உள்ளடக்கத்துக்குச் செல்

பிரகாஷ் ஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரகாஷ் ஜா

பிரகாஷ் ஜா (Prakash Jha, பெப்ரவரி 27, 1952) இந்தியாவின் பீகாரைச் சேர்ந்த ஓர் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் கதாசிரியர் ஆவார். இவரது சமூக, அரசியல் தொடர்புள்ள திரைப்படங்களினால் பரவலாக அறியப்பட்டவர். இவற்றில் தாமுல் (1984), மிருத்யுதண்ட் (1997) மற்றும் கங்காஜல் (2003) ஆகியன குறிப்பிடத்தக்கவை. மேலும் இவரது ஆவணப்படங்களான பேஸ் ஆஃப்டர் ஸ்டார்ம் (1984) மற்றும் சோனால் (2002) ஆகியவை தேசியத் திரைப்பட விருது பெற்றுள்ளன. பிரகாஷ் ஜா புரொடக்சன்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

இவரது திரைப்படம் ஆரக்சன் இட ஒதுக்கீடு கொள்கையை மையப்படுத்தி வன்முறையைத் தூண்டுவதாக பஞ்சாப், உத்திரப் பிரதேசம் மற்றும் ஆந்திர மாநிலங்கள் வெளியிடத் தடை விதித்துள்ளன.

வாழ்க்கை வரலாறு[தொகு]

பிரகாஷ் ஜா பீகாரின் சிகார்பூரின் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். சைனிக் பள்ளியிலும் ராம்ஜி கல்லூரியிலும் துவக்கக் கல்வியைப் பயின்றார். பின்னர் தில்லி பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் படிக்கத் தொடங்கி ஒரு வருடத்திலேயே தனது ஓவியக் கனவுகளை நோக்கி மும்பைக்கு பயணமானார். நுண்கலைப் பள்ளியில் சேர்வதற்கு தயாரானநிலையிலேயே தர்மா என்ற திரைப்படம் உருவாவதை கண்டு திரைப்படத்துறையில் நாட்டம் கொண்டார். 1973ஆம் ஆண்டு புனேயின் இந்தியத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கழகத்தில் (FTII) இணைந்தார்.

திரைப்பட நடிகை தீப்தி நேவலை திருமணம் புரிந்து தற்போது பிரிந்து வாழ்கின்றனர்.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரகாஷ்_ஜா&oldid=3931712" இலிருந்து மீள்விக்கப்பட்டது