சாராய விளக்கு
சாராய விளக்கு (Alcohol burner) என்பது ஆய்வகங்களில் தீச்சுடரை உருவாக்கப் பயன்படுத்தப்படும் ஒரு உபகரணம் ஆகும். மிகுந்த பாதுகாப்பானவை என்பதால் பன்சன் சுடரடுப்புகளுக்கு மாற்றாக இவை ஆய்வுக்கூடங்களில் பயன்படுத்தப்படுகின்றன. சாராய விளக்குகளில் உண்டாகும் தீச்சுடர் வெப்பம் குறைவாகவும் தோராயமாக இரண்டு அங்குல உயரத்துடன் எரியக்கூடியதாகவும் இருக்கிறது[1][2]. பொதுவாக இரண்டு வகையான சாராய விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. அலுமினிய சாராய விளக்குகள் மற்றும் கண்ணாடி சாராய விளக்குகள் என்பன அவ்விரண்டு வகைகளாகும். சாராய விளக்குகளில் மற்ற சுடர் விளக்குகளைப் போல அதிக வெப்பம் தோன்றுவதில்லை ஆனால் அவை மூலக்கூற்று ஆய்வியலுக்கு போதுமானவையாக உள்ளன. ஆய்வக உபகரணங்களான தொற்று நோய் தடுப்பூசிகள், இடுக்கிகள் ஆகியவற்றின் கிருமிகளைக் கொல்ல இத் தீச்சுடரைப் பயன்படுத்த முடியும்[3][4] . ஆய்வுக்குத் தேவையான சிறிய அளவிலான நீர்மங்களைக் கொதிக்க வைக்கவும் இத்தீச்சுடர் உதவும் .
பயன்படுத்தும் முறை
[தொகு]எரியக்கூடிய நீர்மங்களான அசிட்டோன், எத்தனால், தொலுயீன், எக்சேன், கார்பன் இருசல்பைடு , பெட்ரோல் , மண்ணென்ணெய், கையடுப்பு எரிபொருள் முதலானவற்றில் ஒன்றை சாராய விளக்கில் பாதி அளவுக்கு நிரப்பவேண்டும்[1][2] . இவ்வெரிபொருள்களின் தீப்பற்றுநிலை 37.8 0 வெப்பநிலைக்கு குறைவானதாக இருக்கும். இவற்றை IA வகை எரிபொருட்கள் என வகைப்படுத்துவர். விளக்குத் திரியின் அடிப்பகுதியை எரிபொருளால் நனைக்க வேண்டும். முதல்முறை பயன்படுத்துவதெனில் தீப்பிடித்து எரியும் போது திரி கருப்பாக மாறாமல் இருக்க திரியின் மேல்முனையையும் சிறிதளவு எரிபொருளால் நனைத்துக் கொள்ள வேண்டும்.
பாதுகாப்பு
[தொகு]கொளுத்துவதற்கு முன் எரிபொருள் சிதறலை சோதித்துக் கொள்ளல் வேண்டும். தீக்குச்சி அல்லது பற்றவைப்பானால் திரியைக் கொளுத்தி விளக்கை எரியவைக்கவேண்டும். உபயோகித்தப் பின் சாராய விளக்கின் மூடியால தீச்சுடரை அணைக்க வேண்டும். உபயோகத்தில் இல்லாத வேளைகளில் விளக்கை மூடி வைத்திருக்கவும் வேண்டும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Laboratory Burner Safety" (PDF). safety.ucanr.edu. University of California. 2007. பார்க்கப்பட்ட நாள் 2015-06-17.
- ↑ 2.0 2.1 Braham, R (2002). "LOCAL JOINT HEALTH AND SAFETY COMMITTEE DEPARTMENT OF BIOMEDICAL SCIENCES STANDARD OPERATING PROCEDURE" (PDF). ovc.uoguelph.ca. பார்க்கப்பட்ட நாள் 2015-06-17.
- ↑ "Low-tech Microbiology Tools". teach.genetics.utah.edu. Archived from the original on 2015-06-27. பார்க்கப்பட்ட நாள் 2015-06-26.
- ↑ "EQUIPMENT AND EQUIPMENT STERILIZATION PROCEDURES" (PDF). water.usgs.gov. U.S. Geological Survey. 1997. பார்க்கப்பட்ட நாள் 2015-06-26.