முர்ரே ஆறு
முர்ரே ஆறு | |
ஆறு | |
முர்ரே பிரிட்ஜ் நகரில் முர்ரே ஆற்றின் காட்சி
| |
நாடு | ஆத்திரேலியா |
---|---|
மாநிலங்கள் | நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா, தெற்கு ஆஸ்திரேலியா |
கிளையாறுகள் | |
- இடம் | மிட்டா மிட்டா ஆறு, கீவா ஆறு, ஓவென்சு ஆறு, கௌல்பர்ன் ஆறு, கேம்பசுப்சே ஆறு, லோட்டான் ஆறு |
- வலம் | இசுவாம்ப்பி சமவெளி ஆறு, முர்ரம்பிரிட்ஜ் ஆறு, டார்லிங் ஆறு |
நகரங்கள் | ஆல்பரி, வொடொங்கா, எச்சுக்கா, சுவான் இல், மில்துரா, ரென்மார்க்கு, முர்ரே பிரிட்ஜ் |
உற்பத்தியாகும் இடம் | கோவொம்பட் பிளாட் |
- அமைவிடம் | ஆத்திரேலிய ஆல்ப்சு, NSW, Vic |
- உயர்வு | 1,430 மீ (4,692 அடி) |
கழிமுகம் | முர்ரே மவுத் |
- அமைவிடம் | தெற்கு ஆத்திரேலியாவின் கூல்வா, தெற்கு ஆஸ்திரேலியா |
- elevation | 0 மீ (0 அடி) |
நீளம் | 2,508 கிமீ (1,558 மைல்) |
வடிநிலம் | 10,61,469 கிமீ² (4,09,835 ச.மைல்) |
Discharge | |
- சராசரி | |
முர்ரே ஆறு செல்லும் பாதையைக் குறிக்கும் நிலப்படம்
| |
விக்கிமீடியா பொது: முர்ரே ஆறு | |
முர்ரே ஆறு (Murray River அல்லது River Murray) ஆத்திரேலியாவின் நீளமான ஆறு ஆகும். இதன் நீளம் 2,508 கிலோமீட்டர்கள் (1,558 mi).[1] முர்ரே ஆறு ஆத்திரேலிய ஆல்ப்சு மலைகளில் உருவாகி ஆத்திரேலியாவின் மிக உயர்ந்த மலைகளின் மேற்குப் பகுதிகளின் வழியாக கீழிறங்கி ஆத்திரேலியாவின் உட்புறச் சமவெளியில் ஓடுகின்றது. இந்த ஆறே தெற்கு ஆஸ்திரேலியா வின் வடமேற்கில் செல்கையில் மாநிலங்களான நியூ சவுத் வேல்சிற்கும் விக்டோரியாவிற்கும் இடையேயான எல்லைக்கோட்டை தீர்மானிக்கின்றது. தனது பாதையின் இறுதியில் மோர்கனில் தெற்கு நோக்கித் திரும்பி 315 கிலோமீட்டர்கள் (196 mi) தொலைவில் உள்ள பெருங்கடலை அலெக்சாண்டிரினா ஏரி வழியாக அடைகின்றது.
முர்ரே ஆற்றின் நீர் பல உவர்ப்பான ஏரிகளின் வழியே செல்கிறது; அலெக்சாண்டிரினா ஏரி, கூரொங் தேசியப் பூங்காவிலுள்ள கூரொங் ஏரிக்களின் வழியே முர்ரே மவுத் எனப்படும் கழிமுகத்தில் இந்தியப் பெருங்கடலின் தென்கிழக்குப் பகுதியில் சேர்கிறது. ஆனால் ஆத்திரேலிய நிலப்படங்களில் இது கூல்வா எனுமிடத்தில் தென்முனைப் பெருங்கடலில் சேர்வதாகக் குறிப்பிடப்படுகின்றன.[2] பெரும்பான்மையான நேரமும் பெருமளவில் நீரைத் தாங்கிச் சென்றபோதும் முர்ரே கழிமுகம் ஒப்பீட்டளவில் சிறியதும் ஆழம் குறைந்ததுமாகும். 2010 நிலவரப்படி, முர்ரே ஆற்றுக்கு 58% இயற்கையான நீர்பெருக்கு உள்ளது.[3] ஆத்திரேலியாவின் மிக முதன்மையான பாசனப் பகுதிகளில் இது ஒன்றாகும். எனவே இது நாட்டின் உணவுக் களஞ்சியமாக பரவலாக அறியப்படுகின்றது.
புவியியல்
[தொகு]முர்ரே ஆறு 3,750 km (2,330 mi) நீளமான முர்ரே–டார்லிங் ஆற்று கூட்டமைப்பின் அங்கமாகும். இந்த ஆற்றுக் கூட்டமைப்பு விக்டோரியா, நியூ சவுத் வேல்ஸ், தெற்கு குயின்ஸ்லாந்து நிலப்பகுதிகளுக்கு பாசனமளிக்கிறது. மொத்தமாக இதன் வளப்பகுதி ஆத்திரேலியாவின் மொத்த நிலப்பகுதியில் ஏழில் ஒரு பங்காகும். உலகின் மற்ற பகுதிகளில் இதே அளவுள்ள ஆறுகளிலுள்ள நீருடன் ஒப்பிட்டால் முர்ரே ஆறு மிகக்குறைந்த பின்னத்தையே தாங்கிச் செல்கின்றது. ஆண்டின் பல காலங்களில் செல்லும் நீரின் அளவும் மிகவும் வேறுபடுகின்றது. மிகுந்த வறண்ட காலங்களில் முற்றிலும் நீரின்றி இருக்கலாம். ஆனால் இது மிக அரிதான நிகழ்வாகவே உள்ளது; ஆவணப்படுத்தப்பட்ட காலத்தில் இரண்டொருமுறையே முர்ரே ஆறு முற்றிலுமாக வறண்டுள்ளது.
முர்ரே ஆறு விக்டோரியா, நியூ சவுத் வேல்ஸ் இடையேயான எல்லைகளை வரையறுக்கிறது. அவ்வாறான எல்லைகளில் ஆற்றின் மேற்புரமுள்ள கரையே விக்டோரியாவின் எல்லையாகும். அதாவது ஆறு விக்டோரியாவிற்குள் வருவதில்லை.[4] இதனை 1980இல் ஆஸ்திரேலிய உச்சநீதிமன்றம் முடிவு செய்து விதி செய்தது; விக்டோரியா ஆற்றங்கரையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தவர் இறந்தபோது எந்த மாநிலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வழக்கில் இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டது.[5] இந்த எல்லை வரையறை குழப்பம் விளைவிக்கக்கூடியது; காலப்போக்கில் ஆறு தனது செல்கையை மாற்றிக்கொள்ளலாம், ஆற்றங்கரைகள் மாறுதல் அடையலாம்.
நிலநிரைக்கோடு 141°E க்கு மேற்கே, ஆறு விக்டோரியாவிற்கும் தெற்கு ஆத்திரேலியாவிற்கும் இடையே எல்லைக்கோடாக ஏறத்தாழ 11 km (6.8 mi) நீளத்திற்கு தொடர்கிறது. இப்பகுதியில் எல்லைக்கோடு ஆற்றின் நடுவில் வரையறுக்கப்பட்டுள்ளது.[6] 1840களில் ஏற்பட்ட ஓர் கணிதப் பிழையால் இவ்வாறானது. இதன்பிறகு முர்ரே ஆறு முழுமையாக தெற்கு ஆஸ்திரேலியாவிற்குள் செல்கிறது.
ஆற்றுவழி முதன்மை நகரங்கள்
[தொகு]முர்ரே ஆற்றுவழியே பின்வரும் முதன்மை குடியிருப்புகள் அமைந்துள்ளன. கொடுக்கப்பட்டுள்ள மக்கள்தொகை 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படியானவை.[7]
நகரம் | மக்கள்தொகை |
---|---|
ஆல்பரி/வொடொங்கா | 82,083 |
முல்வாலா/யர்ரவொங்கா | 9,000 |
மோவமா/எச்சுக்கா | 16,000 |
இசுவான் இல் | 9,700 |
மில்துரா | 31,361 |
ரென்மார்க் | 8,000 |
முர்ரே பிரிட்ஜ் | 20,500 |
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ "(Australia's) Longest Rivers". Geoscience Australia. 10 December 2013. பார்க்கப்பட்ட நாள் 10 December 2013.
- ↑ "The Murray Mouth". Murray-Darling Basin Commission. Archived from the original on 29 August 2007. பார்க்கப்பட்ட நாள் 20 September 2007.
- ↑ "Guide to the Proposed Basin Plan, Murray Darling Basin Authority 2010". Archived from the original on 2011-09-13. பார்க்கப்பட்ட நாள் 2018-05-19.
- ↑ "New South Wales Land and Property Information/Victoria Natural Resources and Environment" (1993), Guidelines for the Determination of the State Border between New South Wales and Victoria along the Murray River (PDF), archived from the original (PDF) on 26 செப்டெம்பர் 2013
- ↑ Ward v R (1980) 142 CLR 308. Retrieved 6 April 2018
- ↑ "(Australia's) Longest river by State and Territory". Geoscience Australiaதி. பார்க்கப்பட்ட நாள் 11 April 2016.
- ↑ வார்ப்புரு:Census 2011 AUS
வெளி இணைப்புகள்
[தொகு]- "Murray River catchment (NSW)" (map). Office of Environment and Heritage. Government of New South Wales.
- "Fire, Flood and Acid Mud" (video). Catalyst. The Murray Darling Crisis. Australia: ABC TV. பார்க்கப்பட்ட நாள் 28 May 2013.
- Murray-Darling Basin Commission: The River Murray and Lower Darling
- River pilot maps 1880–1918 / Echuca Historical Society
- Down the River Murray An Australian Broadcasting Corporation Radio National 5-part series on the river and its people
- Murray Region Tourist Information - VisitNSW