இரசாப் அலி கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உஸ்தாத் இரசாப் அலி கான் (Rajab Ali Khan) (3 செப்டம்பர் 1874 நரசிங்கர், மத்தியப் பிரதேசம் – 8 சனவரி 1959 தேவாஸ், மத்தியப் பிரதேசம்) இவர் ஓர் இந்துஸ்தானிப் பாடகரும், கவிஞருமாவார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

இவர், தனது தந்தை மங்லு கானிடமிருந்து படே முகமது கானின் பாரம்பரியத்திலும், பாண்டே அலிகான் பீங்கரிடமிருந்தும் இசையை கற்றுக்கொண்டார். [1] எனவே இவரது பாணி ஜெய்ப்பூர் கரானா மற்றும் கிரானா கரானா பாணிகளின் கலவையாக இருந்தது. இவர் தேவாஸ் மற்றும் கோலாப்பூரின் அரசவைக் இசைக்கலைஞராக இருந்தார். இசைக்கச்சேரி சுற்றுப்பயணங்களையும் நிகழ்த்தினார். ஜெய்பூர் இராச்சியத்தின் இரண்டாம் ராம் சிங்கின் சபையில் இசைக்கலைஞராகவும் இருந்தார்.

1909 ஆம் ஆண்டில், மைசூர் மகாராஜாவால் இவருக்கு இசை ரத்ன பூசண் பட்டம் வழங்கப்பட்டது. 1954 இல் இவருக்கு சங்கீத நாடக அகாடமி விருது கிடைத்தது. இவரது கடைசி பெரிய இசை நிகழ்ச்சி 1957 இல் மும்பையில் நடந்தது. 

இவர் ஒரு கயாலியா மேதை என்று அறியப்பட்டார். ஆனால் இவர் ருத்ர வீணை, சித்தார், ஜலதரங்கம், கைம்முரசு இணை போன்ற இசைக்கருவிகளிலும் குறிப்பிடத்தக்க கலைஞராக இருந்தார். [1] [2] இவரது சீடர்களில் இவரது மருமகன் அமான் கான், நிவ்ருதிபுவ சர்நாயக், கணபதிராவ் தேவாஸ்கர், கிருட்டிண சங்கர் சுக்லா, கிட்டிணாராவ் மசூம்தார், ராஜபாவ் தேவ், யாசின் கான் (சாரங்கிக் கலைஞர்), மேவதி கரானாவின் ஜோதிராம் போன்றோர் அடங்குவர். இந்தூர் கரானாவின் அமீர்கான், பாக்கித்தானின் சாம் சௌராசியா கரானாவின் சலாமத் அலிகான் ஆகியோரும் இவரது இசை நுட்பங்களால் ஈர்க்கப்பட்டுள்ளனர். "இவர் மிகவும் துடிப்பான, சிக்கலான மற்றும் விரைவான இசை நுட்பங்களில் மேதையாவார்." [2]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரசாப்_அலி_கான்&oldid=3593317" இலிருந்து மீள்விக்கப்பட்டது