ஆற்றல் காப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆற்றல் காப்பு (Conservation of energy) இயற்பியலில் ஆற்றல் காப்பு விதியின்படி, தனியான தொகுதியொன்றின் மொத்த ஆற்றல் மாறிலி என்பதுடன் அதன் வடிவங்களை மாற்றலாமேயன்றி ஆற்றலைப் புதிதாக உருவாக்க முடியாது. எடுத்துக்காட்டாக உராய்வு இயக்க ஆற்றலை வெப்ப ஆற்றலாக மாற்றுகிறது. வெப்ப இயக்கவியலில், அதன் முதல் விதி, வெப்ப இயக்கவியல் தொகுதிகளில் ஆற்றல் காப்புப் பற்றிய கூற்றாக அமைகின்றது. இது ஆற்றல் காப்புப் பற்றிய முழுமையான நோக்கு ஆகும். சுருக்கமாக ஆற்றல் காப்பு விதி பின்வருமாறு கூறுகின்றது:

  • ஆற்றல் உருவாக்கப்படவோ அழிக்கப்படவோ முடியாதது,
  • அதனை ஒரு வடிவத்தில் இருந்து இன்னொரு வடிவத்துக்கு மாற்றவோ அல்லது ஒரு பொருளிலிருந்து இன்னொரு பொருளுக்கு மாற்றவோ மட்டுமே முடியும்,
  • மொத்த ஆற்றல் அளவு மாறாது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆற்றல்_காப்பு&oldid=1387403" இருந்து மீள்விக்கப்பட்டது