இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம்
மூன்றாம் வில்லியம் William III | |
---|---|
சர் காட்ஃபிரி நெல்லர் வரைந்தது | |
இங்கிலாந்து, அயர்லாந்து மன்னர் | |
ஆட்சிக்காலம் | 13 பெப்ரவரி 1689 – 8 மார்ச் 1702 |
முடிசூட்டுதல் | 11 ஏப்ரல் 1689 |
முன்னையவர் | இரண்டாம், ஏழாம் யேம்சு |
பின்னையவர் | ஆன் |
இணை-அரசி | மேரி II |
இசுக்கொட்லாந்து மன்னர் | |
ஆட்சிக்காலம் | 11 ஏப்ரல் 1689 – 8 மார்ச் 1702 |
முன்னையவர் | இரண்டாம், ஏழாம் யேம்சு |
பின்னையவர் | ஆன் |
இணை-அரசி | மேரி II |
நெதர்லாந்து மன்னர் | |
ஆட்சிக்காலம் | 4 சூலை 1672 – 8 மார்ச் 1702 |
முன்னையவர் | வில்லியம் II |
பின்னையவர் | வில்லியம் IV |
ஒரேஞ்சு இளவரசர் | |
ஆட்சிக்காலம் | 4 நவம்பர் 1650 – 8 மார்ச் 1702 |
முன்னையவர் | வில்லியம் II |
பின்னையவர் | யோன் வில்லியம் பிரிசோ |
பிறப்பு | டென் ஹாக் | 4 நவம்பர் 1650
இறப்பு | 8 மார்ச்சு 1702 கென்சிங்டன் அரண்மனை, இலண்டன் | (அகவை 51)
புதைத்த இடம் | வெஸ்ட்மின்ஸ்டர் மடம், இலண்டன் |
மனைவி | இங்கிலாந்தின் இரண்டாம் மேரி (தி. 1677) |
மரபு | ஒரேஞ்சு-நசாவு மாளிகை |
தந்தை | இரண்டாம் வில்லியம் |
தாய் | மேரி |
மதம் | கால்வினியம் |
கையொப்பம் |
இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம் (William III, டச்சு: Willem III, 4 நவம்பர் 1650 – 8 மார்ச் 1702) என்பவர் பிறப்பிலேயே ஆரஞ்சு இளவரசனாகப் பிறந்தவரும் 1672 ஆம் ஆண்டிலிருந்து இடச்சுக் குடியரசின் ஒல்லாந்து, சீலாந்து, யுச்சிரெச்ட், கெல்டர்லாந்து, ஒவர்ஜ்ஜிசெல் ஆகிய பிரதேசங்களின் ஆட்சியாளராகவும் 1689 ஆம் ஆண்டிலிருந்து இறப்புவரை இங்கிலாந்து, அயர்லாந்து, இசுக்கொட்லாந்து ஆகியவற்றின் மன்னனாகவும் இருந்தவராவார். இசுக்கொட்லாந்தின் மன்னாக இவர் இரண்டாம் வில்லியம் என அறியப்படுகின்றார்.[1] முறைசாரா வண்ணமாகவும் அன்போடும் இம்மன்னன் வட அயர்லாந்து மக்களாலும் இசுக்கொட்லாந்து மக்களாலும் பில்லி மன்னன் என அழைக்கப்பட்டார்.[2]
இம்மன்னையும் இவரது மனைவியும் இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சின் மகளுமான இங்கிலாந்தின் இரண்டாம் மேரியையும் ஆட்சியில் அமர்த்துவதை நோக்கமாகக் கொண்டே 1688 ஆம் ஆண்டில் மாண்புமிகு புரட்சி மேற்கொள்ளப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Act of Union 1707, the Revolution in Scotland". UK Parliament. Archived from the original on 15 June 2008. பார்க்கப்பட்ட நாள் 8 August 2008.
- ↑ Peter Burke (1997). Varieties of Cultural History. Cornell University Press. p. 51. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8014-8492-8.