உள்ளடக்கத்துக்குச் செல்

ஆர். பி. கதிராமர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆர். பி. கதிராமர்
இலங்கை நாடாளுமன்றம்
மட்டக்களப்பு
பதவியில்
1952–1956
முன்னையவர்அகமது லெப்பை சின்னலெப்பை
பின்னவர்செல்லையா இராசதுரை
தனிப்பட்ட விவரங்கள்
இறப்பு1963
அரசியல் கட்சிசுயேச்சை, இலங்கைத் தமிழரசுக் கட்சி
தொழில்வழக்கறிஞர்
இனம்இலங்கைத் தமிழர்

ரொபர்ட் புரூசு கதிராமர் (Robert Bruce Kadramer, இறப்பு: 1963) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும் வழக்கறிஞரும் ஆவார்.[1]

அரசியலில்

[தொகு]

கதிராமர் 1947-இல் நடைபெற்ற இலங்கையின் 1-ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு, 2,313 வாக்குகள் பெற்று (மொத்த வாக்குகளில் 17%), ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர், அகமது லெப்பை சின்னலெப்பையிடம் 2,427 வாக்குகளால் தோற்றார்.[2]

1950 செப்டம்பரில் இலங்கைத் தமிழரசுக் கட்சி (சமட்டிக் கட்சி) மட்டக்களப்பில் தமது கட்சிக் கிளையைத் தொடங்கியபோது கதிராமர் அக்கிளையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்[3]

கதிராமர் மீண்டும் 1952 இல் நடைபெற்ற 2-ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு, 11,420 வாக்குகள்(மொத்த வாக்குகளில் 59%) பெற்று அகமது லெப்பையை 3,460 வாக்குகளால் தோற்கடித்து நாடாளுமன்றம் சென்றார்.[4] கதிராமர், ஒரு தமிழராக இருந்தாலும், கிழக்கிலும் வடக்கிலும் உள்ள தமிழர் பகுதிகளுக்கு இடையே புவியியல் தொடர்ச்சி இல்லை என்று வாதிட்டு தனித் தமிழ்நாடு உருவாக்கப்படுவதைப் பகிரங்கமாக கேள்வி எழுப்பினார்.[5][6]

1956-இல், தமிழரசுக் கட்சி மட்டக்களப்பில் முதல் தடவையாகத் தனது கட்சிச் சின்னத்தில் போட்டியிட்ட போது, கதிராமர் மட்டக்களப்பு தமிழ் பேசும் மக்களின் முன்ன்ணி என்ற கட்சியின் சின்னத்தில்,[7] 3-ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு 1,296 வாக்குகள் பெற்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் செல்லையா இராசதுரையிடம் 8,004 வாக்குகளால் தோற்றார்.[8]

கதிராமர் 1963 இல் காலமானார்.[9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Hon. Kadramer, Robert Bruce, M.P." இலங்கை நாடாளுமன்றம். Retrieved 20 June 2018.
  2. "Result of Parliamentary General Election 1947" (PDF). Department of Elections, Sri Lanka. Retrieved 29 June 2018.
  3. "Federalist Party Branch formed at Batticaloa, Colombo". Indian Daily Mail: p. 3. 19 September 1950. 
  4. "Result of Parliamentary General Election 1952" (PDF). Department of Elections, Sri Lanka. Retrieved 29 June 2018.
  5. Welenghama, Gnanapala; Pillay, Nimal (2014). The Rise of Tamil Separatism in Sri Lanka: From Communalism to Secession. Routledge. p. 191. ISBN 9781135119713.
  6. Wilson, A. Jeyaratnam (1988). The Break-up of Sri Lanka: The Sinhalese-Tamil Conflict. C. Hurst & Co. Publishers. p. 85. ISBN 9781850650331.
  7. De Silva, G (1979). A Statistical survey of elections to the legislatures of Sri Lanka, 1911-1977. Colombo: Marga Institute. pp. 133–134.
  8. "Result of Parliamentary General Election 1956" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Retrieved 20 October 2017.
  9. Parliamentary Debates, Volume 50, Issues 1-10. இலங்கை நாடாளுமன்றம், 1947-1972. 1963. பக். 255–258. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._பி._கதிராமர்&oldid=3852687" இலிருந்து மீள்விக்கப்பட்டது