இராகினி சங்கர்
இராகினி சங்கர் | |
---|---|
![]() ராகினி சங்கர் ஒரு நிகழ்ச்சியில் நிகழ்த்துகிறார் | |
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பு | வாரணாசி, இந்தியா |
இசை வடிவங்கள் | இந்துஸ்தானி இசை, இணைவு |
தொழில்(கள்) | வயலின் கலைஞர் |
இசைக்கருவி(கள்) | வயலின் |
இணையதளம் | www.raginishankar.com |
இராகினி சங்கர் (Ragini Shankar) இவர் ஓர் இந்திய வயலின் கலைஞர் ஆவார். இவர் இந்துஸ்தானி பாரம்பரிய இசை மற்றும் இணைவை நிகழ்த்துகிறார். இவர் முனைவர் சங்கீதா சங்கர் என்பவரின் மகளாவார்.[1] மேலும், புகழ்பெற்ற பத்ம பூசண் முனைவர் என் ராஜம் என்பாரது பேத்தியாவார்.[2] இவர் தற்போது மும்பையில் வசிக்கிறார்.
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]இவர் தனது 4 வயதில் இசைப் பயிற்சியைத் தொடங்கினார். 11 வயதில் போபாலில் உள்ள பாரத் பவன் கலாச்சார மையத்தில் தனது முதல் பொது நிகழ்ச்சியினை நிகழ்த்தினார்.[3] இவர் "கயாக்கி ஆங்" என்ற வயலின் வாசிப்பவராவார் .
கல்வி
[தொகு]சங்கர் இயந்திரப் பொறியியல் கல்வியில் சிறந்து விளங்கினார். மேலும் இசையில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளார்.[4]
தொழில்
[தொகு]கொல்கத்தாவில் 'டோவர்லேன் இசை விழா' யூரோபாலியா,[5] மேரு,[6] புனேவில், சவாய் காந்தர்வா பீம்சென் விழா,[7] டோவர் லேன் இசை மாநாடு,[8] சப்தக் இசை விழா,[9] மிலாப்ஃபெஸ்ட்,[10] யக்சா ( திருவிழா),[11] பஞ்சம் நிஷாத்துக்கான ஆரோகி,[12] நடிகை, ஹேம மாலினி ஏற்பாடு செய்த ஜெய ஸ்மிருதி,[13] நுண்கலை கோயில்,[14] இந்திய கலை நிகழ்ச்சிகளின் சங்கம்,[15] டி. என். கிருட்டிணன் அறக்கட்டளை,[16] மற்றும் வங்காள இசை அறக்கட்டளை போன்ற பல்வேறு மதிப்புமிக்க விழாக்களில் இவர் தனது வயலின் இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார்.[17] மேலும் ஐடியா ஜல்சா என்ற தொலைக்காட்ட்சியிலும் இவரது இசை ஒளிபரப்பப்பட்டது.[18] இவர் தனது சகோதரி நந்தினி சங்கருடன் ஒரு காணொளிக் காட்சி ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.[19] மற்றும் பாரம்பரிய இசை குறுந்தகட்டினையும் வெளியிட்டுள்ளார்.[20]
இந்தியா முழுவதும் நிகழ்ச்சிகளைல் தோன்றியதோடு, ஐக்கிய அமெரிக்கா,[21] கனடா,[22] இங்கிலாந்து,[23] நெதர்லாந்து,[24] ஜெர்மனி, பிரான்ஸ்,[25] பெல்ஜியம்,[26] ஹங்கேரி, சிங்கப்பூர்,[27] மலேசியா மற்றும் துபாய் போன்ற இடங்களிலும் தனது இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார்.[28] ராகினி தனது பயணங்களின் போது விரிவுரைகளயும் வழங்குகிறார் . மேலும், ஒரு வழக்கமான அடிப்படையில் பட்டறைகளையும் நடத்துகிறார்.
மும்பையில் உள்ள விஸ்லிங் வூட்ஸ் சர்வதேச நடனப் பள்ளியின் ஆசிரிய உறுப்பினராக இருக்கிறார்.[29]
இவர் புகழ்பெற்ற பாலிவுட் பாடலாசிரியர் இர்ஷாத் காமிலின் தி இங்க் பேண்ட் என் இசையின் ஒரு பகுதியாவார். இது இசையுடன் பின்னப்பட்ட கவிதைத் தொடராகும்.[30] பிரபல பிரெஞ்சு இசையமைப்பாளர் தியரி பெக்கோ [31] என்பவரால் உருவாக்கப்பட்ட சங்காட்டா என்ற இந்தோ-பிரெஞ்சு இசை திட்டத்தின் ஒரு பகுதியாவார். இதைப் பற்றி பிரான்சின் லு மொண்டே என்ற இதழில் வெளிவந்த ஒரு கட்டுரையில் விவரிக்கப்பட்டது.[32] இவரது சமீபத்திய நிகழ்வுகளில் பிரபலமான இந்திய இசைக்கு ஒரு புதிய ஒலியை வழங்கும் புதுமையான இணைவு இசைக்குழுவான இன்ஸ்ட்ரிங் என்பது அடங்கும்.[33] இந்திய இசையைப் பற்றி பேச டெட் மாநாட்டின் மேடையில் தோன்றியுள்ளார்.[34] இவர் இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கலாச்சார உதவித்தொகை பெற்றவர் ஆவார்.
விருதுகள் மற்றும் கௌரவங்கள்
[தொகு]இவருக்கு, திரைப்பட நடிகையும் நடனக் கலைஞருமான ஹேமா மாலினி, 'ஜெய ஸ்மிருதி' என்ற பட்டத்தை 2012இல் வழங்கினார்
2018இல் இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, அவர்கள் " ஜஷ்ன்-இ-யங்கிஸ்தான்" [35][36] என்ற பட்டத்தை வழங்கினார். இது நாட்டின் ஆற்றல்மிக்க இளைஞர் சக்தியைக் கொண்டாடும் மரியாதையாகும்.
குறிப்புகள்
[தொகு]- ↑ Sangeeta Shankar - The Legacy Continues, archived from the original on 2015-04-11, retrieved 2020-02-23
- ↑ N. Rajam
- ↑ Ragini Shankar's official website
- ↑ https://mumbaimirror.indiatimes.com/entertainment/music/meet-dr-sangeeta-shankar-and-her-daughters-ragini-and-nandini-shankar-who-weave-magic-with-their-violins/articleshow/63848448.cms
- ↑ Europalia, archived from the original on 2018-10-31, retrieved 2020-02-23
- ↑ https://maharishigandharva.wordpress.com/tag/meru/
- https://www.youtube.com/watch?v=Xpc_zNWS848 - ↑ DNA Syndication
- DNA India - Pune's Sawai Gandharva Mahotsav ends on a soulful note
- Mid-Day Archives: Performance by 3 generations of family steals show on final day - ↑ Dover Lane Music Conference
- Dover Lane Music Conference, archived from the original on 2015-02-15, retrieved 2020-02-23 - ↑ Saptak Annual Festival
- Saptak Annual Festival
- Saptak Annual Festival
- Saptak Annual Festival - ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-09-20. Retrieved 2020-02-23.
- ↑ Yaksha (festival)
- ↑ Pancham Nishad - Past Events, archived from the original on 2014-06-23, retrieved 2020-02-23
- ↑ Solaris Event Archives, archived from the original on 2016-03-04, retrieved 2020-02-23
- ↑ Thyagaraja Tansen Music Festival, The Temple of Fine Arts, Malaysia
- ↑ Gallery, The Association of Performing Arts of India, archived from the original on 2018-06-09, retrieved 2020-02-23
- ↑ Parampara, T. N. Krishnan Foundation, archived from the original on 2016-03-03, retrieved 2020-02-23
- ↑ https://www.thedailystar.net/backpage/musical-marvel-continues-180106
- ↑ Youtube, Payoji Maine - Bhajan (Dr. N. Rajam, Sangeeta Shankar, Ragini Shankar & Nandini Shankar)
- ↑ Legendary Legacy, Record Label, archived from the original on 2016-03-04, retrieved 2020-02-23
- ↑ Legendary Legacy, Record Label, archived from the original on 2016-03-03, retrieved 2020-02-23
- ↑ https://www.skidmore.edu/zankel/documents/Jan2017-ZankelSpringBrochure.pdf
- https://muse.union.edu/music/ragini-shankar-violin/ - ↑ https://www.youtube.com/watch?v=Pc3WBdwQV30
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-09-20. Retrieved 2020-02-23.
- ↑ https://maharishigandharva.wordpress.com/tag/meru/
- ↑ https://detoursdebabel.fr/Sangata-1057 பரணிடப்பட்டது 2018-10-31 at the வந்தவழி இயந்திரம்
- https://www.indeenfrance.com/lille.php/lille-lire/ragini-shankar-en-concert - ↑ https://europalia.eu/archives/india/en/article/three-generations_141.html பரணிடப்பட்டது 2018-10-31 at the வந்தவழி இயந்திரம்
- http://www.art-base.be/index.php?view=details&id=593%3Atemplate-concert&option=com_eventlist - ↑ https://www.rasikas.org/forums/viewtopic.php?t=18588
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-10-31. Retrieved 2020-02-23.
- ↑ https://www.whistlingwoods.net/faculty
- ↑ https://www.business-standard.com/article/news-ians/rahman-launches-irshad-kamil-s-ink-band-music-series-118032100608_1.html
- https://www.youtube.com/watch?v=5UEaguxxOas - ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-02-23. Retrieved 2020-02-23.
- ↑ https://www.lemonde.fr/musiques/article/2018/03/30/sangata-le-nouveau-raga-occidental-de-thierry-pecou_5278768_1654986.html
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-09-27. Retrieved 2020-02-23.
- ↑ https://www.ted.com/tedx/events/29734
- ↑ https://m.dailyhunt.in/news/india/english/news24online-epaper-newsonline/jashn+e+youngistan+2018+honoured+violinsts+ragini+shankar+and+nandini+shankar-newsid-102297839
- ↑ https://m.dailyhunt.in/news/india/english/news24+english-epaper-newstwen/jashn+e+youngistan+2018+to+honour+ragini+shankar+and+nandini+shankar-newsid-102192204