இந்தியாவில் பெண்களின் அரசியல் பங்கேற்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியாவில் பெண்களின் அரசியல் பங்கேற்பு (Women's political participation in India) 'பெண்களின் அரசியல் பங்கேற்பு' என்ற வார்த்தைக்கு மிகவும் பரந்த அர்த்தம் உள்ளது. இது 'வாக்களிக்கும் உரிமை'யுடன் மட்டும் தொடர்புடையது அல்ல, அதே நேரத்தில் பங்கேற்புடன் கூடிய முடிவெடுக்கும் செயல்முறை, அரசியல் செயல்பாடு, அரசியல் உணர்வு போன்றவையுடனும் தொடர்புடையது. இந்தியாவில் பெண்கள் வாக்களிப்பதில் பங்கேற்கிறார்கள். பொது அலுவலகங்களிலும், அரசியல் கட்சிகளில் ஆண்களை விட கீழ் மட்டங்களில் போட்டியிடுகின்றனர். பெண்களின் அரசியல் பங்கேற்பின் வலுவான பகுதிகள் அரசியல் செயல்பாடு மற்றும் வாக்களிப்பு என்பதாகும்.[1] அரசியலில் பாலின சமத்துவமின்மையை எதிர்த்து, இந்திய அரசாங்கம் உள்ளூர் அரசாங்கங்களில் இட ஒதுக்கீட்டை நிறுவியுள்ளது.

இந்தியாவின் நாடாளுமன்ற பொதுத் தேர்தலின் போது பெண்களின் வாக்குப்பதிவு 65.63% ஆக இருந்தது. அதே சமயம் 67.09% ஆண்களுக்கானது. நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் இந்தியா 20வது இடத்தில் உள்ளது.[2] இந்தியாவில் குடியரசுத் தலைவர்களாகவும், பிரதமர்களாகவும் பெண்கள் பதவிகளை வகித்துள்ளனர். அத்துடன் பல்வேறு மாநிலங்களின் முதல்வர்களாகவும் இருக்கின்றனர். இந்திய வாக்காளர்கள் பல மாநில சட்டமன்றங்களிலும், தேசிய நாடாளுமன்றத் தேர்தல்களிலும் பல ஆண்டுகளாக பெண்களை உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுத்து வருகின்றனர்.

பெண்களின் அரசியலமைப்பு உரிமைகள்[தொகு]

இந்திய அரசியலமைப்பு ஒரு நாடாளுமன்ற ஆட்சி முறையை நிறுவியுள்ளது. மேலும் அதன் குடிமக்களுக்கு தேர்ந்தெடுக்கப்படும் உரிமை, பேச்சு சுதந்திரம், ஒன்றுகூடுவதற்கும் சங்கங்களை அமைப்பதற்கும், வாக்களிப்பதற்கும் சுதந்திரம் அளிக்கிறது.[3] இந்திய அரசியலமைப்பு பாலினம் மற்றும் வர்க்கத்தின் அடிப்படையில் பாகுபாட்டை தடை செய்வதன் மூலம் பாலின ஏற்றத்தாழ்வுகளை அகற்ற முயற்சிக்கிறது. மனிதக் கடத்தலையும், கட்டாய உழைப்பையும் தடைசெய்து, பெண்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பதவிகளை ஒதுக்குகிறது. 

சமமான ஊதியம், இலவச சட்ட உதவி, மனிதாபிமான வேலை நிலைமைகள், மகப்பேறு நிவாரணம், வேலை மற்றும் கல்வி உரிமைகள், வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது உட்பட வர்க்கம் மற்றும் பாலினத்தால் சமத்துவத்தை ஊக்குவிக்க இந்திய அரசு மாநில மற்றும் உள்ளூர் அரசாங்கங்களுக்கு அறிவுறுத்தியது.[4] 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நடைபெற்றா இந்திய விடுதலை இயக்கத்தில் பெண்கள் கணிசமாக ஈடுபட்டனர். மேலும், பிரித்தனிடமிருந்து சுதந்திரம் பெற வலியுறுத்தினர். சுதந்திரம் பாலின சமத்துவத்தை அரசியலமைப்பு உரிமைகளின் வடிவத்தில் கொண்டு வந்தது. ஆனால் வரலாற்று ரீதியாக பெண்களின் அரசியல் பங்கேற்பு குறைவாகவே உள்ளது.[5]

பெண்களின் பங்கேற்பு[தொகு]

வாக்களித்தல்[தொகு]

1947 க்கு முன்னர் பிரித்தானிய குடியேற்ற ஆட்சியில் பெரும்பான்மையான ஆண்களுக்கும் பெண்களுக்கும் வாக்களிக்கும் உரிமை இல்லை என்றாலும், பெண்களின் வாக்குரிமைக்கான இயக்கம் 1900களின் முற்பகுதியில் ஒரு தேசிய இயக்கத்திற்கு பதிலளிக்கும் வகையில் தொடங்கியது. இந்திய விடுதலைக்குப் பிறகு, 1950ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட இந்திய அரசியலமைப்பின் மூலம் அதிகாரப்பூர்வமாக பெண்களுக்கும், ஆண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. உலகளாவிய வாக்குரிமைக்கு முன், மாகாண சட்டமன்றங்கள் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கின.

1921 ஆம் ஆண்டில் சென்னை மாகாணம் முதன்முதலில் பெண்களுக்கு வாக்குரிமையை வழங்கியது. ஆனால் பிரித்தானிய நிர்வாகத்தின் பதிவுகளின்படி நில சொத்து வைத்திருந்த ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மட்டுமே வாக்குரிமை வழங்கப்பட்டதாகத் தெரிகிறது.[6] வாக்குரிமையை நோக்கிய இயக்கத்திற்கு பதிலளிக்கும் வகையில் வழங்கப்பட்ட உரிமைகள் கல்வியறிவு மற்றும் கணவனின் சொத்து உடைமை உட்பட சொத்துரிமைக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டது.[7] இது இந்தியப் பெண்களையும் ஆண்களையும் பெரும்பான்மையினர் வாக்களிப்பதைத் தவிர்த்தது. ஏனென்றால் அவர்கள் ஏழைகளாக இருந்தனர். 1950இல் அனைத்து வயதுவந்த இந்திய குடிமக்களுக்கும் உலகளாவிய வாக்குரிமை வழங்கப்பட்டபோதுதன் இந்த நிலைமை மாறியது.

பிரதிபா பாட்டில், முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர்
விவசாயிகள் பேரணியில் பெண்கள்

இதையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "PDownload Mp3olitical empowerment of women". 2014-12-19 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-09-02 அன்று பார்க்கப்பட்டது.
  2. The Global Gender Gap Report 2012, World Economic Forum, Switzerland, page 16
  3. Government of India. "The Constitution of India". Ministry of Law and Justice. 2 ஏப்ரல் 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 22 March 2014 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)
  4. Constitution of India. "Directive Principles of State Policy". Government of India. 22 March 2014 அன்று பார்க்கப்பட்டது.
  5. Praveen, Rai (14 January 2011). "Electoral Participation of Women in India: Key Determinants and Barriers". Economic and Political Weekly XVLI (3): 47–55. 
  6. Mithra, H.N. (2009). The Govt of India ACT 1919 Rules Thereunder and Govt Reports 1920, ISBN 978-1-113-74177-6
  7. Praveen, Rai (14 January 2011). "Electoral Participation of Women in India: Key Determinants and Barriers". Economic and Political Weekly XVLI (3): 47–55. Praveen, Rai (14 January 2011). "Electoral Participation of Women in India: Key Determinants and Barriers". Economic and Political Weekly. XVLI (3): 47–55.