இந்தியப் பகுதிக்கான இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்பு-1ஜி
Appearance
(ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஜி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஐ. ஆர். என். எஸ். எஸ். - 1ஜி (IRNSS-1G) என்பது மொத்தம் ஏழு செயற்கைக்கோள்களைக் கொண்ட இந்தியப் பகுதிக்கான இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்பின் ஏழாவது மற்றும் கடைசி செயற்கைக்கோள் ஆகும். இச்செயற்கைக்கோள் 1425 கிலோகிராம் மேலேற்றல் எடை கொண்டது.[1]
ஏவுதல்
[தொகு]ஆந்திர பிரதேச மாநிலத்தில், சென்னைக்கு 80 கி.மீ. (50 மைல்) வடக்கே அமைந்துள்ள ஸ்ரீஹரிக்கோட்டா நகரத்தில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி மையத்தின் முதலாம் ஏவுதளத்திலிருந்து 28 ஏப்ரல் 2016 ஆம் ஆண்டு, இ.சீ.நே. 12:50 மணிக்கு, பி. எஸ். எல். வி. - சி33 ஏவுகலத்தின் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டு வெற்றிகரமாக துணை புவியிணக்க இடமாற்று சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.[2] வரும் நாட்களில், செயற்கைக்கோளிலுள்ள திரவ புவிச்சேய்மைநிலை இயக்கியின் உதவியுடன் புவியிணக்கச் சுற்றுப்பாதைக்கு உயர்த்தப்பட்டு நிலை நிறுத்தப்படும்.[2]
இதையும் பார்க்கவும்
[தொகு]- ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஏ
- ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1பி
- ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1சி
- ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1டி
- ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1இ
- ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1எஃப்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "பி.எஸ்.எல்.வி.-சி33/ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1ஜி - சிற்றேடு" (PDF). இந்திய விண்வெளி ஆய்வு மையம். Archived from the original (PDF) on 2016-04-25. பார்க்கப்பட்ட நாள் 29 ஏப்ரல் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ 2.0 2.1 "பி.எஸ்.எல்.வி.-சி33/ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1ஜி ஏவுதல் வெற்றி". இந்திய விண்வெளி ஆய்வு மையம். Archived from the original on 2016-04-29. பார்க்கப்பட்ட நாள் 29 ஏப்ரல் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)