ஆரையூர் மகாதேவர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆரையூர் மகாதேவர் கோயில் இந்தியாவில் கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள ஆரையூரில் உள்ள முக்கிய வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாகும், இது தமிழக எல்லைக்கு மிக அருகில் உள்ளது. இக்கோயில் ஒரு சிவன் கோயில் ஆகும். இங்குள்ள சிவன் ஆரையூரப்பன் என்று அழைக்கப்படுகிறார். இந்த கோவில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு கட்டுப்பாட்டில் உள்ளது.[1]

இங்குரீ கணேஷ், துர்க்கை, முருகன், நந்திகேசன், ஐயப்பன், பூதத்தன், நாகராஜா, யக்சியம்மா ஆகியோருக்கான துணைச்சன்னதிகள் உள்ளன.

திருவிழாக்கள்[தொகு]

ஆரையூர் கோவில் திருவிழா நெய்யாட்டின்கராவட்டத்தில் கொண்டாடப்படுகின்ற பிரமாண்டமான திருவிழாக்களில் ஒன்றாகும். இவ்விழாபொதுவாக பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் கொண்டாடப்படுகிறது. கொடியேற்றத்தில் தொடங்கி ஆறாட்டில் விழா நிறைவடைகிறது.

கோயில் நேரங்கள்[தொகு]

இக்கோயிலின் நடை தினமும் காலை 04:30 முதல் காலை 10:30 வரையும், மாலை 05:30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் வழிபாட்டிற்காகத் திறந்திருக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Arayur Shree Mahadeva Temple – Hindu Temple Timings, History, Location, Deity, shlokas" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-09.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரையூர்_மகாதேவர்_கோயில்&oldid=3889464" இலிருந்து மீள்விக்கப்பட்டது