உள்ளடக்கத்துக்குச் செல்

ஆயா (பணிப்பெண்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரித்தானிய இந்தியாவில் ஆங்கிலேயரின் குழந்தைகளை பராமரிக்கும் இரண்டு ஆயாக்கள்
சீனக் குழந்தைகளை பராமரிக்கும் ஆயா

அமா அல்லது ஆயா (amah or ayah) (எளிய சீனம்: 阿嬷; மரபுவழிச் சீனம்: பின்யின்: ā mā, போர்த்துக்கேய மொழி: ama, இடாய்ச்சு மொழி: Amme, மத்தியகால லத்தீன்: amma; or ayah, போர்த்துக்கேய மொழி: aia, இலத்தீன்: avia, Tagalog: yaya) ஒரு குடும்பத்தின் சிறு குழந்தைகளுக்கு உணவு ஊட்டுதல், குளிப்பாட்டுதல், விளையாட வைத்தல், தூங்க வைத்தல், துணிகளை சுத்தம் செய்தல் போன்ற பணிகளுடன் வீட்டு வேலைகளை செய்யும் வீட்டுப் பணிப் பெண் ஆவார். கிழக்காசியாப் பகுதிகளில் இவ்வகையான பணிப்பெண்களை அமா என்றும். தெற்காசியாவில் என்பது இப்பணிப்பெண்களை ஆயா என்றும் அழைப்பர்.

அகராதிகளில் ஆயா அல்லது அமா எனும் சொல்

[தொகு]

அமா அல்லது ஆயா என்பதற்கு அகராதிகள் பால் கொடுக்கும் செவிலி, தாதி, வீட்டுப் பணிப்பெண், பாட்டி, ஒரு மரியாதைச் சொல் என்ற பொருட்களில் வழங்குகிறது.

ஆயாக்களின் பங்கு

[தொகு]

பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி மற்றும் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில், பிரித்தானியக் குடும்பத்தினரின் குழந்தைகளை பராமரிக்க இந்தியப் பெண்களை பணிக்கு அமர்த்தினர். இந்த ஆயாக்கள் பிரித்தானியக் குடும்பத்தினருடன் தங்கி பணிபுரிந்தனர்.[1] .[2][3] பத்தொன்பதாம் மற்றும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் ஹாங்காங் நாட்டு பெண்கள், ஆங்கிலேயர்களின் குடும்பக் குழந்தைகளை பராமரிப்பதற்கு ஆயாக்களாக பணியில் அமர்த்தப்பட்டனர். ஆங்காங் நாட்டில் இப்பணிப்பெண்களை யாயா என அழைத்தனர்.[4] மேலும் பிரித்தானியக் குடும்பங்களுடனும், குழந்தைகள் தங்கள் பெற்றோர் இல்லாமல் ஆசியா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு கடல் வழியாக ஆயாக்களுடன் பயணம் செய்தனர்.

இதனையும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Ayahs and Amahs". Ayahs and Amahs (in ஆங்கிலம்). 2020-10-26. பார்க்கப்பட்ட நாள் 2022-05-07.
  2. "Joanna de Silva". www.metmuseum.org. பார்க்கப்பட்ட நாள் 2022-05-07.
  3. "She Travelled: The Portrait of Joanna de Silva, the Indian Ayah at the Metropolitan Museum of Art, New York". Ayahs and Amahs (in ஆங்கிலம்). 2021-11-11. பார்க்கப்பட்ட நாள் 2022-05-07.
  4. Lim, Lisa (2016-11-04). "Where Hong Kong got 'amah', old word for maidservant, from". South China Morning Post. பார்க்கப்பட்ட நாள் 2022-06-06.

மேலும் படிக்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆயா_(பணிப்பெண்)&oldid=3924558" இலிருந்து மீள்விக்கப்பட்டது