ஆலஞ்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆலஞ்சி
கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கன்னியாகுமரி
அரசு
 • திருச்சபை மதகுருஅருட்தந்தை சூசை அந்தோணி
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்9,000
மொழிகள்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
பின்கோடு
629 159
தொலைபேசிக் குறியீடு91-4651
வாகனப் பதிவுTN 75
இணையதளம்www.alanchi.com

ஆலஞ்சி "(Alanchy)" என்பது கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவிலில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவிலும் கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்திலிருந்து சுமார் 45 கி.மீ. தூரத்திலும் உள்ளது. "ஆலன்" என்ற பெயர் "ஆலு" (ஆல மரம்) மற்றும் "அஞ்சி" (ஐந்து) ஆகியவற்றிலிருந்து பெறப்பட்டது. இந்த பகுதி முழுவதும் ஆலஞ்சி தரவாடு குடும்பத்தினருக்குச் சொந்தமானது. ஆகவே இப்பெயர் வழங்கப்பட்டுள்ளது. வடகிழக்கு (மிடாலம்), தென்மேற்கு (குறும்பனை) கடற்கரையோர ஊர்கள் அருகில் உள்ளன. ஆலஞ்சி மக்களில் பெரும்பாலானவர்கள் நாடார்கள். அவர்களில் 99% ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்.

வரலாறு[தொகு]

கிறித்தவம், 1540 களில் புனித பிரான்சிசு சேவியர் காலத்தில் ஆலஞ்சியில் காலூன்றியது. ஆலஞ்சி மக்களில் பெரும்பாலானவர்கள் நாடார்கள். அவர்களில் 99% ரோமன் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள். ஆலஞ்சியில் உள்ள கத்தோலிக்க மாதா கோவில் 180 ஆண்டு அகவை உடையது. முதல் தேவாலயத்தரேசு பாதிரியர்களான மேதகு பிரியர் எலியாசும் பிரியர் மார்ட்டினும் நிறுவியுள்ளனர். அண்மைய தேவாலயம் மூன்றாவதாகும். ஆலஞ்சி மக்கள் அண்மையில் கோவிலில் உள்ள கற்சிலுவையை பிரான்சிசு சேவியர் நிறுவியதாக நம்புகின்றனர். இவ்வூரில் ஓர் ஆங்கிலப் பள்ளியும் உள்ளது.

1950 களின் தொடக்கத்தில், மேதகு பிரியர் சி. எம். கில்லாரி இன்றைய ஆலஞ்சி மாதா கோவிலுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். இவர் சிறார்க் கல்விக்கு ஊக்கம் அளித்து, ஒரு பள்ளிக்கூடத்தையும் நிறுவியுள்ளார்.

இந்தியா பாக்கித்தான் பிரிவினையின்போது ஆலஞ்சி ஓர் ஏழ்மைய்யான ஊராக விளங்கியது. சில வீடுகளே இருந்துள்ளன. பிறர் குடிசைகளில் வாழ்ந்துவந்துள்ளனர். முதன்மைத் தொழில் பனையேறுதலாகவே இருந்துள்ளது. பனஞ்சாறும் அதன் வெல்லமும் விற்கப்பட்டுள்ளன. நாளடைவில் ஆலஞ்சி மக்கள் நடுவண் கிழக்குப் பொருளாதார நாடுகளில் வேலையில் சேர்ந்தனர். ஓமன், பகுரைன், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், சவுதி அரேபியா, கத்தார் ஆகிய நாடுகளில் வேலை செய்ய சென்றனர். 1990 களில் ஆலஞ்சி முழுமையான வளர்ந்த ஊராகி விட்டது.

புவியியல்[தொகு]

கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவிலில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவும், கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரிலிருந்து சுமார் 45 கி.மீ தூரத்திலும் ஆலஞ்சி உள்ளது.

ஆலஞ்சி கடற்கரையில் இருந்தகொரு கிமீ (0.5 மைல்) உள்ளது.

மக்கள்தொகையியல்[தொகு]

ஆலஞ்சியின் முதன்மை மதமாக கிறித்தவம் அமைந்துள்ளது. ஆலஞ்சி மக்களில் பெரும்பாலானவர்கள் நாடார்கள். அவர்களில் 99% ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள். இங்கு சில இந்து, முசுலீம் குடும்பங்களும் உள்ளன.

இந்த ஊரின் அலுவல் மொழி தமிழ். இங்கு குடியிருப்போர் அனவரும் தமிழே பேசுகின்றனர். சில வேளைகளில் மலையாளமும் பேசுகின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலஞ்சி&oldid=3867496" இலிருந்து மீள்விக்கப்பட்டது