இயல்பு நீக்கப்பட்ட ஆல்ககால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாட்டிலில் உள்ள இயல்பு நீக்கப்பட்ட ஆல்ககால்

இயல்புநீக்கப்பட்ட ஆல்ககால் மெத்திலேற்றம் செய்யப்பட்ட மது (ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து) அல்லது இயல்புநீக்கப்பட்ட திருத்தப்பட்ட மது என்றும் அழைக்கப்படும் ஆல்ககால், [1] எத்தனால் ஆகும், இது நஞ்சு, கெட்ட-சுவை, துர்நாற்றம் வீசுதல் அல்லது குமட்டல் போன்றவற்றைச் சேர்க்க கூடுதல் பொருள்களைக் கொண்டுள்ளது. பொழுதுபோக்கு நுகர்வினை கட்டுப்படுத்த இவ்வாறான மாற்றங்கள் செய்யப்படுகிறது. இது சில நேரங்களில் பார்வைக்கு அடையாளம் தெரியப்பட வேண்டி இது சாயமேற்றப்படுகிறது. பிரிடீன், மெத்தனால், [2] அல்லது இரண்டையுமே இயல்பு நீக்கப்பட்ட ஆல்ககாலை நச்சுத்தன்மை உடையதாக மாற்ற சேர்க்க முடியும். கசப்புத் தன்மை உடைய பொருளான டீநேட்டோனியம் என்பது கசப்புத் தன்மையை அதிகரிக்க சேர்க்கப்படலாம்.

இயல்பு திரிந்த ஆல்ககால் ஒரு கரைப்பானாகவும், ஆல்ககால் எரிகலன் மற்றும் முகாம் அடுப்புகளுக்கு எரிபொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. இயல்பு நீக்கப்பட்ட ஆல்ககாலின் தொழில்துறை பயன்பாடுகளின் பன்முகத்தன்மை காரணமாக, நூற்றுக்கணக்கான சேர்க்கைப் பொருட்கள் மற்றும் இயல்பு நீக்கமாக்கும் செயல்முறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பாரம்பரியமாக முக்கிய சேர்க்கைப் பொருளாக 10% மெத்தனால், (மெத்தில் ஆல்ககால்) சேர்க்கப்பட்டு "மெத்திலேற்றம் செய்யப்பட்ட சாராயம்" என்ற சொல்லை உருவாக்குகிறது. ஐசோபுரோப்பைல் ஆல்ககால், அசிட்டோன், மெத்தில் எத்தில் கீட்டோன் மற்றும் மெத்தில் ஐசோபியூட்டைல் கீட்டோன் ஆகியவை பிற பொதுவான சேர்க்கைப் பொருள்களில் அடங்கும். [2]

ஐக்கிய அமெரிக்க நாடுகளில், இயல்பு திரிந்த ஆல்ககால் என விற்கப்படும் கலவைகள் பெரும்பாலும் மெத்தனாலை அதிக சதவீதத்தில் கொண்டிருக்கின்றன. மேலும், அவை 50% க்கும் குறைவான எத்தனாலாக இருக்கலாம்.

ஆல்ககாலை இயல்பு திரியச் செய்வது எத்தனால் மூலக்கூற்றை வேதியியல் முறையில் மாற்றாது. மாறாக, எத்தனால் மற்ற வேதிப்பொருள்களுடன் கலந்து ஒரு தவறான-சுவை, பெரும்பாலும் நச்சுத்தன்மை கொண்ட கரைசலை உருவாக்குகிறது. இந்தக் கரைசல்களில் பலவற்றிற்கு, பகுதிப்பொருள்களை பிரிக்க நடைமுறை வழி இல்லை.

பயன்கள்[தொகு]

பல நாடுகளில், மதுபானங்களின் விற்பனை வருவாய் மற்றும் பொது சுகாதார கொள்கை நோக்கங்களுக்காக பெரிதும் வரி விதிக்கப்படுகிறது. (பார்க்க பிகோவியன் வரி). ஆல்ககாலின் மீது பான வரியைத் தவிர்ப்பதற்காக நுகரப்பட மாட்டாது என்று பொருள் கொள்ளலாகாது. ஆல்ககால், இயல்பு நீக்கம் செய்யப்படவோ அல்லது சுவைக்கத் தகாத அளவிற்கு வேதிப்பொருள்கள் சேர்க்கப்படவோ வேண்டும். மதுபானத்தின் இயைபு மதுபானங்களுக்கு வரி விதிக்கும் நாடுகளில் அரசாங்க விதிமுறைகளால் இறுக்கமாக வரையறுக்கப்படுகிறது. எரிபொருள், அறுவை சிகிச்சை மற்றும் ஆய்வகப் பங்குகளை உள்ளடக்கிய பயன்பாடுகளைத் தவிர்த்து, எத்தனாலுக்கு ஒத்ததாக ஆல்ககால் பயன்படுத்தப்படுகிறது. உணவு மற்றும் பான பயன்பாடுகளுக்கும், சில வேதியியல் வினைகளுக்கும் தூய எத்தனால் தேவைப்படுகிறது. மூலக்கூறு உயிரியலில், நியூக்ளிக் அமிலங்களைத் வீழ்படிவாக்க இயல்பு திரிந்த எத்தனாலை பயன்படுத்த முடியாது. [3]

சாதாரண எத்தனாலை விட எந்தவொரு நோக்கத்திற்காகவும் இயல்பு நீக்கப்பட்ட ஆல்ககால் எந்த நன்மையையும் கொண்டிருக்கவில்லை; இது ஒரு பொது கொள்கை சமரசமாகும். நுகர்வுக்கு ஏற்ற ஆல்ககால் மீது அடிக்கடி அதிக வரி விதிக்கப்படுவதால், இயல்புநீக்கம் செய்யப்பட்ட ஆல்ககால் அத்தகைய வரிகளின்றி விற்கப்படுகிறது. விற்கப்படுவதால், குடிப்பழக்கம் தவிர்த்த பெரும்பாலான பயன்பாடுகளுக்கு இது மலிவான கரைசலாகும். தூய்மையான எத்தனாலானது எரிபொருள், கரைப்பான்கள் அல்லது மருத்துவ நோக்கங்களுக்காக மலிவாகக் கிடைத்தால், அது சிலரால் ஒரு பானமாகப் பயன்படுத்தப்படும். [4]

நச்சியல்[தொகு]

நச்சுத்தன்மையுள்ள பகுதிப்பொருள் இருந்த போதிலும், சில நேரங்களில் இது பதிலி ஆல்ககாலாக நுகரப்படுகிறது. இந்தக் கலவையில் மெத்தனால் இருந்தால் இதை உட்கொள்வது பார்வையிழப்பையோ அல்லது இறப்பையோ ஏற்படுத்தக்கூடும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Methylated Spirits". www.diamondspirit.net. பார்க்கப்பட்ட நாள் 2018-09-01.
  2. 2.0 2.1 "Ethanol Denaturants". The Online Distillery Network. 22 November 1993. Archived from the original on 10 மே 2015. பார்க்கப்பட்ட நாள் 29 டிசம்பர் 2019. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  3. Gelling, Cristy (13 June 2012). "Which Type of Ethanol Should I Use? - Bitesize Bio". Bitesize Bio (in அமெரிக்க ஆங்கிலம்). Science Squared. பார்க்கப்பட்ட நாள் 2016-04-13.
  4. Helmenstine, Anne Marie (23 March 2018). "What Is Denatured Alcohol? Composition, Examples, and Effects". ThoughtCo. பார்க்கப்பட்ட நாள் 11 March 2017.