ஆளூர் ஷா நவாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஆளுர் ஷாநவாஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Aloor Shanavas
ஆளூர் ஷா நவாஸ்
பிரதி பொது செயலாளர், வி.சி.சி கட்சி
தனிநபர் தகவல்
பிறப்பு ஆளூர்
தேசியம் இந்தியன்
அரசியல் கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி
படித்த கல்வி நிறுவனங்கள் டிப்ளமோ இன் இன் ஜர்னலிசம் (இதழியல்)
பணி அரசியல்வாதி

ஆளூர் ஷா நவாஸ் என்று அழைக்கப்படும் ஜே. முகமது ஷா நவாஸ், இந்தியாவின, தமிழ்நாட்டின் ஒரு அரசியல்வாதி ஆவார்.[1][2] அவர் ஒரு எழுத்தாளர், செயற்பாட்டாளர் ஆவரார். தற்போது அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைச் செயலாளர்  பதவியை வகித்து வருகிறார்.[3] தமிழ்நாட்டின் அரசியலில் உள்ள முக்கிய இளைஞர்களில் ஒருவராக கருதப்பட்ட இவர் 30 வயதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொது செயலாளர் பதவிக்கு உயர்ந்தார்.[4]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

ஆளூர் ஷா நவாஸ்இவர் தமிழ்நாடு, கன்னியாகுமரி மாவட்டம் ஆளுர் கிராமத்தில் 21-4-1982 அன்று பிறந்தார். உணர்வுஒற்றுமை, மக்கள் உரிமை ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றியுள்ளார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

மாணவ பருவத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகத்தில் தனது பொதுவாழ்க்கையைத் தொடங்கிய இவர் பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்து திறமை காரணமாக அவர் முக்கியத்துவம் அடைந்தார், மற்றும் கட்சியின் முக்கிய முகமாக ஆனார். அவர் தாழ்த்தப்பட்ட வகுப்புகள் மற்றும் சிறுபான்மையினரின் மேம்பாட்டிற்காக பணியாற்றுகிறார். அவர் பெரியார், காயிதே மில்லத், பி. ஆர். அம்பேத்கர் ஆகியோரின் வலுவான ஆதரவாளர் ஆவார். மலேசியா, குவைத், யு.ஏ.இ. போன்ற பல்வேறு நாடுகளிலிருந்து மக்கள் ஆதரவை அவர் சேகரித்தார்.[5] பின்னர் தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் 2016 ஆம் ஆண்டு அவர் கட்சியின் இளைஞர் முகமாக ஆனார், குன்னம் தொகுதியில் போட்டியிட்டார்.[6] பல்வேறு சமூக சமுதாயங்களிலிருந்தும், தன்னார்வ அமைப்புகளிடமிருந்தும் அவரது சமூகப் பணிக்காக பல்வேறு விருதுகளை அவர் பெற்றுள்ளார். குவைத் தமிழ் இஸ்லாமிய கமிட்டி, குவைத் வி.சி.சி. இல் இளம் எழுத்தாளர் விருது, பிலாலியா அராபியக் கல்லூரி, இளம் பிறை விருது ஆகியவற்றில் இருந்து நிஜல் ஃபிலிம், யங் மீடியா ஆர்வலர் விருதுக்கான சிறந்த ஆவணப்பட விருது பெற்றாா் [7]

இவரது படைப்புகள்[தொகு]

  • முசுலிம்களுக்கான தனி இட ஒதுக்கீடு குறித்து இயக்கி வெளியிட்ட பிறப்புரிமை(ஆவணப்படம் 2006)
  • முசுலிம் சிறைவாசிகள் விடுதலை குறித்த ''கைதியின் கதை'' (ஆவணப்படம் 2007)
  • இந்திய முசுலிம்களின் தலைவர் காயிதே மில்லத்தின் வாழ்க்கை வரலாறு குறித்த ஆவணப்படம்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆளூர்_ஷா_நவாஸ்&oldid=2397883" இருந்து மீள்விக்கப்பட்டது