இந்திய ஒன்றியத்தின் இடைக்கால நிதிநிலை அறிக்கை

From விக்கிப்பீடியா
Jump to navigation Jump to search

இந்திய ஒன்றியத்தின் இடைக்கால நிதிநிலை அறிக்கை அல்லது (Interim Union Budget of India) அல்லது முன் அளி மானியக் கோரிக்கை (Vot On Account -VOA) என்பது இந்தியாவில் பொதுத்தேர்தல் நெருங்கும் நேரத்தில் அல்லது முழு நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யமுடியாத கட்டத்தில் ஒன்றிய அரசால் முன்வைக்கப்படும் நிதிநிலை அறிக்கை ஆகும்.[1][2]

அவசியமும் உள்ளடக்கமும்[edit]

ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் ஒரு நிதியாண்டிற்கு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையானது, அந்த நிதியாண்டிற்கு மட்டுமே பொருந்தும். அது அந்த ஆண்டின் மார்ச் மாதம் 31ம் தேதிவரை மட்டுமே நடைமுறையில் இருக்கும். அடுத்த நிதி ஆண்டிற்கான அறிக்கையை ஒன்றிய அரசால் சில காரணங்களால் தாக்கல் செய்யமுடியாத போது இடைக்கால நிதியறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.

இடைநிலை நிதிநிலை அறிக்கையில் பொதுத் தேர்தல் முடிவுவரை (புது அரசு பொறுப்பேற்கும் வரை) அரசின் செலவினங்களுக்கான மானியத்திற்குப் பாராளுமன்றத்தின் அனுமதி கோரப்படுகிறது. மேலும் முழுஅறிக்கை போன்று நடப்பு முழு நிதியாண்டின் வரவு-செலவு தாக்கல் செய்யப்பட்டிருக்கும்.

பொதுத் தேர்தலினால் இடைநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தால் அதில் மாற்றம் செய்யும் அதிகாரம் புதிதாகப் பொறுப்பேற்கும் அரசுக்கு உண்டு. இடைநிலை அறிக்கையில் வரிவிதிப்பில் மாற்றங்களோ புதுக் கொள்கை அறிவிப்புகளோ இருக்காது.

புது அரசு பொறுப்பேற்ற பின் அந்த நிதியாண்டின் மீதமுள்ள காலத்திற்கான முழு அறிக்கையைத் தாக்கல் செய்யும். அது முடியாதபட்சத்தில் புது அரசும் அந் நிதியாண்டிற்கு இடைநிலை அறிக்கை தாக்கல் செய்யலாம்.

இதுவரை (2013- 14 உட்பட) 12 இடைநிலை நிதியறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவற்றுள் வெளியேறும் அரசுகளால் ஆறு அறிக்கைகளும் முழு நிதுயறிக்கைத் தாக்கல் செய்ய முடியாமல் புது அரசுகளால் ஆறு அறிக்கைகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. [3] [4][5]

இதுவரை தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கைகள்[edit]

நிதியமைச்சர் நிதியாண்டு நாள்
சி. டி. தேஷ்முக் 1952–53 பிப்ரவரி 29, 1952
தி. த. கிருஷ்ணமாச்சாரி 1957–58 மார்ச் 19, 1957
மொரார்ஜி தேசாய் 1962–63 மார்ச் 14, 1962
மொரார்ஜி தேசாய் 1967–68 மார்ச் 20, 1967
ஒய். பி. சவாண் 1971–72 மார்ச் 24, 1971
எச். எம். படேல் 1977–78 மார்ச் 28, 1977
ஆர். வெங்கட்ராமன் 1980–81 மார்ச் 11, 1980
யஷ்வந்த் சின்கா 1991–92 மார்ச் 4, 1991
மன்மோகன் சிங் 1996–97 பிப்ரவரி 28, 1996
யஷ்வந்த் சின்கா 1998–99 மார்ச் 25, 1998
ஜஸ்வந் சிங் 2004–05 பிப்ரவரி 3, 2004
பிரணாப் முகர்ஜி 2009–10 பிப்ரவரி 16, 2009 [6]
ப. சிதம்பரம் 2013-2014 பிப்ரவரி 28, 2013
ப. சிதம்பரம் 2013-2014 பிப்ரவரி 17, 2014[7]

மேற்கோள்[edit]