உள்ளடக்கத்துக்குச் செல்

இமயமலை பெரும் தேனீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இமயமலை பெரும் தேனீ
உயிரியல் வகைப்பாடு
திணை:
விலங்கு
பிரிவு:
கணுக்காலி
வகுப்பு:
பூச்சி
வரிசை:
கைமினாப்பிடிரா
குடும்பம்:
ஏபிடே
பேரினம்:
ஏபிசு
இனம்:
ஏ. இலேபிரியோசா
இருசொற் பெயரீடு
ஏப்பிசு இலேபிரியோசா
சுமித், 1871

இமயமலை பெரும் தேனீ என்பது ஏப்பிசு இலேபிரியோசா (Apis laboriosa) என்பது உலகில் காணப்படும் மிகப்பெரிய தேனீ ஆகும். இதனுடைய நீளம் 3.0 cm (1.2 அங்) வரை இருக்கும். 1980க்கு முன்னர், ஏப்பிசு இலேபிரியோசா பரவலான ஏப்பிசு டோர்சாட்டா எனும் துணையினமாகக் கருதப்பட்டது. ஆனால் 1980ஆம் ஆண்டிற்கு பின்னர் இது தனி சிற்றினமாகத் தரம் உயர்த்தப்பட்டது. ஆனால் 1999ஆம் ஆண்டில் ஏங்கல் என்பவரால் ஏப்பிசு டோர்சாட்டாவின் துணையினமாக மீண்டும் வகைப்படுத்தப்பட்டு[1] பின்னர் 2020ஆம் ஆண்டில் தனிச்சிற்றினமாக உறுதிப்படுத்தப்பட்டது. பல தளங்களில் ஏப்பிசு டோர்சாட்டாவுடன் இனப்பெருக்க அறிகுறி இல்லை.[2] இது தன்னுடைய நடத்தையில் இதன் உயர் நில வாழிடத்திற்கு ஏற்ப மாறியுள்ளது.

வகைப்பாட்டியல்

[தொகு]

அண்மையில் லேபோரியோசா, ஏபிசு டார்சோடாவிலிருந்து நீக்கப்பட்டுத் தனிச் சிற்றினமாக வைக்கப்பட்டது.[2] ஏ. லேர்பியோசா என்பது டோர்சாட்டாவிலிருந்து உருவவியல் (புறத்தோற்றம்) அடிப்படையில் வேறுபடுத்தப்படுகிறது (அடர்நிற வயிறு, நீண்ட மார்பு முடி). ஆனால் வெவ்வேறு கூடு பராமரிப்பு மற்றும் திரள் நடத்தை கொண்டவை. இதன் மூலம் இவை அதிக உயரத்தில் வாழும் தன்மையினைப் பெறுகிறது. மேலும் ஏ. டோர்சாட்டா மற்றும் ஏ. லேபிரியோசா இடையே மில்லியன் கணக்கான ஆண்டுகளாக சிறிய மரபணு ஓட்டம் ஏற்பட்டுள்ளது. இதன்படி, சில ஆய்வாளர்கள் முன்பு தனித்துவமான சிற்றினமாக வகைப்படுத்தியிருந்தனர்.[3]

பரவல்

[தொகு]

பெரும்பாலும் இமயமலையில் மட்டுமே காணக்கூடிய இனமாக வரையறுக்கப்பட்ட இது மிகப்பெரிய ஏபிசு இனமாகும். இது பூட்டான், சீனா மாகாணமான யுன்னான், இந்தியா, நேபாளம், மியான்மர், இலாவோசு மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளின் மலைப்பிரதேசங்களில் காணப்படுகிறது.[2] சுமார் 2500 முதல் 3000 மீட்டர் வரை உயரத்தில் கூடுகளை, செங்குத்து பாறைகளின் தென்மேற்கு முகங்களில் தொங்கும்படியாக மிகப் பெரிய கூடுகளாக அமைக்கின்றன. கூடு ஒன்றில் 60 kg (130 lb) தேன் வரை கிடைக்கின்றது. 4,100 m (13,500 அடி) வரை பறந்து இரை தேடும். இதன் விசித்திரமான கூடு நடத்தை காரணமாக, இமயமலை மாபெரும் தேனீயை இமயமலை முகடுத் தேன் தேனீ என்றும் அழைக்கின்றனர் . "இமயமலை தேனீ" என்ற சொல் சில சமயங்களில் இமயமலைப் பகுதியில் காணப்படும் நான்கு வகையான தேனீக்களில் முறைசாரா வகையில் பயன்படுத்தப்படுகிறது. இத் தேனீக்கள் ஏப்பிசு செரானா, ஏப்பிசு ஃப்ளோரியா, ஏப்பிசு டோர்சாட்டா மற்றும் ஏப்பிசு லேபிரியோசா ஆகும்.

கலாச்சார முக்கியத்துவம்

[தொகு]

ஏபிசு லேபிரியோசா தேனீயில் மூன்று வெவ்வேறு வகைகள் உள்ளன. அதிக உயரத்தில் உள்ள பூக்களிலிருந்து உருவாக்கப்படும் வசந்த அல்லது சிவப்பு தேன், நடு மற்றும் கீழ் உயரங்களில் பூக்களிலிருந்து உருவாக்கப்பட்ட வசந்த தேன், மற்றும் இலையுதிர் தேன், எந்த தளத்திலிருந்தும் உருவாக்கப்படுகின்றன. சிவப்பு தேன் ஒரு போதை விளைவைக் கொண்டிருக்கிறது மற்றும் பல்வேறு நிதானமான குணங்களைக் கொண்டுள்ளது. இந்தப் பண்பு சேமிப்பு காலத்தினைப் பொறுத்துக் குறைகிறது. இத்தேன் மதிப்புமிக்கது என்பதால் உள்நாட்டில் நுகரப்படுவதில்லை. மேலும் தேன் வேட்டைக்காரர்கள் இதை அதிக விலைக்கு விற்கிறார்கள். சிவப்பு தேனின் விலை ஏப்பிசு மெல்லிஃபெரா அல்லது ஏப்பிசு செரானா தேனின் விலையை விட ஐந்து மடங்கு அதிகமாகும். இத்தேனானது அதிக அளவு நேபாளத்திலிருந்து ய்ப்பான், கொரியா மற்றும் ஆங்காங்கிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. சிவப்பு தேனின் மருத்துவ மதிப்பு மற்றும் போதை குண அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது. இவை வெள்ளை ரோடோடென்ட்ரான்களிலிருந்து (ரோடோடென்ட்ரான் சிற்றினம்) சேகரிக்கப்பட்ட தேநீரில் உள்ள கிரயனோடாக்சின் காரணமாக உள்ளன. நேபாளத்தில் உள்ள குருங் மக்கள் இந்த பைத்திய தேனை இதன் மருத்துவ மற்றும் மாயத்தோற்றp பண்புகளுக்காகப் பயன்படுத்துவதில் புகழ் பெற்றவர்கள்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Engel, Michael S. (1999). "The taxonomy of recent and fossil honey bees (Hymenoptera: Apidae: Apis)". Journal of Hymenoptera Research 8: 165–196. http://biostor.org/reference/28973. 
  2. 2.0 2.1 2.2 Kitnya, Nyaton; Prabhudev, M. V.; Bhatta, Chet Prasad; Pham, Thai Hong; Nidup, Tshering; Megu, Karsing; Chakravorty, Jharna; Brockmann, Axel et al. (2020). "Geographical distribution of the giant honey bee Apis laboriosa Smith, 1871 (Hymenoptera, Apidae)". ZooKeys (951): 67–81. doi:10.3897/zookeys.951.49855. 
  3. Maria C. Arias & Walter S. Sheppard (2005). "Phylogenetic relationships of honey bees (Hymenoptera: Apinae: Apini) inferred from nuclear and mitochondrial DNA sequence data". Molecular Phylogenetics and Evolution 37 (1): 25–35. doi:10.1016/j.ympev.2005.02.017. பப்மெட்:16182149. 

    Maria C. Arias & Walter S. Sheppard (2005). "Corrigendum to "Phylogenetic relationships of honey bees (Hymenoptera: Apinae: Apini) inferred from nuclear and mitochondrial DNA sequence data" [Mol. Phylogenet. Evol. 37 (2005) 25–35]". Molecular Phylogenetics and Evolution 40 (1): 315. doi:10.1016/j.ympev.2006.02.002. 
  4. Treza, Raphael (2011). "Hallucinogen honey hunters". topdocumentaryfilms.com. பார்க்கப்பட்ட நாள் 20 October 2015.

கூடுதல் தகவல்களுக்கு

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இமயமலை_பெரும்_தேனீ&oldid=3456160" இலிருந்து மீள்விக்கப்பட்டது