உள்ளடக்கத்துக்குச் செல்

இசுலாம் சகர்

ஆள்கூறுகள்: 35°33′38″N 51°14′05″E / 35.56056°N 51.23472°E / 35.56056; 51.23472
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எசுலாம்சர்
اسلامشهر
எசுலாம்சர் is located in ஈரான்
எசுலாம்சர்
எசுலாம்சர்
ஆள்கூறுகள்: 35°33′38″N 51°14′05″E / 35.56056°N 51.23472°E / 35.56056; 51.23472
Country ஈரான்
ProvinceTehran
CountyEslamshahr
BakhshCentral
மக்கள்தொகை
 (2016 Census)
 • நகர்ப்புறம்
4,48,129 [1]
நேர வலயம்ஒசநே+3:30 (IRST)
 • கோடை (பசேநே)ஒசநே+4:30 (IRDT)

எசுலாம்சர்(Eslamshahr) என்ற நகரமானது, எசுலாம்சர் 'கவுன்டி' எனப்படும் மாவட்டதின் (EslamshahrCounty) தலைநகரம் ஆகும். இந்த நகரம் ஈரான் நாட்டின் தலைநகரான தெகுரான் நகரில் இருந்து, 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. எசுலாம்சர் கவுன்டி என்பது, ஈரானின் ஆட்சிமுறை சார்ந்த முப்பத்தியொரு மாகாணங்களில் ஒன்றான, தெஹ்ரான் மாகாணத்தில் இருக்கும் கவுன்டிகளில் ஒன்றாகும். 2016 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்த நகரத்தின் மக்கள் தொகை 548,620 நபர்கள் ஆகும். அதன்படி, இதில் 279,282 ஆண்களும், 269,338 பெண்களும் வாழ்ந்து வருகின்றனர். இந்த நகரம் அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணமல்லாத தலைநகரமாகவும், ஈரான் நாட்டின் 19 வது ஒட்டுமொத்த மக்கள்தொகை கொண்ட நகரமாகவும் திகழ்கிறது.

வரலாறு[தொகு]

பஃரமாபாத்தின் பழைய, வரலாற்று பெயர் இப்போது, எசுலாம்சர் நகரின் சிறிய வடக்கு புறநகர்ப் பகுதிகளை பஃரமாபாத் கிராமம் எனக் குறிப்பிட மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

நிலவியல்[தொகு]

தெஹ்ரானின் தெற்கில் தொடங்கும் சவே சாலையில்(Saveh) தொடங்கி, சவே சிட்டியில் முடிவடையும் இடத்தில், இந்த நகரம் அமைந்துள்ளது.

இந்நகரத்தினைச் சுற்றி வவன், கமீஹ், சயீதி, மொஹமதி, மஹ்தீஹ், பாகெனார்ட், சலூர், நூரி, காசமாபாத், அகமதாபாத், கோட்ஸ், பாக்பீஸ், ஜராஃப்ஷன், மூசியாபாத், அன்பியா மற்றும் மியானாபாத் போன்றவை இதன் சுற்றுப்புறங்களாக அமைந்துள்ளன.

காலநிலை[தொகு]

இந்த நகரின் அதிகபட்சமாக பதிவு செய்யப்பட்ட வெப்பநிலை 51 °C (124 °F) , சூலை 10, 1990 இல் பதிவு செய்யப்பட்டது. அதே நேரத்தில் பதிவு செய்யப்பட்ட மிகக் குறைந்த வெப்பநிலை −13 °C (9 °F) , சனவரி 2, 1973 இல் பதிவு செய்யப்பட்டது.[2]

போக்குவரத்து[தொகு]

எசுலாம்சர் நகரில், அதன் கைவினைப்பொருட்களுக்கும், அதன் ஏற்றுக் கொள்ளக்கூடிய நல்ல சுற்றுப்புற வானிலைக்கும் பெயர் பெற்றுத் திகழ்கிறது. அதன் நகர எல்லைக்குள், இமாம் கோமெய்னி பன்னாட்டு விமான நிலையம் அமைந்துள்ளது.

தொடருந்து[தொகு]

உள்ளூர் வழித்தடம் : இந்த பெரிய நகரத்திலிருந்து புறப்படும் இத்தகைய வண்டிகள் அனைத்தும், வழியில் வரும் அனைத்து நிறுத்துங்களிலும் நின்று பயணிகளுக்கு பயண நிறுத்தங்களுடன் இயங்குகின்றன.

மண்டல வழித்தடம் :இத்தகைய வண்டிகள் அனைத்தும், இந்த பெரிய நகரில் இருந்து மற்றொரு பெரிய நகரத்திற்கு, அதாவது இரண்டு முக்கிய மண்டலங்களை இணைக்கும் தொடருந்து வண்டிகளைக் கொண்டு, சில நிறுத்தங்களைத் தவிர, கிட்டத்தட்ட எல்லா நிலையங்களிலும் நின்று தனது பயணிகளுக்கு பயன்படுகிறது.

இன்டர்ரெஜியோ வழித்தடம் : இரண்டு பெரிய முக்கிய நகரங்களின் மையங்களை இணைக்கும் வசதியை, இத்தகைய வண்டிகள் அனைத்தும், வழியில் வரும் அனைத்துப்பெரிய மற்றும் சில சிறிய நிலையங்களில் நின்று செல்லும் பயண வசதியைத் தருகின்றன.

இன்டர்ரெஜியோ-விரைவுவண்டி வழித்தடம் : இத்தகைய வண்டிகள் அனைத்தும், இரண்டு முக்கிய மையங்களை இணைக்கும் தொடருந்து வண்டிகளை இயங்கி, வழியில் வரும் முக்கிய தொடருந்து நிலையங்களில் மட்டும் நின்று பயணிகளுக்கு பயனாகின்றன .

நகரிடை வழித்தடம் : இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட முக்கிய தொடருந்து நடுவங்களுக்கு இடையே இயங்கி, அந்நடுவ மக்களின் பயண வசதியை ஈடு செய்கின்றன. இந்த தொடருந்துஇணைக்கும் சேவைகள், இடையில் நிறுத்தங்கள் இல்லாமல், விரைந்து ஓடி, இரண்டு நகரங்களுக்கு இடையில் மட்டும் செயற்படுகின்றன.

பேருந்து[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. https://www.amar.org.ir/english
  2. "Eslamshahr, Iran". Voodoo Skies. பார்க்கப்பட்ட நாள் 30 August 2013.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுலாம்_சகர்&oldid=3630563" இலிருந்து மீள்விக்கப்பட்டது