உள்ளடக்கத்துக்குச் செல்

ஆரக்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆரக்சன்
திரைப்பட வெளியீட்டு சுவரொட்டி
இயக்கம்பிரகாஷ் ஜா
தயாரிப்புபிரகாஷ் ஜா
பிரோசு ஏ. நடியாவாலா
திரைக்கதைஅஞ்சும் ராஜபாலி
பிரகாஷ் ஜா
இசைசங்கர்-இசான்-லாய்
நடிப்புசைஃப் அலி கான்
அமிதாப் பச்சன்
மனோஜ் பாஜ்பாயி
தீபிகா படுகோண்
பிரதீக் பாப்பர்
ஒளிப்பதிவுசச்சின் கிருசன்
படத்தொகுப்புசந்தோஷ் மண்டல்
கலையகம்பிரகாஷ் ஜா புரொடக்சன்ஸ்
விநியோகம்பேசு இன்டஸ்ட்ரீஸ் குரூப்ஸ்
வெளியீடுஆகத்து 12, 2011 (2011-08-12)
ஓட்டம்164 நிமிடங்கள்[1]
நாடுஇந்தியா{{{}}}
மொழிஇந்தி

ஆரக்சன் (Aarakshan, இந்தி: आरक्षण, மொழிபெயர்ப்பு: இட ஒதுக்கீடு) 2011ஆம் ஆண்டு வெளிவந்த இந்தித் திரைப்படம் ஆகும். பிரகாஷ் ஜா இயக்கி தயாரித்துள்ள இந்தப் படத்தில் சைஃப் அலி கானும் தீபிகா படுகோணும் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். முக்கிய வேடமொன்றில் அமிதாப் பச்சன் நடித்துள்ளார். இந்தப் படம் அரசுவேலைகளிலும் கல்வி நிலையங்களிலும் பின்பற்றப்படும் இட ஒதுக்கீட்டை மையமாகக் கொண்டு சமூக அரசியல் நாடகமாக தயாரிக்கப்பட்டுள்ளது. ஜாவின் முந்தைய திரைப்படங்களைப் போன்றே சமூக சிக்கல்களையும் அரசியல் விவகாரங்களையும் அலசுவதாக அமைந்துள்ளது. படப்பிடிப்பின் பெரும்பகுதி போபாலில் உள்ள அப்பர் லேக்கில் எடுக்கப்பட்டுள்ளது.[2] இந்தப் படம் இட ஒதுக்கீட்டை எதிர்ப்பதாக பட வெளியீட்டை தடை செய்ய பல ஆர்பாட்டங்கள் நிகழ்ந்த நிலையில் காவல்துறை பாதுகாப்புடன் ஆகத்து12, 2011 அன்று வெளியானது. பஞ்சாப், உத்தரப் பிரதேசம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் தடை செய்யப்பட்டுள்ளது.[3] இதனை எதிர்த்து பிரகாஷ் ஜா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Title << British Board of Film Classification". British Board of Film Classification. 2011-08-10. பார்க்கப்பட்ட நாள் 2011-08-10.
  2. "Big B in Bhopal". Archived from the original on 2011-07-17. பார்க்கப்பட்ட நாள் 2011-08-13.
  3. எதிர்ப்பை சந்தித்துள்ள 'ஆரக்ஷன்' திரைப்படம் பிபிசி தமிழ் இணையதளத்தில்
  4. அமிதாப் படத்துக்கு எதிராக விடுதலைதச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்[தொடர்பிழந்த இணைப்பு] தட்ஸ்தமிழ் செய்தி இணைய தளத்தில்

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரக்சன்&oldid=3542908" இலிருந்து மீள்விக்கப்பட்டது