உள்ளடக்கத்துக்குச் செல்

அமீர் கான் (பாடகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமீர் கான்
இயற்பெயர்அமீர் கான்
பிற பெயர்கள்சுர் ரங்க்
பிறப்பு(1912-08-15)15 ஆகத்து 1912 [1]
இந்தோர், இந்தூர் அரசு, பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு13 பெப்ரவரி 1974(1974-02-13) (அகவை 61)
கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா
இசை வடிவங்கள்இந்திய பாரம்பரிய இசை
(கயால், தரானா)
தொழில்(கள்)இந்துஸ்தானி பாடல்களை பாடுபவர்[1]
இசைத்துறையில்1934-1974
வெளியீட்டு நிறுவனங்கள்ஈ.எம்.ஐ, எச்.எம்.வி, மியூசிக் டுடே, இன்ரெகோ, நினாட், நவராஸ், கொலம்பியா, தி டிவின்

அமீர் கான் (Amir Khan) (15 ஆகத்து 1912 – 13 பிப்ரவரி 1974) இவர் ஓர் இந்தியப் பாரமபரியப் பாடகராவார். இவர், இந்தூர் கரானாவின் நிறுவனர் ஆவார். [2] [1]

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

இவர், இந்தியாவின் இந்தூரில் இசைக்கலைஞர்கள் குடும்பத்தில் பிறந்தார். [3] இவரது தந்தை, பெண்டிபஜார் கரானாவின் சாரங்கி மற்றும் வீணைக் கலைஞரான சாகிமீர் கான் என்பவர், இந்தூரின் ஒல்கர்களின் அரசவையில் பணியாற்றினார். இவரது தாத்தா சேஞ்ச் கான் பகதூர் சா சாபரின் அரசவையில் பாடகராக இருந்தார். இவரது தாய் இவருக்கு ஒன்பது வயதாக இருந்தபோது இறந்து போனார். இவருக்கு பசீர் என்ற ஒரு தம்பி இருந்தார். அவர், இந்தூர், அனைத்திந்திய வானொலி நிலையத்தில் சாரங்கிக் கலைஞராகப் பணியாற்றினார். [4]

ஆரம்பத்தில் இவரது தந்தையால் சாரங்கியில் பயிற்சி பெற்றார். இருப்பினும், குரல் இசையில் இவர் கொண்டிருந்த ஆர்வத்தைப் பார்த்து, இவரது தந்தை படிப்படியாக குரல் பயிற்சிக்கு அதிக நேரம் ஒதுக்கி, மேருகண்ட் நுட்பத்தில் கவனம் செலுத்தினார். இவர், சிறு வயதிலேயே பலவிதமான பாணிகளை வெளிப்படுத்தினார். ஏனென்றால் இந்தூருக்கு வருகை தந்த ஒவ்வொரு இசைக்கலைஞரும் இவரது வீட்டிற்கு வருவார்கள். மேலும் வழக்கமாக பாரம்பரிய இந்துஸ்தானி இசையாக இருந்தார்கள். [4] [5]

அமீர்கான் 1934 இல் மும்பைக்கு குடிபெயர்ந்தார். அங்கு இவர் ஒரு சில இசை நிகழ்ச்சிகளை வழங்கினார். மேலும், பனிரெண்டுக்கும் மேற்பட்ட 78-ஆர்.பி.எம் பதிவுகளை வெளியிட்டார். இந்த ஆரம்ப நிகழ்ச்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை. தனது தந்தையின் ஆலோசனையைப் பின்பற்றி, 1936 இல் மத்தியப் பிரதேசத்தில் ராய்காத் சமஸ்தானத்தின் மகாராஜ் சக்ராதர் சிங்கின் சேவையில் சேர்ந்தார். மன்னர், சார்பாக மிர்சாபூரில் நடந்த ஒரு இசை மாநாட்டில், பல புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் கலந்து கொண்டனர். ஆனால் இவர் 15 நிமிடங்களிலேயே வெளியேற்றப் பட்டார். அமைப்பாளர் இவர் ஒரு தும்ரி பாட பரிந்துரைத்தார். ஆனால் இவர் மறுத்துவிட்டார். இவரது மனம் ஒருபோதும் தும்ரியை நோக்கியதாக இல்லை என்று கூறினார். இவர் சுமார் ஒரு வருடம் மட்டுமே ராய்காத்தில் தங்கினார். அமீர்கானின் தந்தை 1937 இல் இறந்தார். பின்னர், இவர், தில்லி மற்றும் கொல்கத்தாவில் சிறிது காலம் வாழ்ந்தார். ஆனால் இந்தியா பிரிந்த பின்னர் இவர் மீண்டும் மும்பைக்குச் சென்றார். [4]

பாடும் தொழில்

[தொகு]

அமீர்கான் கிட்டத்தட்ட சுயமாக கற்றுக் கொண்ட இசைக்கலைஞராவார். அப்துல் வாகித் கான், இரசாப் அலி கான், அமான் அலி கான் ஆகியோரின் பாணிகளால் தாக்கம் பெற்ற இவர் தனது சொந்தப் பாடும் பாணியை உருவாக்கினார். [1] [5]

இசை நிகழ்ச்சிகளில் பாடுவதைத் தவிர, இவர் திரைப்பட பாடல்களை முற்றிலும் பாரம்பரிய பாணியில் பாடினார். குறிப்பாக பைஜு பாவ்ரா, ஷபாப், ஜனக் ஜனக் பயல் பஜே போன்றத் திரைப்படங்களில் பாடினார். திரைப்படங்கள் மூலம் பாரம்பரிய இசையை மக்களுக்கு அறிமுகப்படுத்தும் இந்த முயற்சி இவரது தெரிவு நிலையையும் பிரபலத்தையும் கணிசமாக உயர்த்தியது. கலிப் பற்றிய ஆவணப்படத்திற்காக இவர் ரஹியே அப் ஐசி ஜகா என்ற ஒரு கசலைப் பாடினார்.

அமீர்கானுக்கு 1967 ஆம் ஆண்டில் சங்கீத நாடக அகாடமி விருதும் [6] 1971 இல் பத்ம பூசண் விருதும் வழங்கப்பட்டன . [7]

சொந்த வாழ்க்கை

[தொகு]

அமீர்கானின் முதல் திருமணம் சித்தார் கலைஞர் விலாயத் கானின் சகோதரி ஜீனத் என்பவருடன் இருந்தது. இந்த திருமணம் இறுதியில் தோல்வியுற்று பிரிவில் முடிந்தது. அவருடன் பரிதா என்ற ஒரு மகள் இருந்தார். இவரது இரண்டாவது திருமணம் முன்னி பாய் என்பவருடன் நடந்தத. இவர்களுக்கு அக்ரம் அகமது என்ற மகன் இருந்தார். 1965 ஆம் ஆண்டில், இவர், தும்ரி பாடகரான ஆக்ராவைச் சேர்ந்த முஷ்டாரி பேகமின் மகள் ரைசா பேகத்தை மணந்தார். முன்னி பேகம் மூன்றாவது மனைவியை ஏற்றுக்கொள்வார் என்று இவர் எதிர்பார்த்திருந்தார்; இருப்பினும், முன்னி காணாமல் போனார். அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று வதந்தி இருந்தது. [4] ரைசாவுடன் இவருக்கு , ஐதர் அமீர் என்ற ஒரு மகன் இருந்தார். இவர், பின்னர் சாபாஸ் கான் என்று அழைக்கப்பட்டார். [8]

இறப்பு

[தொகு]

கான்சாகிப் 1974 பிப்ரவரி 13 அன்று தனது 61 வயதில் கொல்கத்தாவில் ஒரு கார் விபத்தில் இறந்தார். மேலும் கொல்கத்தாவின் கோப்ரா கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். [8]

வெளி இணைப்புகள்

[தொகு]

நூலியல்

[தொகு]
  • Amarnath, Pandit (2008). Indore ke masihā: Paṇḍita Amaranathaji dwara Ustad Amir Khan sahab ke sansmaran (in Hindi). Pandit Amarnath Memorial Foundation. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7525-934-8.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  • Kumāraprasāda Mukhopādhyāẏa (2006). The Lost World of Hindustani Music. Penguin Books India. pp. 95–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-14-306199-1.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 Amir Khan - Tribute to a Maestro ITC Sangeet Research Academy website, Retrieved 20 August 2018
  2. Chawla, Bindu (26 April 2007). "Stirring Compassion of Cosmic Vibration". The Times Of India. http://timesofindia.indiatimes.com/Opinion/Speaking_Tree/Stirring_Compassion_of_Cosmic_Vibration/articleshow/1955005.cms. பார்த்த நாள்: 20 August 2018. 
  3. "Review of music CD "The Legend Lives on... Ustad Amir Khan", by Deepa Ganesh". Archived from the original on 2012-11-10. பார்க்கப்பட்ட நாள் 2020-10-25. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  4. 4.0 4.1 4.2 4.3 "Amir Khan: In Memoriam", by Suresh Chandvankar, Society of Indian Record Collectors, Mumbai Retrieved 20 August 2018
  5. 5.0 5.1 "Ustad Amir Khan", from "Great Masters of Hindustani Music" by Susheela Misra பரணிடப்பட்டது 2021-06-28 at the வந்தவழி இயந்திரம் Retrieved 20 August 2018
  6. "Sangeet Natak Akademi Awards - Hindustani Music - Vocal". Sangeet Natak Akademi. Archived from the original on 2012-02-17. பார்க்கப்பட்ட நாள் 20 August 2018.
  7. Padma Bhushan Award for Amir Khan on GoogleBooks website Retrieved 20 August 2018
  8. 8.0 8.1 "Immortal maestro (Ustad Amir Khan)". http://www.thehindu.com/arts/article145736.ece. பார்த்த நாள்: 20 August 2018. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமீர்_கான்_(பாடகர்)&oldid=3592579" இலிருந்து மீள்விக்கப்பட்டது