இமயமலை குட்டைச்சிறகி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இமயமலை குட்டைச்சிறகி
தாய்லாந்தில் ஆண்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
பிராச்சிப்டெரிக்சு
இனம்:
பி. குரூராலிசு
இருசொற் பெயரீடு
பிராச்சிப்டெரிக்சு குரூராலிசு
பிளைத், 1843

இமயமலை குட்டைச்சிறகி (Himalayan shortwing)(பிராச்சிப்டெரிக்சு குரூராலிசு) என்பது பறவைச் சிற்றினம் ஆகும். இந்த சிற்றினம் இப்போது மியூசிகாபிடே குடும்பத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இது தென்கிழக்கு ஆசியாவில் இமயமலை முதல் தெற்கு சீனா, வடமேற்கு தாய்லாந்து மற்றும் வடக்கு இந்தோசீனா வரை காணப்படுகிறது. இதன் இயற்கையான வாழிவிடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும். இது ஒரு கூச்ச சுபாவமுள்ள, தரையில் அல்லது அதற்கு அருகில், அடர் தாவரங்களின் மறைவில் இருக்க விரும்புகிறது. இங்கு இது சிறிய பூச்சி, இளம் உயிரி, பெர்ரி, விதைகள், குருத்து மற்றும் தாவரங்களின் புதிய மொட்டுகளை உண்ணும். கூட்டில் பாசி மற்றும் புல் தண்டுகள் காணப்படும். இவை அடர்த்தியான புதரில் கட்டப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Brachypteryx cruralis". IUCN Red List of Threatened Species 2016: e.T103866603A104211210. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T103866603A104211210.en. https://www.iucnredlist.org/species/103866603/104211210. பார்த்த நாள்: 18 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இமயமலை_குட்டைச்சிறகி&oldid=3859271" இலிருந்து மீள்விக்கப்பட்டது