உள்ளடக்கத்துக்குச் செல்

ஆஸ்திரேலியாவின் புவியியல்

ஆள்கூறுகள்: 27°S 144°E / 27°S 144°E / -27; 144
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆஸ்திரேலியாவின் புவியியல்
பகுதிஓசியானியா
ஆள்கூறுகள்27°00′00″S 144°00′00″E / 27.000°S 144.000°E / -27.000; 144.000
பரப்பளவுதரவரிசை 6வது
 • மொத்தம்7,686,850 km2 (2,967,910 sq mi)
 • நிலம்99%
 • நீர்1%
கரையோரம்59,681 km (37,084 mi)
எல்லைகள்பசிபிக் பெருங்கடல் சூழ்ந்த நாடு
அதியுயர் புள்ளிகொஸ்கியஸ்கோ மலை
2,228 m (7,310 அடி)
தாழ் புள்ளிஅயர் ஏரி
−15 m (−49 அடி)
மிக நீண்ட ஆறுமுர்ரே ஆறு,
2,375 km (1,476 mi)
பெரிய ஆறுஅயர் ஏரி
9,500 km2 (3,668 sq mi)
காலநிலைபெரும்பாலும் பாலைவனம் மற்றும் பகுதி வறண்டப் பாலைவனப் பகுதிகள். தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு பகுதிகள்:வெப்பக் காலநிலை, வடக்கு:வெப்பமண்டல காலநிலை, வெப்பமண்டல மழைக்காடுகள், புல்வெளிகள், பகுதி பாலைவனம். மலைப் பகுதிகள்: துணை தூந்திரப் பிரதேசம்
Terrainபெரும்பாலும் பாலைவனங்கள், மலைத்தொடர்கள் மற்றும் தென்கிழக்கில் வளமான சமவெளி கொண்ட தாழ் பீடபூமிகள்
இயற்கை வளங்கள்கனிமங்கள், நிலக்கரி மற்றும் காடுகள்
இயற்கைப் பேரழிவுகள்வடக்கு கடற்கரைகளில் சூறாவளிகள், கடுமையான இடியுடன் கூடிய மழை, வறட்சி, அவ்வப்போது வெள்ளம், வெப்ப அலைகள் மற்றும் அடிக்கடி காட்டுத்தீ

ஆஸ்திரேலியாவின் புவியியல் (Geography of Australia) ஆஸ்திரேலியா கண்டம் உலகின் ஏழு கண்டங்களில் ஒன்றாகும். ஓசியானியாவின் தென் பசிபிக் கடலில் அமைந்த உலகின் சிறிய கண்டமான ஆஸ்திரேலியா கண்டத்தில் அமைந்த தீவு நாடான ஆஸ்திரேலியா ஆறு வகையான உயிர்ப்புவியியல் பிரதேசங்களைக் கொண்டுள்ளது. ஆஸ்திரேலியா உலகின் ஆறாவது பெரிய நாடாக உள்ளது. ஆஸ்திரேலியாவின் கிழக்கு மற்றும் தென்கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் மக்கள் தொகை அடர்த்தியாக உள்ளது. ஆஸ்திரேலியா கண்டத்தின் புவியியல் மிகவும் மாறுபட்டது, ஆஸ்திரேலிய ஆல்ப்ஸ் மற்றும் டாஸ்மேனியாவின் பனி மூடிய மலைகள் முதல் பெரிய பாலைவனங்கள், வெப்பமண்டல மற்றும் மிதமான காடுகள், புல்வெளிகள், தரிசு நிலங்கள் மற்றும் வனப்பகுதிகள் கொண்டது.

ஆஸ்திரேலியா நிலப்பகுதிக்கு மேற்கில் இந்தோனேசியா, கிழக்கு திமோர் மற்றும் வடக்கில் பப்புவா நியூ கினியா, சாலமன் தீவுகள், வனுவாட்டும், கிழக்கில் நியூ கலிடோனியா, தென்கிழக்கில் நியூசிலாந்து அமைந்துள்ளது.

இயற்பியல் புவியியல்

[தொகு]
ஆஸ்திரேலியா வரைபடம்
தென் பசிபிக் கடலில், அண்டார்டிகாவின் வடக்கில் ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவின் தட்ப வெப்ப வரைபடம்

ஆஸ்திரேலியா, இந்தியப் பெருங்கடல் மற்றும் தென் பசிபிக் பெருங்கடலுக்கு இடையில் ஓசியானியாவில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும். இது 7,686,850 சகிமீ (2,967,910 சதுர மைல்) பரப்பளவு கொண்ட உலகின் ஆறாவது பெரிய நாடாகும். இது அமெரிக்காவின் 48 மாநிலங்களை விட சற்று சிறியதாகும் மற்றும் ஐக்கிய இராச்சியத்தை விட 31.5 மடங்கு பெரியதாகும். ஆஸ்திரேலியாவின் மொத்த கடற்கரை நீளம் 35,821 கிமீ (22,258 மைல்) ஆகும் மேலும் அதன் தீவுக்கூட்டங்களின் கடற்கரை நீளம் 23,860 கிமீ (14,830 மைல்) ஆக உள்ளது.[1] நாடு முழுவதும் 758 கழிமுகங்கள், வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல மண்டலங்களில் அமைந்துள்ளன. [2] சமீபத்திய உலகளாவிய ரிமோட் சென்சிங் பகுப்பாய்வு ஆஸ்திரேலியாவில் 8,866 சகிமீ பரப்பளவிற்கு அலை தட்டையான பகுதி கொண்டுள்ளது.[3]

ஆஸ்திரேலியா 8,148,250 சகிமீ (3,146,060 சதுர மைல்) பரப்பளவிற்கு 3 வது மிகப்பெரிய பிரத்தியேக பொருளாதார மண்டலத்தைக் கொண்டுள்ளது. பூமியில் உள்ள எந்த நாட்டைக் காட்டிலும் ஆஸ்திரேலியா மிகப்பெரிய கடல் எல்லைக்குள் உள்ளது. [4]

ஆஸ்திரேலியாவின் நான்கு புறங்களிலும் பசிபிக் கடல் சூழ்ந்திருப்பதால், அதற்கு நில எல்லைகள் இல்லை. கண்டத்தின் பிரதான நிலப்பகுதியின் வடக்குப் பகுதிகள் குயின்ஸ்லாந்தின் கேப் யார்க் தீபகற்பம், வடக்கு பிரதேசத்தின் மேல் முனை ஆகும். நாட்டின் வடக்குப் பகுதி டோரஸ் ஜலசந்தி தீவுகளில் உள்ளது. ஆஸ்திரேலியாவின் மேற்குப் பகுதியானது மேற்குப் பீடபூமியைக் கொண்டுள்ளது, இது மேற்கு கடற்கரைக்கு அருகில் மலை உயரத்திற்கு உயர்ந்து கண்டத்தின் மையத்திற்கு அருகில் குறைந்த உயரத்தில் அமைகிறது. ஹேமர்ஸ்லி மலைத்தொடர், மேக்டொனெல் மலைத்தொடர்கள் மற்றும் மஸ்கிரேவ் மலைத்தொடர் போன்ற பல்வேறு மலைத்தொடர்களால் மேற்கு பீடபூமி உடைக்கப்பட்டிருந்தாலும், பொதுவாக தட்டையானது. மேற்கு பீடபூமியில் மேற்பரப்பு நீர் பொதுவாக குறைவாக உள்ளது. இருப்பினும் மேற்கு மற்றும் வடக்கில் மர்சிசன், ஆஸ்பர்டன் மற்றும் விக்டோரியா ஆறுகள் பாய்கிறது. கிழக்கு மேட்டு நிலம் ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரைக்கு அருகில் உள்ளது. கிழக்கு ஆஸ்திரேலியாவின் காடுகளால் அதிக மழைப்பொழிவு, மிகுதியான மற்றும் மாறுபட்ட தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் மற்றும் அடர்த்தியான மனிதக் குடியிருப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. கிழக்கு மலைப்பகுதிகளுக்கும் மேற்கு பீடபூமிக்கும் இடையில் மத்திய தாழ்நிலங்கள் உள்ளன, அவை கிரேட் ஆர்டீசியன் பேசின் மற்றும் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நதி அமைப்புகளான முர்ரே-டார்லிங் வடிநிலம் மற்றும் அயர் ஏரி வடிநிலம் கொண்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையில் உலகின் மிகப்பெரிய பெருந் தடுப்புப் பவளத்திட்டு வளாகம் உள்ளது. பெரிய மற்றும் மலைத்தொடரான டாஸ்மேனியா, ஆஸ்திரேலியாவின் மாநிலமும், ஆஸ்திரேலிய நிலப்பகுதியின் தென்கிழக்கு மூலையில் தெற்கே உள்ளது. இது பெருமளவிலான மழையைப் பெறுகிறது. மேலும் இதன் நிலப்பரப்பு அதிக வளமான மண்ணைக் கொண்டுள்ளது

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Border Lengths – States and Territories". Geoscience Australia. Commonwealth of Australia. 2004. பார்க்கப்பட்ட நாள் 18 August 2016.
  2. Dennison, William C.; Eva G. Abal (1999). Moreton Bay Study: A Scientific Basis for the Healthy Waterways Campaign. Brisbane: South East Queensland Regional Water Quality Management Strategy Team. p. 220. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9586368-1-8.
  3. Murray, N.J.; Phinn, S.R.; DeWitt, M.; Ferrari, R.; Johnston, R.; Lyons, M.B.; Clinton, N.; Thau, D. et al. (2019). "The global distribution and trajectory of tidal flats". Nature 565: 222-225. doi:10.1038/s41586-018-0805-8. https://www.nature.com/articles/s41586-018-0805-8. 
  4. Non-Fisheries Uses in Australia's Marine Jurisdiction National Marine Atlas. Department of the Environment, Water, Heritage and the Arts