உள்ளடக்கத்துக்குச் செல்

இப்பியாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எலிசின் இப்பியாசு (Hippias, கிரேக்கம் கிரேக்கம்: Ἱππίας ὁ Ἠλεῖος‎  ; கிமு 5 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி) என்பவர் ஒரு கிரேக்க சோபிஸ்டு ஆவார். இவர் சாக்கிரட்டீசின் சமகாலத்தராவார். பிற்கால சோபிஸ்டுகளின் உறுதியான பண்புகள் கொண்டவராக, அனைத்து விசயங்களையும் அறிந்தவராக இருந்தார். மேலும் இவர் கவிதை, இலக்கணம், வரலாறு, அரசியல், கணிதம் மற்றும் பலவற்றில் விரிவுரையாற்றியுள்ளார். இவரைப் பற்றிய பல செய்திகள் பிளேட்டோவிடமிருந்து கிடைக்கின்றன. இவரை அவரை வீணானவர் என்றும், திமிர்பிடித்தவர் என்றும் வகைப்படுத்துகிறார்.

வாழ்க்கை

[தொகு]

ஹிப்பியாஸ் கிமு 5 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் (கி.மு. 460) கிரேக்கத்தின் எலிசில் பிறந்தார். இவர் புரோட்டோகோராஸ் மற்றும் சாக்கிரடீசின் சமகாலத்தவராவார். இவர் ஹெகேசிடாமஸின் சீடராவார். [1] இவரது திறமை காரணமாக, இவரது சக குடிமக்கள் அரசியல் விசயங்களிலும், எசுபார்த்தாவிற்கான இராஜதந்திர பணியிலும் இவரது சேவைகளைப் பயன்படுத்திக்கொண்டனர். [2] ஆனால் இவர் எல்லா வகையிலும் அந்தக் காலத்தின் மற்ற சோபிஸ்டுகளைப் போலவே செயல்பட்டார்: இவர் கற்பித்தல் மற்றும் பொதுக்கூட்ட உரை நோக்கத்திற்காக கிரேக்கத்தின் பல்வேறு நகரங்கள் மற்றும் மாவட்டங்களுக்குச் சென்றார். பிளேட்டோவின் இரண்டு உரையாடல்களான, ஹிப்பியாஸ் மேஜர் மற்றும் ஹிப்பியாஸ் மைனர் ஆகியவற்றில் இவரை வீணானவர் என்றும், திமிர் பிடித்தவர் என்றும் சித்தரிக்கின்றன.

வேலை

[தொகு]

இப்பியாசு மிகவும் விரிந்த அறிவாற்றல் கொண்டவர். மேலும் இவர் சொல்லாட்சி, மெய்யியல், அரசியல் ஆய்வுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதேசமயம் இவர் கவிதை, இசை, கணிதம், ஓவியம், சிற்பம் ஆகியவற்றிலும் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தார். இவர் தன் வாழ்க்கையில், பயன்படுத்திய முத்திரை மோதிரம், மேலங்கி, காலணிகள் போன்ற உடமைகளில் தன் சொந்த கைகளால் உருவாக்காத எதையும் தன் உடலில் அணியவில்லை என்று பெருமையாகப் பேசுவார். [3] ஒலிம்பியானிகோன் அனாகிராப் ( Ὀλυμπιονικῶν Ἀναγραφή ) என அழைக்கப்படும் ஒரு தொலைந்து போன படைப்பை இவர் வைத்திருந்தார், அதில் கிமு 776 இல் ஒலிம்பிக் விளையாட்டில் கொரோபசின் வெற்றியைக் ஒலிம்பியாடில் கணக்கிட்டிருந்தது, அது அனைத்து ஓலிம்பிக் வெற்றி குறித்த பிற்காலப் பட்டியல்களுக்கும் அடிப்படையானது. [4] மறுபுறம், இவரது அறிவு பொதுவாக மேலோட்டமாகத் தோன்றும், இவர் எந்தவொரு குறிப்பிட்ட கலை அல்லது அறிவியல் விவரங்களுக்குள் நுழைவதில்லை, மேலும் சில பொதுவான விஷயங்களில் திருப்தி அடைந்தார். இது எதையும் பற்றிய முழுமையான அறிவு இல்லாமல் எல்லாவற்றையும் பேசுவதற்கு அவருக்கு உதவியது. இந்த ஆணவம், அறியாமையுடன் இணைந்து. இதனால் இப்பியாசை பிளேட்டோ கடுமையான விமர்சிக்க காரணமாயிற்று. ஏனெனில் சோபிஸ்ட்டுகள் மிகவும் பரவலாக நற்பெயரைக் கொண்டிருந்தனர். அதனால் உயர் வகுப்பு இளைஞர்களின் கல்வியில் பெரும் தாக்கத்தை அவர்கள் ஏற்படுத்தினார். ஹிப்பியாசால் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் ஒரு கணிதக் கண்டுபிடிப்பு சில சமயங்களில் ஹிப்பியாஸின் குவாட்ராட்ரிக்ஸ் என்று அழைக்கப்படுகிறது.

குறிப்புகள்

[தொகு]
  1. Suda, Hippias
  2. Plato, Hippias major, 281a, 286a; Philostratus, Vit. Soph. i. 11.
  3. Plato, Hippias major, 285c, Hippias minor, 368b, Protagoras, 315c; Philostratus, Vit. Soph. i. 11.; Themistius, Orat. xxix. p. 345. d.
  4. Christesen, Paul (2012), "Imagining Olympia: Hippias of Elis and the First Olympic Victor List", in Auber, Jean-Jacques; Várhelyi, Zsuzsanna (eds.), A Tall Order: Writing the Social History of the Ancient World, Berlin: B.G. Teubner, pp. 319–356, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1515/9783110931419.319.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இப்பியாசு&oldid=3434437" இலிருந்து மீள்விக்கப்பட்டது