பியூட்டனோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எதில்மெதில்கீட்டோன்[1]
Skeletal formula of butanone
Ball-and-stick model of butanone
Space-filling model of butanone
methyl ethyl ketone
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பியூட்டன்-2-ஓன்[2]
வேறு பெயர்கள்
 • எதில்மெதில்கீட்டோன்[2]
 • எதில்மெதில்கீட்டோன்
 • மெதில்எதில்கீட்டோன் (எம்இகே) (வழக்கொழிந்து போன பெயர்) ; [2])
 • மெதில்புரோப்பனோன்
 • மெதில்அசிட்டோன்
இனங்காட்டிகள்
78-93-3 Yes check.svgY
Beilstein Reference
741880
ChEBI CHEBI:28398 Yes check.svgY
ChEMBL ChEMBL15849 Yes check.svgY
ChemSpider 6321 Yes check.svgY
Gmelin Reference
25656
யேமல் -3D படிமங்கள் Image
Image
KEGG C02845 Yes check.svgY
பப்கெம் 6569
வே.ந.வி.ப எண் EL6475000
UNII 6PT9KLV9IO Yes check.svgY
பண்புகள்
C4H8O
வாய்ப்பாட்டு எடை 72.11 g·mol−1
தோற்றம் நிறமற்ற திரவம்
மணம் புதினாவின் மணம் அல்லது அசிட்டோன் போன்றது[3]
அடர்த்தி 0.8050 கி/மிலி
உருகுநிலை
கொதிநிலை 79.64 °C (175.35 °F; 352.79 K)
27.5 கி/100மிலி
மட. P 0.37[4]
ஆவியமுக்கம் 78 மிமீHg (20 °செல்சியசு)[3]
காடித்தன்மை எண் (pKa) 14.7
−45.58·10−6 செமீ3/மோல்
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.37880
பிசுக்குமை 0.43 cP
கட்டமைப்பு
இருமுனைத் திருப்புமை (Dipole moment) 2.76 D
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு தீப்பற்றக்கூடியது (F)
எரிச்சலூட்டக்கூடியது (Xi)
R-சொற்றொடர்கள் R11 R36 R66 R67
S-சொற்றொடர்கள் (S2) S9 S16
தீப்பற்றும் வெப்பநிலை −9 °C (16 °F; 264 K)
Autoignition
temperature
505 °C (941 °F; 778 K)
வெடிபொருள் வரம்புகள் 1.4–11.4%[3]
Lethal dose or concentration (LD, LC):
 • 2737 மிகி/கிகி (வாய்வழி, எலி)
 • 4050 மிகி/கிகி (வாய்வழி, சுண்டெலி)[5]
 • 12667 ppm (பாலூட்டி)
 • 13333 ppm (சுண்டெலி, 2 hr)
 • 7833 ppm (எலி, 8 hr)[5]
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
TWA 200 ppm (590 mg/m3)[3]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
TWA 200 ppm (590 mg/m3) ST 300 ppm (885 மிகி/மீ3)[3]
உடனடி அபாயம்
3000 ppm[3]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

பியூட்டனோன் (Butanone), மெதில் எதில்கீட்டோன் (எம்இகே), எனவும் அழைக்கப்பட்ட, ஐயுபிஏசி யால் மெதில் எதில் கீட்டோன் என்ற பதம் நிராகரிக்கப்பட்டு எதில் மெதில் கீட்டோன் என்றழைக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ள,[2] இது CH3C(O)CH2CH3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய ஒரு கரிமச் சேர்மம் ஆகும். இந்த நிறமற்ற திரவ கீட்டோனானது ஒரு நுண்ணிய, இனிமையான புதினா அல்லது அசிட்டோன் போன்ற மணத்தினை உடையது. தொழில்முறையில் இது மிக அதிக அளவில் தயாரிக்கப்படுகிறது. இயற்கையில் இது மிகமிக நுண்ணிய அளவுகளில் கிடைக்கிறது. [6]இது நீரில் கரையக்கூடியது மற்றும் தொழிற்துறையில் கரைப்பானாகப் பயன்படுகிறது.

தயாரிப்பு[தொகு]

பியூட்டனோனானது 2-பியூட்டனாலின் ஆக்சிசனேற்றத்தால் தயாரிக்கப்படலாம். 2-பியூட்டனாலின் ஐதரசன் நீக்கமானது தாமிரம் அல்லது துத்தநாகத்தை வினையூக்கியாகப் பயன்படுத்தி நடைபெறுகிறது:

CH3CH(OH)CH2CH3 → CH3C(O)CH2CH3 + H2

இச்சேர்மமானது தோராயமாக ஆண்டொன்றுக்கு 700 மில்லியன் கிலோகிராம் உற்பத்தி செய்யப்படுகிறது. மற்ற தொகுப்பு முறை தயாரிப்புகள் சோதித்துப் பார்க்கப்பட்டுள்ளன. ஆனால், நடைமுறைப்படுத்தப்படவில்லை. அவ்வாறான முறைகளில் 2-பியூட்டீனை வாக்கெர் ஆக்சிசனேற்றம் செய்வது மற்றும் ஐசோபியூட்டைல்பென்சீனை ஆக்சிசனேற்றம் செய்வது ஆகியவையும் அடங்கும். இம்முறைகள் அசிட்டோன் தயாரிப்பிற்காக பயன்படுத்தும் தொழில்முறை தயாரிப்புகளையொத்தவை.[6]அசலான கியூமின் செயல்முறையில் பீனாலும், அசிட்டோனும் மட்டும் கிடக்கும் இதற்குப் பதிலாக இந்த முறையை பீனால், அசிட்டோன் மற்றும் பியூட்டனோன் கிடைப்பது போல் மாற்றியமைக்கலாம்.[7]

பயன்பாடுகள்[தொகு]

ஒரு கரைப்பானாக[தொகு]

பியூட்டனோன் ஒரு செயல்திறமிக்க பொதுவான காரைப்பானாகும்.[8]மேலும், இயற்கை பிசின்கள், ரெசின்கள், செல்லுலோஸ் அசிட்டேட்டு மற்றும் நைட்ரோசெல்லுலோசு மேற்பூச்சுகள் ஆகிய செயல்முறைகளில் பயன்படுத்தப்படுகின்றன.[9] இத்தகு காரணங்களுக்காக இது நெகிழிகள், பாரபின் மெழுகு, வார்னீஷ் , வண்ணப்பூச்சு நீக்கி, ஒட்டும் பொருள்கள் நீக்கி, தூய்மையாக்கிகள் போன்றவற்றின் தயாரிப்பிலும் பயன்படுகிறது. இது அசிட்டோனையொத்த கரைப்பான் பண்புகளைப் பெற்றுள்ளது. ஆனால், உயர் வெப்பநிலையில் கொதிப்பதோடு, குறிப்பிடத்தக்க அளவிற்கு குறைவான ஆவியாதல் வீதத்தைக் கொண்டுள்ளது.[10] அசிட்டோனைப் போல் அல்லாமல், இது நீருடன் கொதிநிலை மாறாக் கலவையை உருவாக்குகிறது.[11][12]

மேற்கோள்கள்[தொகு]

 1. Merck Index, 11th Edition, 5991.
 2. 2.0 2.1 2.2 2.3 Nomenclature of Organic Chemistry : IUPAC Recommendations and Preferred Names 2013 (Blue Book). Cambridge: The Royal Society of Chemistry. 2014. பக். 725. doi:10.1039/9781849733069-FP001. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-85404-182-4. 
 3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0069". National Institute for Occupational Safety and Health (NIOSH).
 4. "butan-2-one_msds".
 5. 5.0 5.1 "2-Butanone". Immediately Dangerous to Life and Health. National Institute for Occupational Safety and Health (NIOSH).
 6. 6.0 6.1 Wilhelm Neier, Guenter Strehlke "2-Butanone" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Wiley-VCH, Weinheim, 2002.
 7. "Archived copy". மூல முகவரியிலிருந்து 2007-04-09 அன்று பரணிடப்பட்டது.
 8. Turner, Charles F.; McCreery, Joseph W. (1981). The Chemistry of Fire and Hazardous Materials. Boston, Massachusetts: Allyn and Bacon, Inc. பக். 118. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-205-06912-6. 
 9. Apps, E. A. (1958). Printing Ink Technology. London: Leonard Hill [Books] Limited. பக். 101. 
 10. Fairhall, Lawrence T. (1957). Industrial Toxicology. Baltimore: The Williams and Wilkins Company. பக். 172–173. 
 11. Lange's Handbook of Chemistry, 10th ed. pp1496-1505
 12. CRC Handbook of Chemistry and Physics, 44th ed. pp 2143-2184
"https://ta.wikipedia.org/w/index.php?title=பியூட்டனோன்&oldid=2784035" இருந்து மீள்விக்கப்பட்டது