இந்திய நினைவு நாணயங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய நினைவு நாணயங்கள் (ஆங்கில மொழி: Commemorative coins of India) என்பது சில குறிப்பிட்ட நிகழ்வுகள் அல்லது முக்கிய நபர்களின் நினைவாக இந்திய ரிசர்வ் வங்கியால் வழங்கப்படும் நாணயங்கள் ஆகும். இந்திய நினைவு நாணயங்கள் 1964 ஆம் ஆண்டில் ஜவகர்லால் நேருவின் படத்துடன் ஒரு ரூபாய் மற்றும் ஐம்பது பைசா நாணயங்கள் வெளியாயின. இதுவே முதலாவது இந்திய நினைவு நாணயமாகும். இத்தகைய நாணயங்கள் ஒரு தனித்துவமான வடிவமைப்பிலோ அல்லது வழக்கமான வடிவமைப்பிலோ வெளியிடப்படுகின்றன. முக்கியமான நிகழ்வுகள் அல்லது முக்கிய நபர்களை பெருமைப்படுத்தும் விதமாக வழங்கப்படும் இவை இந்திய சுதந்திர போராட்டம், போர், சமாதானம், வனவிலங்குகள், தாவரங்கள், முக்கிய நபர்கள், முக்கிய நிகழ்வுகள் மற்றும் முக்கிய நிறுவனங்களின் நினைவாக வழங்கப்படுகின்றன. இந்நாணயங்கள், 5, 10, 20, 25, 50 பைசாக்களிலும், 1, 2, 5, 10, 50, 75, 100, 125, 1000 உள்ளிட்ட பல்வேறு விதமான ரூபாய் மதிப்புகளிலும் வெளியிடப்படுகின்றன. இவற்றுள் அதிகபட்சமாக 1000 மதிப்புடைய நாணயம் தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில் கட்டி 1000 ஆண்டுகள் கடந்ததை நினைவுப்படுத்தும் விதமாக வெளியிடப்பட்டது.[1]

முதலாவது நினைவு நாணயம்[தொகு]

விடுதலை இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் இறப்புக்குப் பிறகு அவரது தியாகத்தை போற்றும் விதமாக, நேருவின் படத்துடன் ஒரு ரூபாய் மற்றும் ஐம்பது பைசா நாணயங்கள் 1964ஆவது ஆண்டில் வெளியாயின. ஒரு ரூபாய் நாணயத்தில் நேருவின் படத்துடன் "ஜவகர்லால் நேரு" என ஆங்கிலத்தில் எழுதப்பட்டு வெளியானது. ஐம்பது பைசா நாணயத்தில் நேருவின் படத்துடன், பாதி நாணயங்களில் "ஜவகர்லால் நேரு" என ஆங்கிலத்திலும் மீதி நாணயங்களில் இந்தியிலும் எழுதப்பட்டு வெளியானது. இதுவே இந்தியா விடுதலை பெற்ற பின்னர் வெளியான முதலாவது நினைவு நாணயமாகும்.

தமிழகம் தொடர்புடைய நாணயங்கள்[தொகு]

இந்தியாவில், தமிழகம் தொடர்புடைய நான்கு நாணயங்கள் இதுநாள் வரையிலும் வெளிவந்திருக்கின்றன. 1995ஆவது ஆண்டில் எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டின் நினைவாக திருவள்ளுவர் படத்துடன் வெளியானது. அதனைத் தொடர்ந்து 2004ஆவது ஆண்டில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜரின் புகைப்படத்துடன் ஐந்து ரூபாய் நாணயங்கள் வெளியாயின.[2] மேலும் 2009ஆவது ஆண்டில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அண்ணாவின் படமும், அவரது தமிழ் கையெழுத்தும் பதிந்த நாணயங்கள் வெளியாயின.[3] தஞ்சை பிரகதீசுவரர் கோயிலின் 1000ஆவது ஆண்டு விழாவையொட்டி அக்கோயிலின் உருவம் பதித்த ஐந்து மற்றும் 1000 ரூபாய் நாணயங்கள் 2010ஆவது ஆண்டில் வெளியாயின.[4]

வெளியான நினைவு நாணயங்கள்[தொகு]

1960 களில்[தொகு]

1964 ஜவகர்லால்நேரு[தொகு]

ஆண்டு ரூபாய் நாணயத்தின் தோற்றம் நாணயத்தின் விபரங்கள் முன்பக்க விபரங்கள் பின்பக்க விபரங்கள்
1964 1 : நிக்கல்
: 10 கிராம்
:வட்டம்
1: மேலே அசோக தூண்
2: கீழே நாணயத்தின் மதிப்பு
1. நடுவில் ஜவகர்லால் நேருவின் படம்.
2. மேலே ஜவகர்லால் நேருவின் பெயர் ஆங்கிலத்தில்
3. வாழ்ந்த ஆண்டுகள் 1889-1964
6. நாணய தயாரிப்பகத்தின் அடையாளக் குறி
0.50 : நிக்கல்
: 5 கிராம்
: வட்டம்
0.50 :நிக்கல்
:5 கிராம்
: வட்டம்
அதே விபரங்களுடன், நேருவின் பெயர் இந்தியில்.

1969 மகாத்மாகாந்தி[தொகு]

ஆண்டு ரூபாய் நாணயத்தின் தோற்றம் நாணயத்தின் விபரங்கள் முன்பக்க விபரங்கள் பின்பக்க விபரங்கள்
1969 10 : வெள்ளி (80%)
+ நிக்கல் (20%)
: 15 கிராம்
:வட்டம்
1: மேலே அசோக தூண்
2: கீழே நாணயத்தின் மதிப்பு
1. நடுவில் மகாத்மா காந்தியின் படம்.
2. மேலே மகாத்மா காந்தியின் பெயர் ஆங்கிலத்திலும், இந்தியிலும்.
3. வாழ்ந்த ஆண்டுகள் 1869-1948
4. நாணய தயாரிப்பகத்தின் அடையாளக் குறி
1 : நிக்கல்
: 10 கிராம்
: வட்டம்
0.50 : நிக்கல்
: 5 கிராம்
: வட்டம்
0.20 : அலுமினியம் + வெண்கலம்
: 4.5 கிராம்
: வட்டம்

1970 களில்[தொகு]

1970 அனைவருக்கும் உணவு (முதல் வெளியீடு)[தொகு]

ஆண்டு ரூபாய் நாணயத்தின் தோற்றம் நாணயத்தின் விபரங்கள் முன்பக்க விபரங்கள் பின்பக்க விபரங்கள்
1970 10 : வெள்ளி (80%) + நிக்கல் (20%)
: 15 கிராம்
:வட்டம்
அசோக தூண் மற்றும் நாணயத்தின் மதிப்பு 1. மேலே சூரியன் படம்.
2. கீழே தாமரையின் படம்
3. இருபுறமும் கோதுமை கதிர்களின் படம்
4. அனைவருக்கும் உணவு என்னும் வாசகம் (ஆங்கிலத்திலும் இந்தியிலும்).
5. நாணயம் வெளியான ஆண்டு
6. நாணய தயாரிப்பகத்தின் அடையாளக் குறி
0.20 : அலுமினியம் + வெண்கலம்
: 4.5 கிராம்
: வட்டம்

1971 அனைவருக்கும் உணவு (இரண்டாவது வெளியீடு)[தொகு]

ஆண்டு ரூபாய் நாணயத்தின் தோற்றம் நாணயத்தின் விபரங்கள் முன்பக்க விபரங்கள் பின்பக்க விபரங்கள்
1971 10 : வெள்ளி (80%) + நிக்கல் (20%)
: 15 கிராம்
:வட்டம்
அசோக தூண் மற்றும் நாணயத்தின் மதிப்பு 1. மேலே சூரியன் படம்.
2. கீழே தாமரையின் படம்
3. இருபுறமும் கோதுமை கதிர்களின் படம்
4. அனைவருக்கும் உணவு என்னும் வாசகம் (FOOD FOR ALL) (ஆங்கிலத்திலும் இந்தியிலும்).
5. நாணயம் வெளியான ஆண்டு
6. நாணய தயாரிப்பகத்தின் அடையாளக் குறி
0.20 : அலுமினியம் + வெண்கலம்
: 4.5 கிராம்
: வட்டம்

1972 சுதந்திர தின வெள்ளி விழா ஆண்டு[தொகு]

1973 அதிகமான உணவுஉற்பத்தி[தொகு]

1974 திட்டமிடப்பட்டகுடும்பம்[தொகு]

1975 மகளிர் ஆண்டு[தொகு]

1976 அனைவருக்கும் உணவு மற்றும் வேலைவாய்ப்பு[தொகு]

1977 வளர்ச்சி சேமிப்பு[தொகு]

1978 அனைவருக்கும் உணவு மற்றும் தங்குமிடம்[தொகு]

1979 குழந்தைகள் ஆண்டு[தொகு]

1980களில்[தொகு]

1982 தேசிய ஒருமைப்பாடு[தொகு]

1982 ஒன்பதாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்[தொகு]

1985 இந்திராகாந்தி[தொகு]

1989 ஜவகர்லால்நேரு[தொகு]

1990களில்[தொகு]

1993 சிறியகுடும்பம் மகிழ்ச்சியானகுடும்பம்[தொகு]

ஆண்டு ரூபாய் நாணயத்தின் தோற்றம் நாணயத்தின் விபரங்கள் முன்பக்க விபரங்கள் பின்பக்க விபரங்கள்
1993 2 : காப்பர் + நிக்கல்
: 8 கிராம்
1: மேலே அசோக தூண்
2: கீழே நாணயத்தின் மதிப்பு
1. நடுவே சிறு குடும்பத்தின் படம்.
2. இருபுறமும் சிறிய குடும்பம், மகிழ்ச்சியான குடும்பம் என்ற பெயர். (ஆங்கிலம், இந்தி).
3. நாணயம் வெளியான ஆண்டு
4. நாணய தயாரிப்பகத்தின் அடையாளக் குறி

1995 உலகத்தமிழ் மாநாடு[தொகு]

ஆண்டு ரூபாய் நாணயத்தின் தோற்றம் நாணயத்தின் விபரங்கள் முன்பக்க விபரங்கள் பின்பக்க விபரங்கள்
1995 5 : காப்பர் + நிக்கல்
: 12.5 கிராம்
1: மேலே அசோக தூண்
2: கீழே நாணயத்தின் மதிப்பு
1. நடுவில் திருவள்ளுவர் படம்.
2. இருபுறமும் 8ஆவது உலகத் தமிழ் மாநாடு, கவிஞர் திருவள்ளுவர் என்ற பெயர் (ஆங்கிலத்திலும், இந்தியிலும்).
3. நாணயம் வெளியான ஆண்டு (1995)
4. நாணய தயாரிப்பகத்தின் அடையாளக் குறி
2 : காப்பர் + நிக்கல்
: 8 கிராம்
1 : துருவேறா எஃகு
: 6 கிராம்

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.thehindu.com/todays-paper/tp-in-school/rs1000-coin-to-be-released/article3952963.ece
  2. http://www.indian-coins.com/commemorativecoins/2001-2005/2004--kkamaraj காமராஜரின் படத்துடன் வெளியான இந்திய நாணயங்கள்
  3. http://www.indian-coins.com/commemorativecoins/2006-2010/2009-perarignar-anna-centenary
  4. http://www.indian-coins.com/commemorativecoins/2006-2010/2011-1000-years-of-brihadeeshwarar-temple-tanjavur தஞ்சை பெரிய கோயிலின் படத்துடன் வெளியான இந்திய நாணயங்கள்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_நினைவு_நாணயங்கள்&oldid=3233765" இலிருந்து மீள்விக்கப்பட்டது