ஆயாக்கள் இல்லம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆயாக்கள் இல்லம்
நோக்கம்கைவிடப்பட்ட அல்லது ஆதரவற்ற ஆயாக்களின் இல்லம்
தலைமையகம்
சார்புகள்இலண்டன் நகரத் தொண்டு நிறுவனம்
அக்கேனி ஆயாக்கள் இல்லம், ஆண்டு 1901[1]
நுழைவாயில், ஆயாக்கள் இல்லம் 26 மன்னர் எட்வர்டு சாலை, அக்கேனி இலண்டன், ஆண்டு 1900[2]
இலண்டனில் முன்னர் இருந்த ஆயாக்கள் இல்லம் அமைந்த பகுதிகள்

ஆயாக்கள் இல்லம் (Ayahs' Home), பிரித்தானியப் பேரரசில் காலனி ஆதிக்கத்தில் இருந்த தெற்காசியா, தென்கிழக்காசியா மற்றும் கிழக்காசியா நாடுகளில் வாழ்ந்த ஆங்கிலேயர்களின் குடும்பக் குழந்கைகளை ஆயாக்கள் பராமரித்து வந்தனர். ஆங்கிலேயர்கள் தங்கள் பணி முடிந்து தாய் நாட்டிற்கு குடும்பத்தினருடன் திரும்பிய போது, குழந்தைகளை தொடர்ந்து பராமரிக்க ஆயாக்களை தங்களுடன் கப்பலில் இங்கிலாந்திற்கு அழைத்துச் சென்றனர். பிரித்தானிய குடும்பங்களின் குழந்தைகளை தங்கள் குழந்தைகளாகப் பராமரித்த இந்திய ஆயாக்கள், இந்தியாவிலும், கப்பல் பயணத்திலும், பிரிட்டனிலும் வாழ்வதற்கு பங்களித்தனர்.

இங்கிலாந்து சென்ற பின்னர் ஆங்கிலேயர்கள், தாங்கள் கூட்டிச் சென்ற ஆயாக்களை வேலையிலிருந்து நீக்கியதுடன், ஆயாக்கள் அவரவர் நாட்டிற்குச் செல்ல கப்பல் கட்டணச் சீட்டு அல்லது பணம் வழங்கவில்லை. எனவே தங்கள் எஜமானர்களால் கைவிடப்பட்ட, ஆதரவற்ற ஆயாக்கள் இலண்டன் மாநகரத் தெருக்களில் பிச்சையேந்தி, சாலையோரங்களில் படுத்துக் காலம் தள்ளினர்.[3]

அயாக்களின் இல்லம் துவங்குதல்[தொகு]

கைவிடப்பட்ட ஆயாக்களின் நலனில் கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்கள் அக்கறை கொண்டிருந்தது. இது அயாக்கள் இல்லத்தை நிறுவ வழிவகுத்தது. இது இந்திய அயாக்கள் மற்றும் சீன அமாக்கள் (ஆயாக்களைப் போலவே வேலை செய்தவர்கள்) இருவருக்கும் தங்குமிடத்தை வழங்கியது. கிழக்கு இலண்டனில் உள்ள ஆல்ட்கேட் பகுதியில் 1891ல் ஆயாக்கள் இல்லம் நிறுவப்பட்டது. பின்னர் ஆயாக்கள் இல்லம் 1900ஆம் ஆண்டில் கிழக்கு லண்டனில் உள்ள ஹாக்னியில் உள்ள 26, எட்வர்ட் சாலை, மேர் தெருவுக்கு மாற்றப்பட்டது. 1921ஆம் ஆண்டில் ஆயாக்கள் இல்லம் 4, மன்னர் எட்வர்ட் சாலையில் உள்ள பெரிய வளாகத்திற்கு மாற்றப்பட்டது. புதிய ஆயாக்கள் இல்லத்தில் முப்பது அறைகள் இருந்தது.[4] வெள்ளை பிரித்தானிய குடும்ப முதலாளிகளால் இலண்டனுக்கு அழைத்து வரப்பட்ட ஆயாக்களில், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 100 அயாக்கள் இந்த இல்லத்தில் சில நாட்கள், வாரங்கள் அல்லது மாதங்கள் கூட தங்க வைக்கப்பட்டனர். அலட்சியமான முதலாளிகளால் கைவிடப்பட்ட அல்லது மோசமாக நடத்தப்பட்ட ஆயாக்களுக்கு இந்த இல்லம் அடைக்கலம் அளித்தது.

இந்தியா போன்ற தெற்காசியா, தென்கிழக்காசியா நாடுகளுக்கு கப்பலில் பயணம் செய்யும் ஆங்கிலேயக் குடும்பங்களுடன் இந்த ஆயா இல்லத்தில் தங்கியிருந்த ஆயாக்களை தொண்டு நிறுவனத்தினர் உடன் அனுப்பி வைத்தனர். தங்கள் தாய் நாட்ட்டிற்கு திரும்பும் வரை, ஆயாக்களுக்கு இலண்டன் நகரத்தின் ஆயா இல்லத்தில் தையல் தொழில், கம்பிளி நூலில் சிறு உடைகள் பின்னிதல், சித்திரத்தையல் போன்ற வேலைகள் கற்றுத் தரப்பட்டது.

இதனையும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Sims, George R. (1901) Living London.
  2. London City Mission, 1900.
  3. The Hidden History of the Ayahs of Britain
  4. "The Ayahs' Home | Blue Plaques". English Heritage. பார்க்கப்பட்ட நாள் 2022-06-17.

மேலும் படிக்க[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ayahs' Home
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  • Haskins, Victoria (20 April 2022). "The Ayahs' and Amahs' Home: A History". Ayahs and Amahs (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 18 June 2022.
  • "Ayahs' Home | Making Britain". www.open.ac.uk. Open University. பார்க்கப்பட்ட நாள் 18 June 2022.
  • Chakraborty, Satyasikha (2020). "'Nurses of Our Ocean Highways': The Precarious Metropolitan Lives of Colonial South Asian Ayahs". Journal of Women's History 32 (2): 37–64. doi:10.1353/jowh.2020.0019. 
  • Datta, Arunima (January 2021). "Responses to traveling Indian ayahs in nineteenth and early twentieth century Britain". Journal of Historical Geography 71: 94–103. doi:10.1016/j.jhg.2021.02.001. 
  • Robinson, Olivia (1 October 2018). "Travelling Ayahs of the Nineteenth and Twentieth Centuries: Global Networks and Mobilization of Agency". History Workshop Journal 86: 44–66. doi:10.1093/hwj/dby016. 

Further reading[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆயாக்கள்_இல்லம்&oldid=3924323" இலிருந்து மீள்விக்கப்பட்டது