இந்தியப் பகுதிக்கான இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்பு-1டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐஆர்என்எஸ்எஸ் 1-டி
திட்ட வகைசெய்மதி இடஞ்சுட்டல்
இயக்குபவர்இந்திய விண்வெளி ஆய்வு மையம்
திட்டக் காலம்10 ஆண்டுகள்
விண்கலத்தின் பண்புகள்
செயற்கைக்கோள் பேருந்துஐ-1கே
தயாரிப்புஇந்திய விண்வெளி ஆய்வு மைய செய்மதி நடுவம்
விண்வெளிப் பயன்பாடுகள் மையம்
ஏவல் திணிவு1,425 கிலோகிராம்கள் (3,142 lb)
திறன்1,660 வாட்டு
திட்ட ஆரம்பம்
ஏவப்பட்ட நாள்மார்ச் 28, 2015 [1]
ஏவுகலன்பிஎஸ்எல்வி-சி-27[2]
ஏவலிடம்சதீஸ் தவான் விண்வெளி மையம் சதீஸ் தவான் முதல் ஏவுதளம்[சான்று தேவை]
ஒப்பந்தக்காரர்இந்திய விண்வெளி ஆய்வு மையம்-இஸ்ரோ
சுற்றுப்பாதை அளபுருக்கள்
Reference systemபுவி மைய வட்டப்பாதை
சுற்றுவெளிபுவிநிலைச் சுற்றுப்பாதை

ஐஆர்என்எஸ்எஸ் 1-டி (IRNSS-1D) [3] என்பது இந்திய பிராந்திய ஊடுருவல் துணைக்கோள் வரிசையில் நான்காவதாக ஏவப்படுவதாகும். இதற்கு முன்னர் இதேபோல் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஏ, ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1பி, ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1சி, என்று மூன்று வகைகள் ஏவப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2015 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 9 ஆம் திகதியில் ஏவப்பட வேண்டிய இது தொழில் நுட்பக்காரணங்களினால் மார்ச் 28[4] ஆம் திகதி மாலை 5 மணி 19 நிமிடங்களுக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. அதன் பின்னர் இக்கோள் புவிநிலைச் சுற்றுப்பாதையில்[5] நிறுத்தப்படும். இச்செயற்கைக்கோள் ஆந்திர மாநிலத்தின் கடலோரப் பகுதியான ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து பி.எஸ்.எல்.வி.-சி27 மூலம் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது.[6]

செலவு[தொகு]

இந்த திட்டத்திற்காக மொத்த செலவு 1,400 கோடிகள்.[7]

மேலும் பார்க்க[தொகு]

இதையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்[தொகு]

  1. "IRNSS-1D Launch Rescheduled for March 28". GPS World. பார்க்கப்பட்ட நாள் 2015-03-11.
  2. "PSLV-C27/IRNSS-1D Mission". ISRO. Archived from the original on 2015-02-25. பார்க்கப்பட்ட நாள் 2015-03-02.
  3. ஐஆர்என்எஸ்எஸ் 1-டி விண்ணில் ஏவ கவுன்ட் டவுண் தொடக்கம்
  4. "பி.எஸ்.எல்.வி-சி27, ஐஆர்என்எஸ்எஸ்-1டி செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது". ISRO. www.isro.gov.in. Archived from the original on 2 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 31 March 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "IRNSS". space.skyrocket.de. பார்க்கப்பட்ட நாள் 6 December 2014.
  6. "IRNSS 1-D launch put off". India. thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 4 March 2015.
  7. Dennis S. Jesudasan. "Countdown to IRNSS 1D on March 7". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 28 March 2015.