இரத்தப் புற்றுநோய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இரத்தப் புற்றுநோய்
Classification and external resources
Acute leukemia-ALL.jpg
A Wright's stained bone marrow aspirate smear of patient with precursor B-cell acute lymphoblastic leukemia.
ஐ.சி.டி.-10 C91.-C95.
ஐ.சி.டி.-9 208.9
ICD-O: 9800-9940
DiseasesDB 7431
MeSH D007938

இரத்தப் புற்றுநோய் அல்லது லுகேமியா (Leukemia) British English: leukaemia (கிரேக்க லுகோஸ்,λευκός , "வெண்மை"; அய்மா αίμα , இரத்தம் அல்லது எலும்பு மச்சையில் உண்டாகும் ஒரு புற்றுநோய். இது பொதுவாக இரத்த வெள்ளையணுக்களின் (White blood cells), அசாதாரணமான உருவாக்கம் மற்றும் பெருக்கத்தால் குறிப்பாக அறியப்படுகிறது. லுகேமியா என்பது குறிப்பிட்ட சில நோய்களை ஒன்றிணைத்து வழங்கப்படும் பொதுப் பெயராக உள்ளது. தொடர்ந்து, பெரியதொரு நோய்க்குழுமமாக அறியப்படும் இரத்தவியல் மிகைப்பெருக்க இழையம் என்பவனவற்றின் ஒரு பகுதியாக உள்ளது.

வகைப்படுத்துதல்[தொகு]

இரத்தப் புற்று நோய் என்பது மருந்தக ரீதியாகவும், ரத்தவியல் ரீதியாகவும், பல வகைப்பட்ட பெரும் நோய்க்குழுமங்களாக வகைப்படுத்தப்படுகிறது. இதில் முதலாவதாக இருப்பது மிகவும் தீவிரமான (acute) மற்றும் நாள்பட்ட அல்லது முற்றிய (chronic) ஆகிய வகைகளாகும்:

 • முதிர்ச்சி அடையாத ரத்த அணுக்களின் மிக வேக வளர்ச்சியால் தீவிர இரத்தப் புற்றுநோய் குறிப்பாக அறியப்படுகிறது. இவை கூட்டமாகப் போய்விடுவதால், ஆரோக்கியமான ரத்த அணுக்களைத் தயாரிப்பது என்பது எலும்பு மஜ்ஜைக்கு இயலாததாகப் போய்விடுகிறது. இவ்வாறு புற்றுத் திசுக்கள் திரள்வதாலும், பல்கிப் பெருகுவதாலும், தீவிர இரத்தப் புற்றுநோய்க்கு உடனடி மருத்துவ சிகிச்சை அவசியமாகிறது; இல்லாவிடில் இவை ரத்தவோட்டத்தில் கலந்து உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவி விடும். குழந்தைகளுக்கு வரும் ரத்தப் புற்று நோய்களில் இந்த அக்யூட் வகைகளே மிகவும் பொதுவாகக் காணப்படுபவையாகும்.
 • ஒரளவு முதிர்ச்சியடைந்த, ஆனாலும் அசாதாரணமான, வெள்ளை ரத்த அணுக்களின் மிக அதிகமான படிமங்களால் உணர்த்தப்படுவது நாள்பட்ட இரத்தப் புற்றுநோய். பொதுவாகப் பல மாதங்கள் அல்லது வருடங்கள் வரை அதிகரிப்பதற்கான கால அளவு கொண்டுள்ள இவை, சாதாரணமான அணுக்களை விட மிக அதிக அளவில் அணுக்களை உண்டாக்குகின்றன. இதனால், ரத்தத்தில் பல அசாதாரண வெள்ளை ரத்த அணுக்கள் உருவாகின்றன. நாள்பட்ட இரத்தப் புற்றுநோய்க்கு உடனடி சிகிச்சை தேவைப்படும். ஆனால் சில சமயம் சிகிச்சை மிகத் திறனுள்ளதாக அமைவதை உறுதி செய்வதற்காக, மிகவும் தீவிரமான வகைகளை சிகிச்சைக்கு முன்பு சில காலத்திற்கு கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும். நாள்பட்ட இரத்தப் புற்றுநோய் வயதானவர்களில் ஏற்படுகிறது. ஆனால், மருத்துவக் கோட்பாடுகளின்படி, இது எந்த வயதுக் குழுவிலும் உண்டாகலாம்.

மேலும், எந்த வகை ரத்த அணு பாதிப்படைகிறது என்பதைப் பொறுத்து இந்த நோய்கள் வகைப்படுத்தப்படுகின்றன. இதன்படி இரத்தப் புற்றுநோய் என்பது நிணநீர்ம (லிம்ஃபோபிளாஸ்டிக்) அல்லது நிணநீர்க்கல் (லிம்ஃபோசைடிக்) இரத்தப் புற்றுநோய் என்றும் சாற்றனைய இரத்தப் புற்றுநோய் என்றும் பிரிக்கப்படுகிறது.

 • நிண நீர்ம இரத்தப் புற்று நோய்களில், புற்று நோய்க்கான மாற்றம் ஒரு குறுகிய, பொதுவாக நோயெதிர்ப்பு அமைப்பு அணுக்களான, நிண அணுவில் உருவாகிறது. மிகப் பெரும்பான்மையான நிணநீர்ம இரத்தப் புற்றுநோய்கள் பி செல் எனப்படும் ஒரு குறிப்பிட்ட நிண நீர்மத்தின் துணைப்பிரிவை ஈடுபடுத்துகின்றன.
 • சாற்றனைய இரத்தப் புற்றுநோய்களில், புற்று நோய்க்கான மாற்றம், பொதுவாக சிவப்பு ரத்த அணுக்கள், வெள்ளை அணுக்களின் மற்ற வகைகள் மற்றும் ரத்த வட்டுக்கள் ஆகியவற்றை உருவாக்கும் ஒரு வித மஜ்ஜை அணுவில் உருவாகிறது.

இந்த இரண்டு வகைகளையும் இணைத்து, மொத்தமாக பிரதானமாக நான்கு வகைகள் உள்ளன:

அணுவின் வகை தீவிரமானது நாள்பட்டது
நிணநீர்மை இரத்தப் புற்றுநோய்
தீவிர நிணநீர்மை இரத்தப் புற்றுநோய்(ஏஎல்எல்) நாள்பட்ட நிணநீர்மை இரத்தப் புற்றுநோய்(சிஎல்எல்).
சாற்றனைய இரத்தப் புற்றுநோய்
(மேலும் "மைலாய்ட்" அல்லது "நான்லிம்ஃபோசைடிக்")
தீவிர சாற்றனைய இரத்தப் புற்று நோய் (ஏஎம்எல்) நாள் பட்ட சாற்றனைய இரத்தப் புற்று நோய் (சிஎம்எல்)

பிரதானமான இந்தப் பிரிவுகளுக்குள், பல குறிப்பான உட்பிரிவுகளும் உள்ளன. இறுதியாக முடியணு இரத்தப் புற்றுநோய் மற்றும் டி-செல் நிணநீர்மைக்கு ஏதுவான இரத்தப் புற்றுநோய் ஆகியவை இந்த வகைப்படுத்துதலுக்கு அப்பாற்பட்டு இருப்பதாகப் பொதுவாகக் கருதப்படுகின்றன.

 • தீவிரமான நிணநீர்ம இரத்தப் புற்றுநோய் (ஏஎல்எல்) என்பது தான் மிகவும் பொதுவாக சிறு குழந்தைகளில் காணப்படும் இரத்தப் புற்றுநோயாகும். இது வயது முதிர்ந்தவர்களையும், குறிப்பாக 65 அல்லது அதற்கு மேற்பட்ட வயதானவர்களை, பாதிக்கும். இதற்கான பொதுவான சிகிச்சை முறைமைகள் வேதிச் சிகிச்சை மற்றும் கதிர்வீச்சுச் சிகிச்சை ஆகியவற்றை ஈடுபடுத்துகின்றன. உயிர் பிழைப்பது என்பது வயதைப் பொறுத்ததாக அமைகிறது: குழந்தைகளில் 85 சதவிகிதம், வயது வந்தவர்களில் 50 சதவிகிதமாகவும் இது உள்ளது.[1]

இதன் உட்பிரிவுகளில், ப்ரிகர்சர் பி அக்யூட் லிம்ஃபோபிளாஸ்டிக் லுகேமியா, ப்ரிகர்சர் டி அக்யூட் லிம்ஃபோபிளாஸ்டிக் லுகேமியா, பர்கிட்'ஸ் லுகேமியா மற்றும் அக்யூட் பைஃபினோடைபிக் லுகேமியா ஆகியவை அடங்கும்.

 • தீவிர நிணநீர்மை இரத்தப் புற்றுநோய் (சிஎல்எல்) என்பது பொதுவாக 55 வயதிற்கும் அதிகமானவர்களைப் பாதிக்கிறது. சில வேளைகளில், இளைஞர்களிலும் ஏற்படுகிறது. ஆனால், கிட்டத்தட்ட குழந்தைகளை இது பாதிப்பதே இல்லை என்று சொல்லலாம். இதில் பாதிக்கப்படுபவர்களில் மூன்றில் இரண்டு நபர்கள் ஆண்களாவார்கள். இதில் ஐந்து வருடம் உயிர் பிழைப்பது என்பது 75 சதவிகிதமாக உள்ளது.[2] இது குணப்படுத்த முடியாதது. ஆனால், திறனுள்ள பல சிகிச்சை முறைமைகள் உள்ளன. இதன் உட்பிரிவான பி செல் நிண நீர்மை ஏதுவான இரத்தப் புற்றுநோய் மிகவும் தீவிரமான ஒரு நோய்.
 • தீவிர சாற்றனைய இரத்தப் புற்றுநோய் (Acute Myelogenous Leukemia) பொதுவாக குழந்தைகளை விட வயது வந்தவர்களிடமும், பெண்களை விட ஆண்களிடமும் அதிக அளவில் ஏற்படுகிறது. ஏஎம்எல் வேதிச்சிகிச்சை கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் ஐந்து வருடம் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு 40 சதமாகும்.[3] ஏஎம்எல்லின் உட்பிரிவுகளில், அக்யூட் ப்ரோமிஎலொசைடிக் லுகேமியா, அக்யூட் மைலோபிளாஸ்டிக் லுகேமியா மற்றும் அக்யூட் மெகாகர்யொபிளாஸ்டிக் லுகேமியா ஆகியவை அடங்கும்.
 • க்ரோனிக் மைலோஜினியஸ் லுகேமியா (சிஎம்எல்) பொதுவாக வயது வந்தவர்களிடையே உண்டாகிறது. குழந்தைகளும், மிகச் சிறிய அளவில், இந்த நோய்க்கு ஆளாகிறார்கள். இதற்கான சிகிச்சை இமாடினிப் (க்லீவெக்) அல்லது மற்ற மருந்துகளைக் கொண்டு அளிக்கப்படுகிறது. இதில் ஐந்து வருட உயிர் பிழைப்புக்கான வீதம் 90 சதமாகும்.[4][5] இதன் ஒரு உட்பிரிவு க்ரோனிக் மானோசைடிக் லுகேமியா.
 • சில சமயங்களில் முடியணு இரத்தப்புற்று நோய் (ஹெச்சிஎல்), சிஎல்எல்லின் ஒரு உட்பிரிவாகக் கருதப்படுகிறது. ஆனால், இது இந்த அமைப்பில் மிகச் சரியாகப் பொருந்துவதில்லை. இதில் பாதிக்கப்படுபவர்களில் 80 சதம் வயது வந்த ஆண்கள். சிறு குழந்தைகளிடம் இது ஏற்படுவதாக அறிவிக்கப்படவில்லை. ஹெச்சிஎல் நோயைக் குணப்படுத்த முடியாது, ஆனால் எளிதாக சிகிச்சை அளிக்கலாம். இதில் பத்து வருடங்களுக்கான உயிர் பிழைப்பு 96 முதல் 100 சதம்.[6]
 • டி-செல் ப்ரோலிம்ஃபோடிக் லுகேமியா (டி-பிஎல்எல்) என்பது வயது வந்தவர்களைப் பாதிக்கும் மிகவும் அரிதான மற்றும் தீவிரமான ரத்தப் புற்று நோய்; எதனாலோ பெண்களை விட அதிகமாக ஆண்களிடமே இந்த நோய் கண்டறியப்பட்டுள்ளனர்.[7] இது அரிதானதாகக் கூறப்பட்டாலும், மிகவும் பொதுவான முதிர்ந்த டி செல்களை ஈடுபடுத்தும் இரத்தப்புற்று நோயாகும்; ஏறத்தாழ மற்ற இரத்தப்புற்று நோய்கள் அனைத்தும் பி செல்களையே ஈடுபடுத்துகின்றன.[8] இதற்கு சிகிச்சை அளிப்பது மிகவும் கடினம், மற்றும் இதில் உயிர் பிழைப்பது என்பது மையமாக மாதக் கணக்கிலேயே உள்ளது.
 • லார்ஜ் க்ரான்யுலர் லிம்ஃபோசைடிக் லுகேமியா என்பது டி செல் அல்லது என்கே செல்லை ஈடுபடுத்துகிறது; பி செல்களை ஈடுபடுத்தும் முடியணு இரத்தப்புற்று நோய் போல இதுவும் அரிதானது; ஆனால் சுறுசுறுப்பற்ற (அதாவது தீவிரம் அல்லாத) இரத்தப்புற்று நோயாகும்.

குறிகளும் அறிகுறிகளும்[தொகு]

தீவிரமான அல்லது நாள்பட்ட இரத்தப்புற்று நோயின் பொதுவான அறிகுறிகள்.[9]

எலும்பு மஜ்ஜையில் சாதாரணமாக இருக்கும் எலும்பு மஜ்ஜை அணுக்களை அகற்றி அவற்றின் இடத்தில் முதிராத வெள்ளை அணுக்களை நிரப்புவதால், எலும்பு மஜ்ஜை சேதமடைகிறது. இதனால் ரத்தம் உறைவதற்குத் தேவையான ரத்த வட்டுக்கள் குறைகின்றன. இதன் பொருள் என்னவென்றால், இரத்தப்புற்று நோய் நோயாளிகளுக்கு எளிதில் காயம் ஏற்பட்டு, ரத்தப்பெருக்கு மிக அதிக அளவில் உண்டாகலாம் அல்லது ஊசி முனை ரத்தப் பெருக்குகள் பெடெசியா உருவாகலாம்.

பெதோஜெனுடன் போராடும் வெள்ளை ரத்த அணுக்கள் அழுத்தப்பட்டோ அல்லது இயக்கமற்றோ செய்யப்படலாம். இதனால் ஒரு நோயாளியின் நோயெதிர்ப்பு அமைப்பு ஒரு சாதாரண தொற்றுடன் போராட முடியாமல் போகலாம்; அல்லது இது உடலின் மற்ற செல்களைத் தாக்கத் தொடங்கலாம். இரத்தப்புற்று நோய், உடலின் நோயெதிர்ப்பு அமைப்பை செயலற்றதாகச் செய்து விடுவதால், சில நோயாளிகள் தொண்டை அழற்சி, வாய்ப் புண்கள் அல்லது வயிற்றுப் போக்கு போன்ற தொற்று நோய்கள் தொடங்கி உயிருக்கு ஆபத்தான நிமோனியா மற்றும் சந்தர்ப்பம் பொறுத்து உருவாகும் தொற்று நோய்கள் வரை பலவற்றிற்கும் அடிக்கடி ஆளாகிறார்கள்.

இறுதியாக, சிவப்பு ரத்த அணுக்களின் குறைபாடு அனிமியா எனப்படும் ரத்தச் சோகையில் விளைந்து, டிஸ்பனியா மற்றும் பல்லோர் ஆகியவற்றை ஏற்படுத்தும். சில நோயாளிகள் வேறு அறிகுறிகளையும் அனுபவிக்கிறார்கள்.

இவை காய்ச்சல், குளிர், இரவில் வியர்த்தல் மற்றும் குளிர்காய்ச்சல் போன்ற அறிகுறிகள் அல்லது களைப்பாக உணர்தல் போன்ற சுகவீனங்களை உணர்வதை உள்ளடக்கியுள்ளன. சில நோயாளிகள் குமட்டல், ஈரல் மற்றும் மண்ணீரல் ஆகியவற்றின் வீக்கத்தினால் வயிற்றில் பாரமாக உணர்தல் போன்றவற்றை அனுபவிக்கிறார்கள். இது நாம் அறியாமலேயே நமது எடை குறைவதில் விளையலாம். ரத்தப் புற்று நோய் அணுக்கள் மத்திய நரம்பு மண்டலத்தை தாக்கி விட்டால், பிறகு நரம்பியல் தொடர்பான (மிகவும் குறிப்பாக தலைவலி போன்ற) அறிகுறிகள் ஏற்படலாம்.

இரத்தப்புற்று நோய் தொடர்பான அறிகுறிகள் அனைத்துமே மற்ற நோய்களுக்கும் குறிப்பிடப்படுபவைதாம். இதனால், மருத்துவப் பரிசோதனையின் மூலமே இரத்தப்புற்று நோய் கண்டறியப்படுகிறது.

லுகேமியா என்ற சொல்லுக்கு வெள்ளை ரத்தம் என்று பொருள். இது இரத்தப்புற்று நோய் நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்கு முன்னால் மிக அதிகமான அளவில் வெள்ளை அணுக்களை கொண்டிருப்பதால் இவ்வாறு பெயர் பெற்றது.

ஒரு ரத்த மாதிரியை உரு பெருக்கிக் கருவி (மைக்ராஸ்கோப்)யின் கீழ் வைத்துப் பார்க்கும்போது, அதில் மிக அதிகமான எண்ணிக்கையில் வெள்ளை அணுக்கள் இருப்பது தெரிய வரும். அடிக்கடி, இந்த மிகையான எண்ணிக்கையில் உள்ள வெள்ளை ரத்த அணுக்கள் முதிராதவையாகவும், செயலற்றவையாகவுமே இருக்கும். இந்த அதிக எண்ணிக்கையிலான அணுக்கள், உடலில் மற்ற அணுக்களின் அளவினோடும் இடைபடக் கூடும்; இதனால், ரத்த அணு எண்ணிக்கையில் ஒரு சமமற்ற நிலை உருவாகும்.

சில இரத்தப்புற்று நோய் நோயாளிகள், வழக்கமான ரத்த அணு எண்ணிக்கைச் சோதனையில் பெரும் அளவில் வெள்ளை ரத்த அணுக்களைக் கொண்டிருப்பதில்லை. கொஞ்சம் அரிதான இந்த நோய் நிலை அலுகேமியா என்றழைக்கப்படுகிறது. எலும்பு மஜ்ஜையில் புற்று நோயுண்டாக்கும் வெள்ளை ரத்த அணுக்கள் இருக்கின்றன, மேலும் இவை ரத்த அணுக்களின் சாதாரணமான உற்பத்திக்கும் இடையூறு விளைவிக்கின்றன. இருப்பினும், இந்த இரத்தப்புற்று நோய் அணுக்கள் ரத்தவோட்டத்தில் நுழையாது, எலும்பு மஜ்ஜையிலேயே தங்கி விடுகின்றன. இங்கிருந்து இவை ஒரு ரத்தப் பரிசோதனையில் தெரிய வருகின்றன. இந்த வகையான அலுகேமியா நோயாளிக்கு ரத்தவோட்டத்தில் இருக்கும் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை சாதாரண அளவிலோ அல்லது குறைந்த அளவிலோ இருக்கலாம். இந்த அலுகேமியா, நான்கு இரத்தப்புற்று நோய் வகைகளில் எந்த வகையில் வேண்டுமானாலும் தோன்றலாம். இது பொதுவாக முடியணு இரத்தப்புற்று நோய் வகையின் கீழ் குறிப்பாகக் காணப்படுகிறது.

காரணங்கள்[தொகு]

இரத்தப்புற்று நோயின் பல வகைகளுக்கும் ஒரு குறிப்பிட்ட காரணம் என்று ஒன்று அறியப்படவில்லை. இதன் பலவகைகளுக்கும் பல வகையான காரணங்கள் இருக்கின்றன. அறியப்பட்ட காரணங்களில், இயற்கையான மற்றும் செயற்கையான அயன்படுத்திய கதிர்வீச்சு, ஹ்யூமன் டி-லிம்ஃபோசைடிக் வைரஸ் போன்ற நச்சுரியித் தொற்றுக்கள், சில ரசாயனங்கள், குறிப்பாக பென்சைன் போன்றவை மற்றும் முன்பிருந்த புற்று நோய் திசுக்களுக்காக அளிக்கப்பட்ட கார அமிலமாக்கும் வேதிச்சிகிச்சை ஆகியவை அடங்கும்.[10][11][12]


தீவிர நிணநீர்மை இரத்தப் புற்றுநோயினை உருவாக்கும் ஆபத்தை ஒரு சிறிய அளவு அதிகரிப்பதில் புகையிலைப் பழக்கத்திற்கு தொடர்புண்டு.[10] சில நேரங்களில் தாயிடமிருந்து கருவிற்குக் கடத்தப்படுவதும் அறிவிக்கப்பட்டுள்ளது.[10]

மற்ற வகையான புற்று நோய்களைப் போலவே, இரத்தப் புற்றுநோயும், மரபணுவில் திசு மரபுப் பிறழ்வின் காரணமாக விளைந்து, இதனால், அங்கோஜீன்களை செயல்படுத்துவதிலோ அல்லது புற்று நோய்க்கட்டி எதிர்ப்பணுவை செயலிழக்கச் செய்வதிலோ ஈடுபடுகிறது; மற்றும் அணுக்களின் இறப்பு, அவற்றின் வகையாக்கப் பிரிவு ஆகியவற்றிற்கும் இடையூறாகிறது. இந்த மரபுப் பிறழ்வுகள் உடனடியாக நிகழலாம். அல்லது கதிர்வீச்சு அல்லது புற்று நோயுண்டாக்கும் பொருட்கள் ஆகியவற்றாலும், மேலும் மரபியல் தொடர்பான காரணங்களினாலும் உருவாகலாம். நோயாளிகள் பற்றிய ஆய்வுகளில் பென்சைன் மற்றும் தலைச்சாயம் போன்ற பெட்ரோலிய வேதிப் பொருட்களின் பயன்பாட்டுடனும் இது தொடர்பு படுத்தப்பட்டுள்ளது. சில வகை இரத்தப் புற்றுநோய்களுக்கு நச்சுயிரிகளும் தொடர்புறுகின்றன. உதாரணமாக, ஹ்யூமன் இம்யூனோ டெஃபிஷினசி நச்சுயிரி அல்லது ஹ்யூமன் டி-லிம்ஃபோட்ரோபிக் நச்சுயிரி (அடல்ட் டி-செல் லுகேமியா / லிம்ஃபோமா என்பதை விளைவிக்கும் ஹெச்டிஎல்வி-1 மற்றும் -2) போன்ற நச்சுயிரித் தொற்றுக்களுடன் சில ஏஎல்எல் நோய்கள் தொடர்புற்றுள்ளன. இருப்பினும், சில நுண்ணுயிர்களுக்கு வெளிப்படுத்தப்படுவது, குழந்தைகளிடம் இரத்தப் புற்றுநோய்க்கு எதிரான பாதுகாப்பை குறைந்த அளவில் உருவாக்கலாம் என்று ஒரு அறிக்கை உரைக்கிறது.

சிலர் மரபணுக்கள் ரீதியாக இரத்தப் புற்றுநோய்க்கு ஏதுவான நிலையில் உள்ளனர். இந்த ஏதுவான நிலையை குடும்பத்தின் மருத்துவ வரலாறுகளும் மற்றும் இரட்டையர்களைப் பற்றிய ஆய்வுகளும் தெரிவிக்கின்றன.[10] பாதிக்கப்பட்டவர்கள் ஒரு அணுவை மட்டுமோ அல்லது பல அணுக்களையோ பொதுவாகக் கொண்டிருக்கலாம். சில நேரங்களில், சில குடும்பங்களில் அதன் மற்ற உறுப்பினர்களைப் போல அனைவரும் ஒரே வகையான இரத்தப் புற்றுநோயை உருவாக்கத் தலைப்படுகிறார்கள். சில குடும்பங்களில் பாதிப்புக்குள்ளானவர்கள் வெவ்வேறு வகை இரத்தப் புற்றுநோய்கள் அல்லது அது தொடர்பான ரத்தப் புற்று நோய்களுக்கு ஆளாகிறார்கள்.[10]

மரபியல் தவிர, அணுக்கோல் அசாதாரணங்களைக் கொண்டவர்களும், சில வகையான மரபியல் சார்ந்த நிலைகளைக் கொண்டவர்களும் இரத்தப் புற்றுநோய்க்கான ஆபத்திற்கு அதிக அளவில் வெளிப்படுகிறார்கள்.[11] உதாரணமாக, ட்வுன் சின்ட்ரோம் என்னும் குறைபாடு உள்ள நபர்கள் தீவிர இரத்தப் புற்றுநோயின் சில வகைகளுக்கான ஆபத்தை அதிக அளவில் கொண்டிருப்பார்கள். ஃப்ராங்கொனி அனிமியா, தீவிர நிணநீர்மை இரத்தப் புற்றுநோய்க்கான ஒரு ஆபத்துக் காரணியாக கூறப்படுகிறது.[10]

அயனிப்படுத்துமை முறைமையில் அல்லாத கதிர்வீச்சு இரத்தப் புற்றுநோய்க்குக் காரணமாகிறதா என்பது பல வருடங்களாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இண்டர்நேஷனல் ஏஜென்சி ஃபார் ரிசர்ச் ஆன் கான்சர் என்னும் நிபுணர் குழு இயற்கையாகவும் மற்றும் மின்சார சக்தியின் உற்பத்தி, கடத்துதல் மற்றும் பயன்பாடு ஆகியவற்றின்போது உருவாகும் நிலையான மற்றும் மிகவும் குறைந்த அலைவரிசையுடைய மின்காந்த சக்தி பற்றிய விரிவான ஆய்வு ஒன்றை நடத்தியது.[13] ஈஎல்எஃப் காந்த சக்திப் புலங்கள் (மின்சக்தி அல்ல) அதிக அளவுகளில் குழந்தைப் பருவ இரத்தப் புற்றுநோயினை உண்டாக்கும் என்பதற்கு மிகக் குறைவான ஆதாரம் இருப்பதாக அது முடிவு கட்டியது. குறிப்பிடத்தக்க அளவுகளில் ஈஎல்எஃப் காந்தப் புலங்களுக்கு வெளிப்படுதல், இந்தக் காந்தப் புலங்களுக்கு வெளிப்படும் குழந்தைகளில் இரத்தப் புற்றுநோய்க்கான ஆபத்தை இரண்டு மடங்கு அதிகமாக உருவாக்கலாம்.[13] இருப்பினும், கடைப்பிடிக்கப்பட்ட நெறிமுறைகள் மற்றும் அபிப்பிராயங்கள் ஆகியவற்றில் இருக்கக் கூடிய தவறுகள் இந்த ஆபத்தை மிகைப் படுத்திக் கூறுவதற்கான வாய்ப்புண்டு என்றும் இந்த அறிக்கை கூறுகிறது[13] வயது வந்தவர்களில் இரத்தப் புற்றுநோய் அல்லது வேறு எந்த புற்று நோய்த் திசுவுடனுமான தொடர்புக்கான ஆதாரம் கிடைக்கப் பெறவில்லை.[13] இருப்பினும் அத்தகைய அளவுகளில் ஈஎல்எஃப்களுக்கு வெளிப்படுவது என்பது சாதாரணமாக நடக்கும் ஒன்றல்ல. எனவே, பின்னாளில் அவ்வாறு ஈஎல்எஃப்களுக்கு வெளிப்படுவது ஒரு காரணமாக நிரூபிக்கப்பட்டாலும், அது அந்த வருடத்திய மொத்த நோய்க்கான நிகழ்வுகளில் 0.2 முதல் 4.95 சதம் வரையே இருக்கக் கூடும் என்று உலக சுகாதார மையம் முடிவாக உரைக்கிறது.[14]

இரத்தப் புற்றுநோய்க்கான காரணங்கள் கண்டறியப்படும்வரை, அந்த நோயைத் தடுப்பதற்கான வழியேதும் இல்லை. அவ்வாறு காரணங்கள், உதாரணமாக இயற்கையில் நிகழும் பின்புலக் கதிர் விச்சு, கண்டு பிடிக்கப்பட்டாலும், அவை உடனே கட்டுப்படுத்தப்படக் கூடியனவாக இல்லாமல் இருக்கலாம். எனவே நோய் தடுக்கப்படுவதற்கு அது குறிப்பிடும் வகையில் உதவாமல் போகலாம்.

சிகிச்சை[தொகு]

இரத்தப் புற்றுநோயின் பல வகைகளுக்கு மருந்து தொடர்பான சிகிச்சை அளிக்கப்படுகின்றன. சில வகைகளுக்கு கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சில நேரங்களில் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை உதவிகரமாக உள்ளது.

தீவிர நிணநீர்மை இரத்தப் புற்றுநோய்(ஏஎல்எல்)[தொகு]

மேலும் தகவல்களுக்கு: Acute lymphoblastic leukemia#Treatment

ஏஎல்எல் நோயை நிர்வகிப்பது என்பது எலும்பு மஜ்ஜையைக் கட்டுப்படுத்துவது மற்றும் உடல் முழுவதுற்குமான நோய் சிகிச்சை முறை ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. மேலும், சிகிச்சையானது இரத்தப் புற்றுநோய் அணுக்கள் உடலின் இதர பகுதிகளுக்கு, குறிப்பாக மைய நரம்பு மண்டலத்திற்கு (சிஎன்எஸ்), செல்லாமல் தடுக்க வேண்டும். இதற்காக ஒவ்வொரு மாதமும் லம்பார் பங்க்சர் செய்யப்படுகிறது. பொதுவாக எல்லா சிகிச்சைகளுமே பல கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

 • எலும்பு மஜ்ஜையைக் குறைப்பதற்கான தூண்டுதல் முறைமையிலான வேதிச்சிகிச்சை வயது வந்தவர்களுக்கு பொதுவாக இம்முறையில் ப்ரிட்னிசோன், விங்க்ரிஸ்டைன், மற்றும் அந்த்ராசைக்ளின் ஆகிய மருந்துகள் அளிக்கப்படும். மற்ற மருத்துவங்கள் எல்-அஸ்பாராஜினாஸ் அல்லது சைக்ளோஃபாஸ்பாமைட் ஆகியவற்றைக் கொண்டிருக்கலாம். குறைந்த பட்ச ஆபத்துள்ள ஏஎல்எல் கொண்டுள்ள குழந்தைகளுக்கு, ஒரு வரைபடுத்தப்பட்ட மூன்று மருந்துகள் (ப்ரிட்னிசோன், எல்-அஸ்பாராஜினாஸ் மற்றும் விங்க்ரிஸ்டைன்) ஆகியவை சிகிச்சையின் முதல் மாதத்தில் அளிக்கப்படுகிறது.
 • மீதமிருக்கும் இரத்தப் புற்றுநோய் அணுக்களை ஒழித்துக் கட்ட, திரட்டு சிகிச்சை அல்லது தீவிரமாக்கப்பட்ட அளிக்கப்படும். திரட்டுச் சிகிச்சை என்பதற்குப் பல வகையான அணுகல்கள் உள்ளன. ஆனாலும், உதாரணத்திற்குச் சொல்வதென்றால் இது ஒரு சில மாதங்களுக்கு அதிக அளவில் ஒன்றிற்கும் மேற்பட்ட மருந்துகளைக் கொண்டு சிகிச்சை அளிப்பதாகும் மிதமான மற்றும் சராசரி ஏஎல்எல் ஆபத்தைக் கொண்டுள்ள நோயாளிகளுக்கு மெதொட்ரெக்சைட் மற்றும் 6-மெர்கப்டொப்யூரைன் (6-எம்பி) போன்ற ஆண்டிமெடபாலைட் மருந்துகளைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மிகவும் அதிக ஆபத்துள்ள நோயாளிகளுக்கு இவற்றின் அதிக மருந்தளவுகளோடு கூடுதல் மருந்துகளும் அளிக்கப்படுகின்றன.
 • மிகவும் அதிக ஆபத்துள்ள நோயாளிகளுக்கு புற்று நோய் அவர்களின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்திற்குச் செல்லாமல் தடுப்பதற்கு சிஎன்எஸ் ப்ரோஃபிலாக்சிஸ் தெரா பி (தடுப்பு மருத்துவம்) அளிக்கப்படுகிறது. பொதுவாக ப்ரோஃபிலாக்சிஸ் என்பது தலையில் கதிர் வீச்சு கொடுக்கப்படுவதையும், மற்றும்/ அல்லது நேரடியாக முதுகெலும்பில் மருந்தைச் செலுத்துவதையும் உள்ளடக்கும்.
 • பராமரிப்பு மருத்துவம் என்பது நோயின் அளவு குறைக்கப்பட்டதும் அது மீண்டும் வராதிருக்க வேதிச்சிகிச்சை முறையில் மருந்தளிப்பதாகும். பொதுவாக இந்த சிகிச்சை முறையில் குறைந்த மருந்தளவுகளே கொள்ளப்படும் மற்றும் இது மூன்று வருடங்கள் வரை கூட தொடர்ந்திருக்கும்.
 • இதற்கு மாற்றாக, மிக அதிக ஆபத்துள்ள அல்லது புற்று நோய் மீண்டு விட்ட நோயாளிகளுக்கு, அல்லோஜனிக் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை உகந்ததாக இருக்கும்.

நாள்பட்ட நிணநீர்மை இரத்தப் புற்றுநோய்(சிஎல்எல்)[தொகு]

மேலும் தகவல்களுக்கு: Chronic lymphocytic leukemia#Treatment

சிகிச்சை அளிப்பதற்கான முடிவு

தனிப்பட்ட நோயாளியின் அறிகுறிகள் மற்றும் நோயின் நிலை ஆகியவற்றின் அடிப்படையில்தான் இரத்தவியல் நிபுணர்கள் சிஎல்எல் சிகிச்சையை தீர்மானிக்கிறார்கள். பல் சிஎல்எல் நோயாளிகள் குறைந்த அளவு நோயைக் கொண்டிருக்கிறார்கள், இதற்கு எந்த வகையான சிகிச்சையினாலும் பலன் இருப்பதில்லை. பல நேரங்களில், சிஎல்எல் தொடர்பான கோளாறுகள் உடைய சில தனிப்பட்ட நபர்கள் அல்லது முற்றிய நிலையில் நோய் கொண்டவர்கள் ஆகியோரே சிகிச்சையினால் பலன் அடைகிறார்கள். பொதுவாக சிகிச்சை அளிக்கப்படுவதற்குத் தேவையான அறிகுறிகளாவன:

 • குறைந்து வரும் இரத்த சிவப்பு அணுக்கள் அல்லது ரத்த வட்டுக்களின் எண்ணிக்கை.
 • நோயின் பிற்பட்ட கட்டங்களுக்கு முன்னேற்றமடைதல்.
 • நிண முடிச்சு அல்லது மண்ணீரல் ஆகியவற்றில் நோய் தொடர்பான வலியுடன் கூடிய வளர்ச்சி
 • நிணநீர்மம் உருவாகும் வீதம் அதிகரித்தல்

சிகிச்சைக்கான ஒரு உதாரண அணுகல்

தற்போதிருக்கும் சிகிச்சை முறைமைகளினால் சிஎல்எல்லைக் குணப்படுத்துவது சாத்தியமாக இல்லை. முதன்மையான சிகிச்சையானது வேதிச்சிகிச்சையுடன் கூட்டு மருத்துவமாக குளோராம்புசில் அல்லது சைக்ளோஃபாஸ்ஃபமைட் மற்றும் ப்ரிட்னிசோன் அல்லது ப்ரிட்னிசொலொன் போன்ற கார்டிகோஸ்ட்ரையாட் ஆகிய மருந்துகளை அளிப்பதாகும். கார்டிகோஸ்ட்ராய்டை அளிப்பதனால் உள்ள ஒரு கூடுதலான பலன், இது இம்யூனோகீமொலைடிக் அனிமியா அல்லது இம்யூன் மெடிடேடட் த்ராம்போசைடொபெனியா போன்ற தானியங்கு நோயெதிர்ப்பு தொடர்புடைய நோய்களையும் கட்டுப்படுத்தும். நோய் இதற்குக் கட்டுப்படாத நேரங்களில், ஃப்ளூடார்பைன், பெண்டொஸ்டாடின் அல்லது க்ளாட்ரிபைன் போன்ற ந்யூகியோசைட் கொண்டு ஒற்றை மருந்து சிகிச்சை பலனளிக்கக் கூடும். இளம் வயதினருக்கு அல்லொஜெனிக், ஆடோலோகஸ், எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை ஆகியன உகந்ததாக இருக்கலாம்.

தீவிர சாற்றனைய இரத்தப் புற்றுநோய் (ஏஎம்எல்)[தொகு]

மேலும் தகவல்களுக்கு: Acute myeloid leukemia#Treatment

ஏஎம்எல்லுக்கான சிகிச்சையில் பல்வேறு புற்றுநோயெதிர்ப்பு மருந்துகள் திறனுள்ளவையாக உள்ளன. நோயாளியின் வயது மற்றும் ஏஎம்எல்லின் பிரிவு ஆகியவற்றைப் பொறுத்து நோய்க்கான சிகிச்சை ஓரளவு மாறுபடுகிறது. மொத்தத்தில் எலும்பு மஜ்ஜையைக் குறைப்பதும் மற்றும் முழுமையான (உடல் முழுவதற்குமான) சிகிச்சையை அளிப்பதும், அதே நேரம் மைய நரம்பு மண்டலத்திற்கு (சிஎன்எஸ்), அதுவும் பாதிப்படைந்திருக்கும் பட்சத்தில், குறிப்பான சிகிச்சை அளிப்பதும் இதன் செயல்திட்டமாகும்.

பொதுவாக புற்று நோய் சிகிச்சை நிபுணர்கள் முதலில் வேதிச்சிகிச்சையின்தூண்டுதல் கட்ட த்தின் கூட்டு மருந்துகள் முறைமையைக் கையாளுகிறார்கள். இதைப் போன்ற வேதிச்சிகிச்சைக் கூட்டு மருந்து முறைமை வழக்கமாக விரைவில் நோயணுக்கள் குறைவதற்கான பலன் மற்றும் நோய் அடங்காமல் இருப்பதற்கான குறைவான ஆபத்தையும் கொண்டிருக்கும். நோய் மீண்டும் வராதிருப்பதற்காக, திரட்டு மற்றும் பராமரிப்பு சிகிச்சைகள் கையாளப்படுகின்றன. திரட்டு சிகிச்சையில் பொதுவாக தூண்டுதல் சிகிச்சையை மீண்டும் செய்வது அல்லது கூடுதல் மருந்துகளோடு தீவிரமாக்கும் சிகிச்சை முறைமை ஆகியவை அடங்கும். இதற்கு மாறாக, பராமரிப்பு சிகிச்சையில், தூண்டுதல் சிகிச்சை முறைமையில் கொடுக்கப்படும் மருந்தளவுகளை விட குறைவான அளவுகளில் மருந்தளிக்கப்படும்

நாள்பட்ட நிணநீர்ம இரத்தப் புற்றுநோய்(சிஎம்எல்)[தொகு]

மேலும் தகவல்களுக்கு: Chronic myelogenous leukemia#Treatment

சிஎம்எல்லுக்கு சாத்தியமான சிகிச்சைகள் நிறைய உள்ளன. ஆனால், வரையறுக்கப்பட்டதும், புதிதாக நோய் கண்டறியப்பட்டவர்களுக்குமானது இமாடினிப் (க்ளீவெக்) கொண்டு அளிக்கப்படும் சிகிச்சை.[15] மற்ற புற்று நோயெதிர்ப்பு மருந்துகளுடன் ஒப்பிடுகையில், இதற்கு பக்க விளைவுகளும் குறைவு. மேலும், இதை வீட்டிலேயே வாய் வழி உட்கொள்ளலாம். இந்த மருந்தினாலேயே 90 சதம் நோயாளிகள் குறைந்த பட்சம் ஐந்து வருடங்களுக்கு[15] தம் நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க இயலும். இதனால் சிஎம்எல் நாள்பட்ட நோயாக, சமாளிக்கக் கூடியதாக இருக்கும்.

முற்றிய, கட்டுக்குள் அடக்க முடியாத நிலையில், நோயாளியால் இமாடினிபை சகித்துக் கொள்ள முடியாத போது அல்லது நோயாளி நிரந்தரமாக குணமாவதற்கான ஒரு வழியை விரும்பினால், பிறகு அல்லோஜெனிக் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை செய்யப்படலாம். இந்த நடைமுறையில், அதிக அளவில் கீமோதெராபி மற்றும் கதிர் வீச்சு சிகிச்சையும் இதனையடுத்து எலும்பு மஜ்ஜையை உகந்த ஒருவரிடமிருந்து பெற்று அதை நோயாளியின் உட்செலுத்துவதும் அடங்கும். இந்த முறைமையால் ஏறத்தாழ 30 சதம் நோயாளிகள் இறக்கிறார்கள்.[15]

முடியணு இரத்தப் புற்றுநோய் (ஹெச்சிஎல்)[தொகு]

மேலும் தகவல்களுக்கு: Hairy cell leukemia#Treatment

சிகிச்சை அளிப்பதற்கான முடிவு

பொதுவாக அறிகுறிகள் அல்லாத முடியணு இரத்தப் புற்றுநோய் உடைய நோயாளிகள் உடனடி சிகிச்சை அளிக்கப் பெறுவதில்லை. ஒரு நோயாளி குறைந்த எண்ணிக்கையிலான ரத்த அணுக்கள் கொண்டிருப்பது (உதாரணமாக, 1.0 கே/µ எல்லுக்கும் குறைந்த அளவிலான தொற்றுடன் போராடும் ந்யூட்ரோஃபில்களின் எண்ணிக்கை) , அடிக்கடி வரும் தொற்றுக்கள், காரணம் தெரியாத சிராய்ப்புக்கள், அனிமியா அல்லது சோர்வு, அதாவது நோயாளியின் தினசரி வாழ்க்கையைப் பாதிக்கும் அளவு குறிப்பிடும்படியாக இருக்கும் குறிகள் மற்றும் அறிகுறிகளைக் காட்டும்பொழுதுதான் சிகிச்சை அவசியம் என்று கருதப்படுகிறது.

சிகிச்சைக்கான ஒரு உதாரண அணுகல்

சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் வழக்கமாக ஒரு வார காலத்திற்கு தினமும் க்ளாட்ரிபைன் உட்செலுத்தப்படுவதற்கோ அல்லது தோலுக்கு அடியில் ஒரு ஊசி மூலம் செலுத்தப்படுவதற்கோ உட்படுகிறார்கள். அல்லது ஆறு மாதங்களுக்கு, ஒவ்வொரு நான்கு வார கால இடைவெளியிலும் பெண்டோஸ்டாடின் ரத்த நாளம் வழியாகச் செலுத்தப்படுகிறார்கள். பெரும்பான்மையானவர்களில், ஒரு முறை இந்த சிகிச்சை அளிப்பதே நீண்ட காலத்திற்கு நோயைக் குறைத்து விடுகிறது.

மற்ற மருத்துவங்கள் ரிடுக்சிமாப் உட்செலுத்துதல் அல்லது தானே இண்டர்ஃபெரான்-ஆல்ஃபா ஊசியிட்டுக் கொள்வது ஆகியற்றை உள்ளடக்கும். குறைந்த அளவு நோயாளிகளில், ஸ்ப்ளீனெக்டோமி எனப்படும் மண்ணீரலை அகற்றும் சிகிச்சை பலனளிக்கலாம். மற்ற நிவாரண முறைமைகள் முதலில் கூறப்பட்ட சிகிச்சையைப் போல அவ்வளவு பொதுவானவை அல்ல, காரணம் அவை வெற்றி பெறும் வீதம், க்ளாட்ரிபைன் அல்லது பெண்டோஸ்டாடினை விடக் குறைவாகவே உள்ளது.

டி-செல் நிணநீர்ம ஏதுவான இரத்தப் புற்றுநோய் (டி-பிஎல்எல்)[தொகு]

மேலும் தகவல்களுக்கு: T-cell prolymphocytic leukemia#Treatment

மிகவும் அரிதானதும், தீவிரமானதும் மற்றும் சராசரியாக ஒரு வருடம் அல்லது அதற்கும் குறைவாகவே உயிர் பிழைக்கும் சாத்தியத்தையும் கொண்டுள்ள இவ்வகை இரத்தப் புற்றுநோயாளிகளில் அதிகம் பேருக்கு உடனடி சிகிச்சை தேவைப்படும்.[16]

இந்நோய்க்கு சிகிச்சை அளிப்பது மிகக் கடினம். காரணம் தற்போது கிடைக்கப் பெறும் பெரும்பான்மையான வேதிச்சிகிச்சை மருந்துகளுக்கு இது பதிலிறுப்பதில்லை.[16]. குறிப்பிட்ட நோயாளிகளுக்கு பல விதமான சிகிச்சைகள் குறைந்த அளவு வெற்றிகரமாக கடைப்பிடிக்கப்பட்டுள்ளன: பியூரைன் அனலாகஸ் (பெண்டோஸ்டாடின், ஃப்ளூடார்பைன், க்ளாட்ரிபைன்), குளோராம்புசில் மற்றும் பல வகையிலான கூட்டு வேதியியல் மருத்துவம் (சைக்ளோஃபாஸ்ஃபமைட், டாக்சோருபிசின், விங்க்ரிஸ்டைன், ப்ரிட்னிசோன், (சிஹெச்ஓபி), சைக்ளோஃபாஸ்ஃபாமைட், விங்க்ரிஸ்டைன், ப்ரிட்னிசோன் (சிஓபி), விங்க்ரிஸ்டைன், டாக்சோருபிசின், ப்ரிட்னிசோன், எடோபிசைட், சைக்ளோஃபாஸ்ஃபாமைட், ப்ளெயோமைசின் (விஏபிஈசி-பி). முன்னர் கூறப்பட்ட சிகிச்சை முறைமைகளை விட அதிக வெற்றிகரமாக ஆலெம்டுஜுமாப் (காம்பத்) என்னும் வெள்ளை அணுக்களைத் தாக்கும் ஒரு மானோக்ளோனல் ஆண்டி பாடி (ஒற்றை நோயெதிர்ப்பணு) சிகிச்சையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.[16]

சிகிச்சைக்கு சிறந்த முறையில் பதிலிறுக்கும் நோயாளிகளில் சிலர் தங்கள் பதிலிறுப்பை திரட்டிக் கொள்ள தண்டுவட மாற்று சிகிச்சைக்கும் உட்செல்கிறார்கள்.[16]

நோயியல்[தொகு]

2004வது வருடத்தில் ஒவ்வொரு 100,000 இரத்தப் புற்றுநோய் நோயாளிகளிலும் வயது வாரியான மரண சம்பவங்கள்.[17][50][51][52][53][54][55][56][57][58][59][60][61][62]

2000ஆம் ஆண்டு உலகெங்கும் சுமார் 256,000 குழந்தைகளும், வயது வந்தவர்களும் இரத்தப் புற்றுநோயின் ஒரு வகைக்கு ஆட்பட்டனர். இதில் 209,000 பேர் இறந்து விட்டனர்.[18] இது அந்த வருடம் புற்று நோயால் ஏற்பட்ட சுமார் ஏழு மில்லியன் மரணங்களில் 3 சதவீதமாகும்; மற்றும் ஏதாவது ஒரு காரணத்தினால் ஏற்பட்ட மரணங்களில் 0.35 சதவீதமாகும்.[18] உடலின் 16 வெவ்வேறு பாகங்களை ஒப்பிடுகையில், நியோபிளாஸ்டிக் நோய்களின் பொதுவான பிரிவில் இரத்தப் புற்றுநோய் 12வது இடத்திலும், புற்று நோய் பாதிப்பு மரணங்களின் பொதுவான காரணங்களில் 11வது இடத்திலும் இருக்கிறது.[18]

ஐக்கிய அமெரிக்க நாட்டில், இந்த நோய்க்கான சிகிச்சையில் நோயளவு குறைந்து அல்லது குணமானவர்களையும் உள்ளடக்கி, சுமார் 245,000 பேர் இரத்தப் புற்றுநோயின் ஏதாவது ஒரு வகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் 2008வது வருடம் 44,270 புதிய நோயாளிகள் இரத்தப் புற்றுநோய் கொண்டிருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளனர்.[19] இது அமெரிக்காவில் உள்ள (எளிய பேசல் செல் மற்றும் ஸ்காமஸ் செல் தோல் புற்று நோய்களைத் தவிர்த்து) அனைத்து புற்று நோய்களிலுமாக 2.9 சதவீதம் மற்றும் அனைத்து வகை ரத்தப் புற்று நோய்களில் 30.4 சதவீதமாகும்.[20]

ஏதாவது ஒரு வகைப் புற்று நோயுள்ள குழந்தைகளில், ஏறத்தாழ மூன்றில் ஒரு பகுதியினர் இரத்தப் புற்றுநோய், அதிலும் அதிக அளவில், தீவிர நிணநீர்ம இரத்தப் புற்றுநோய் கொண்டுள்ளனர்.[19] வயது வந்தவர்களில் புற்று நோய் கண்டறியப்பட்டவர்களில் 3 சதம் மட்டுமே இரத்தப் புற்றுநோய் கொண்டுள்ளனர். ஆனால், புற்று நோய் வயது வந்தவர்களிடம் அதிகம் உள்ளது என்பதால், இரத்தப் புற்றுநோய் கண்டறியப்பட்டவர்களில் 90 சதத்திற்கும் மேல் வயது வந்தவர்கள்தாம்.[19]

ஆராய்ச்சி[தொகு]

இரத்தப் புற்றுநோய்க்கான காரணங்கள், நோயறிதல், சிகிச்சை மற்றும் முன்னறிவித்தல் ஆகியவற்றில் தற்போது குறிப்பிடத்தக்க அளவில் ஆய்வு நடைபெறுகிறது. எந்நேரமும் நூற்றுக்கணக்கான மருந்தக சோதனைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன அல்லது திட்டமிடப்படுகின்றன. ஆய்வுகள் திறனுள்ள சிகிச்சை முறைமைகள், நோய்க்கு சிகிச்சை அளிக்க இன்னும் சிறந்த முறைமைகள், நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வழிகள் அல்லது நோயின் தீவிரத்தைக் குறைப்பதற்கான உகந்த கவனிப்பு அல்லது சிகிச்சைக்குப் பின்னான கவனிப்பு எனப் பல பிரிவுகளிலும் கவனம் செலுத்தலாம்.

இதற்கு மருந்து கண்டு அறியப்பட்டுள்ளது, இது சென்னை அடையார் புற்று நோய் ஆராய்ச்சி மையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.

குறிப்புகள்[தொகு]

 1. Jameson, J. N. St C.; Dennis L. Kasper; Harrison, Tinsley Randolph; Braunwald, Eugene; Fauci, Anthony S.; Hauser, Stephen L; Longo, Dan L. (2005). Harrison's principles of internal medicine. New York: McGraw-Hill Medical Publishing Division. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-07-140235-7. Archived on 2007-12-28. Error: If you specify |archiveurl=, you must first specify |url=. http://web.archive.org/web/20071228221145/http://www.accessmedicine.com/content.aspx?aID=65842. 
 2. புற்று நோய் பற்றிய புள்ளி விபரங்களைக் கண்டு பிடித்தல் » புற்று நோய் புள்ளி விபரங்கள் மற்றும் புற்று நோய் புள்ளி விபர உண்மை அறிக்கைகள் » தீவிர நிணநீர்மை இரத்தப் புற்றுநோய் நேஷனல் கான்சர் இன்ஸ்டிட்யூட்
 3. Colvin GA, Elfenbein GJ (2003). "The latest treatment advances for acute myelogenous leukemia". Med Health R I 86 (8): 243–6. பப்மெட்:14582219. 
 4. ஐந்து வருட சிகிச்சைப் பின் தொடர்வில், இமாடினிப் அளிக்கப்பட்ட மைலோஜினியஸ் லுகேமியா நோயாளிகள் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்கள் மெட்ஸ்கேப் மெடிகல் ந்யூஸ் 2006.
 5. சிஎம்எல்லில் உள்ள டைரோசின் கினேஸ் தணிப்பிகளின் புதுப்பிக்கப்பட்ட விளைவுகள் பரணிடப்பட்டது 2007-12-29 at the வந்தவழி இயந்திரம் ஏஎஸ்சிஓ 2006 மாநாட்டு சுருக்கங்கள்.
 6. Else M, Ruchlemer R, Osuji N (2005). "Long remissions in hairy cell leukemia with purine analogs: a report of 219 patients with a median follow-up of 12.5 years". Cancer 104 (11): 2442–8. doi:10.1002/cncr.21447. பப்மெட்:16245328. 
 7. மாடுடெஸ், எஸ்டெலா (1998) "டி செல் நிணநீர்மை ஏதுவான இரத்தப்புற்று நோய், முதிர்ந்த போஸ்ட் தைமிக் டி செல் இரத்தப்புற்று நோய்களின் ஒரு மாறுபாடு. இது குறிப்பிடத்தக்க ஆய்வுக் கூட மற்றும் மிகவும் குறைந்த முன்னறிவிப்பு குண நலன்களைக் கொண்டது." கான்சர் கண்ட்ரோல் ஜர்னல் , வால்யூம் 5, எண் 1
 8. Valbuena JR, Herling M, Admirand JH, Padula A, Jones D, Medeiros LJ (March 2005). "T-cell prolymphocytic leukemia involving extramedullary sites". Am. J. Clin. Pathol. 123 (3): 456–64. doi:10.1309/93P4-2RNG-5XBG-3KBE. பப்மெட்:15716243. http://www.medscape.com/viewarticle/501092. 
 9. விக்கிப்பீடியா காமன்ஸில் பட விவரணைப் பக்கத்தில் அணுகலுக்கான குறிப்புகளைக் காணலாம்.
 10. 10.0 10.1 10.2 10.3 10.4 10.5 Wiernik, Peter H. (2001). Adult leukemias. New York: B. C. Decker. பக். 3–15. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-55009-111-5. 
 11. 11.0 11.1 Robinette, Martin S.; Cotter, Susan; Van de Water (2001). Quick Look Series in Veterinary Medicine: Hematology. Teton NewMedia. பக். 105. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-893441-36-9. 
 12. Stass, Sanford A.; Schumacher, Harold R.; Rock, William R. (2000). Handbook of hematologic pathology. New York, N.Y: Marcel Dekker. பக். 193–194. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8247-0170-4. 
 13. 13.0 13.1 13.2 13.3 Non-Ionizing Radiation, Part 1: Static and Extremely Low-Frequency (ELF) Electric and Magnetic Fields (IARC Monographs on the Evaluation of the Carcinogenic Risks). Geneva: World Health Organisation. 2002. பக். 332–333, 338. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:92-832-1280-0. http://monographs.iarc.fr/ENG/Monographs/vol80/index.php. 
 14. "WHO | Electromagnetic fields and public health". 2009-02-18 அன்று பார்க்கப்பட்டது.
 15. 15.0 15.1 15.2 Fausel C (October 2007). "Targeted chronic myeloid leukemia therapy: seeking a cure". J Manag Care Pharm 13 (8 Suppl A): 8–12. பப்மெட்:17970609. http://www.amcp.org/data/jmcp/pages%208-12.pdf. பார்த்த நாள்: 2009-12-02. 
 16. 16.0 16.1 16.2 16.3 Dearden CE, Matutes E, Cazin B (September 2001). "High remission rate in T-cell prolymphocytic leukemia with CAMPATH-1H". Blood 98 (6): 1721–6. doi:10.1182/blood.V98.6.1721. பப்மெட்:11535503. http://www.bloodjournal.org/cgi/pmidlookup?view=long&pmid=11535503. பார்த்த நாள்: 2009-12-02. 
 17. [49]
 18. 18.0 18.1 18.2 Mathers, Colin D, Cynthia Boschi-Pinto, Alan D Lopez and Christopher JL Murray (2001). "Cancer incidence, mortality and survival by site for 14 regions of the world.". Global Programme on Evidence for Health Policy Discussion Paper No. 13 (World Health Organization). http://www.who.int/entity/healthinfo/paper13.pdf. 
 19. 19.0 19.1 19.2 "இரத்தப் புற்றுநோய், உண்மைகளும், புள்ளி விபரங்களும்" தி லுகேமியா & லிம்ஃபோமா சொஸைட்டி 2, ஜூலை 2009ல் அணுகப்பெற்றது.
 20. Horner MJ, Ries LAG, Krapcho M, Neyman N, et al. (eds). "SEER Cancer Statistics Review, 1975–2006". Surveillance Epidemiology and End Results (SEER). Bethesda, MD: National Cancer Institute. 03 November 2009 அன்று பார்க்கப்பட்டது. Table 1.4: Age-Adjusted SEER Incidence and U.S. Death Rates and 5-Year Relative Survival Rates By Primary Cancer Site, Sex and Time Period Check date values in: |accessdate= (உதவி)CS1 maint: multiple names: authors list (link)

வெளி இணைப்புகள்[தொகு]

--

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரத்தப்_புற்றுநோய்&oldid=3497862" இருந்து மீள்விக்கப்பட்டது