பெண்கள் இடஒதுக்கீடு வரைவுச் சட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெண்கள் இடஒதுக்கீடு வரைவுச் சட்டம் என்பது இந்தியக் குடியரசில் தற்போது கிடப்பில் உள்ள ஒரு வரைவுச் சட்டம். இந்திய அரசியலமைப்பின் 108வது சட்ட திருத்தமாக இது கொண்டுவரப்பட்டது. இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையில் இது மார்ச் 2010ல் நிறைவேற்றப்பட்டது. ஆனால் கீழவையான மக்களவையால் இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

இச்சட்டம் இந்திய மக்களவையிலும், மாநில சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கிட வழிவகை செய்கிறது. இச்சட்டத்தின் படி பெண்களுக்கென ஒதுக்கப்படும் தொகுதிகள் மூன்று பொதுத்தேர்தல்களுக்கு ஒருமுறை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும். உள்ளாட்சி அமைப்புகளில் இத்தகு 33 % ஒதுக்கீடு முன்னரே நடைமுறையில் உள்ளது. சட்டமியற்றும் மன்றங்களின் குறைவாக இருக்கும் பெண்களின் சதவிகிதத்தை இச்சட்டம் உயர்த்துமென இதன் ஆதரவாளர்கள் கருதுகிறார்கள். இதன் எதிர்ப்பாளர்கள் இதனால் மேட்டுக்குடி மற்றும் உயர்சாதிப் பெண்கள் மட்டுமே பயன்பெறுவர் என எதிர்க்கிறார்கள். இதனால் இவ்வொதுக்கீட்டீல் சாதிவாரியாக உள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டுமென்றும் கருதுகிறார்கள்.

வெளி இணைப்புகள்[தொகு]