ட உயிரணு இறப்பு ஆகியவை இவரது ஆய்வின் முதன்மைப் பகுதிகளாகும்.[9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Kumar, Mamidala Jagadesh (1 August 2016). "Prof. Rakesh Bhatnagar of JNU retired on 31-07-2016. JNU Wishes him a very active life ahead.pic.twitter.com/bj3xroNvn8". Twitter. பார்க்கப்பட்ட நாள் 3 January 2019.
  2. "Leadership: Amity University Rajasthan".
  3. "Former BHU Vice Chancellor Rakesh Bhatnagar To Head Amity University Rajasthan". NDTV.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-25.
  4. "Banaras Hindu University, Varanasi". www.bhu.ac.in. Archived from the original on 25 September 2018. பார்க்கப்பட்ட நாள் 2022-02-25.
  5. "Rakesh Bhatnagar". Samviti.com. பார்க்கப்பட்ட நாள் 3 January 2019.
  6. "Vice-Chancellor". Bhu.ac.in. Archived from the original on 12 August 2013. பார்க்கப்பட்ட நாள் 29 March 2018.
  7. "Dr. Rakesh Bhatnagar : CV". Jnu.ac.in. பார்க்கப்பட்ட நாள் 3 January 2019.
  8. "VISITOR'S AWARDS 14th March, 2016" (PDF). President of India, Government of India. 2016. பார்க்கப்பட்ட நாள் 14 March 2016.
  9. "VISITOR'S AWARDS" (PDF). Presidentofindia.nic.in. 14 March 2016. பார்க்கப்பட்ட நாள் 3 January 2019.
முன்னர் பனாரசு இந்து பல்கலைக்கழகம்-துணைவேந்தர்
28 மார்ச்சு 2018 - 28 மார்ச்சு 2021
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராகேசு_பட்நாகர்&oldid=4152075" இலிருந்து மீள்விக்கப்பட்டது