ஆ. ஏழுமலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆ. ஏழுமலை (A Elumalai) என்பவர் (ஆகஸ்ட் 12, 2020 இல் இறந்தார்) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் புதுச்சேரி மக்கள் காங்கிரசு கட்சியினைச் சார்ந்தவர். ஏழுமலை புதுச்சேரி பங்காரப்பேட்டையைச் சேர்ந்தவர். வில்லியனூர் அரசு மேல் நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வியினை முடித்தவர். இவர் 2001 முதல் 2011 வரை புதுச்சேரி சட்டப் பேரவையில் ஊசுடு தொகுதி உறுப்பினராக இருந்தார். இவர் 2001 ந. ரங்கசாமி அமைச்சரைவில் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பணியாற்றினார். அரசியல் காரணங்களால் அமைச்சர் பதவியிலிருந்து விலகிய ஏழுமலை, கண்ணன் துவக்கிய புதுச்சேரி முன்னேற்றக் காங்கிரசில் இணைந்தார். 2006ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார். பின்னர் தனது ஆதரவினை காங்கிரசு கட்சிக்கு வழங்கினார். இருப்பினும் 2011 தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். ஏழுமலை தனது 55 வயதில் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாகப் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இறந்தார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Former Puducherry local administration minister Elumalai dies of COVID-19 at JIPMER". The New Indian Express.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆ._ஏழுமலை&oldid=3201590" இலிருந்து மீள்விக்கப்பட்டது